இந்தியாவின் முதல் பெண் IPS யார்? | First Indian Woman IPS Officer in Tamil
“மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்” என்று பாடியுள்ளார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. ஆனால் மாதவம் புரிந்து பிறந்துள்ள பெண்கள் பலரும் இன்றைய சமூகத்தில் பெரும்பாலும் சமமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுவதில்லை. ஆனாலும் தைரியத்தையும், நம்பிக்கையையும் ஆயுதமாக கொண்ட பெண்கள் இந்திய வரலாற்றில் வியக்க வைக்கும் பல்வேறு செயல்களை புரிந்துள்ளனர். அவர்கள் தொடங்கி வைத்தது தான் இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் கால் பதிக்க உதவி புரிந்துள்ளது. அந்த வகையில் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்திய பெண்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் இந்த பதிவில் இந்தியாவின் முதல் பெண் IPS அதிகாரி யார் மற்றும் அவரை பற்றிய சில குறிப்புகளை பற்றி படித்தறியலாம் வாங்க.
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் யார்?
விடை: கிரண் பேடி என்பவர் தான் இந்தியாவின் முதல் பெண் IPS அதிகாரி.
சிறு குறிப்புகள்:
9 ஜூன் 1949-ம் ஆண்டு கிரண் பேடி பிறந்தார். கிரண் பேடி ஒரு இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், ஓய்வு பெற்ற காவலரும் ஆவார். இவர் இந்தியக் காவல் பணியில் 1972-ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரியாவார். இவர் தில்லி, கோவா (மாநிலம்)கோவா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார். 1971-ஆம் ஆண்டில் ஆசிய பெண்கள் டென்னிசு போட்டியில் வெற்றி பெற்றவர் இவர்.
1993-யில் இவர் தில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்த போது திகார் சிறைகளில் இவராற்றிய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டைப் பெற்றதோடன்றி 1994-ஆம் ஆண்டிற்கான ரமோன் மக்சேசே விருது பெற ஏதுவாய் இருந்தது. 2007-ஆம் ஆண்டு இவர் விருப்பப்பணி ஓய்வு பெற்றார். 2011-யில் நடந்த இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கத்தில் இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தார். மேலும் கிரண் பேடி பாரதிய ஜனதா கட்சியில் ஜனவரி 2015-யில் இணைந்தார்.
2016-ம் ஆண்டு மே 29-யில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்று, 16 பிப்ரவரி 2021 ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார்.
கிரண் பேடி, நலவாழ்வு மற்றும் குற்றத்தடுப்பு காவல் குறித்து 1987-ஆம் ஆண்டு நவ்சோதி என்ற அமைப்பையும் சிறை சீர்திருத்தங்கள், போதை மருந்து தடுப்பு மற்றும் சிறுவர் நலம் குறித்து 1994-ஆம் ஆண்டு இந்தியா விஷன் பவுண்டேசன் என்ற அமைப்பையும் நிறுவியுள்ளார்
கிரண் பேடி எழுதிய ஆங்கில நூல்கள் நான் துணிந்தவள், ஊழலை எதிர்த்து, தலைமையும் ஆளுமையும், இந்திய காவல்துறை, பெண்களுக்கு அதிகாரம், இது எப்பொழுதும் இயலும் மற்றும் புரூம் குரூம் ஆகும்.
இந்தியாவின் முதல் பெண் IAS அதிகாரி யார்? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |