இயற்பியலின் தந்தை யார்? | Iyarpiyalin Thanthai
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இது போன்ற பொது அறிவு சார்ந்த விஷயங்களை நாம் தெரிந்துகொள்வது என்பது. நாம் பொது தேர்வுகளுக்கு சென்று கலந்துகொள்ளும் போது பெரிதும் கைகொடுக்கும். ஆகவே தினமும் ஒரு பொது அறிவு வினா விடைகளை தெரிந்து கொள்ளுங்கள்.. மேலும் பொது அறிவு சார்ந்த வினா விடைகளை தெரிந்து கொள்ள கீழ் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள். சரி வாங்க இயற்பியலின் தந்தை யார்? என்பதை இப்பொழுது நாம் படித்தறியாளம்.
இயற்பியலின் தந்தை யார்?
விடை: நியூட்டன்.
சர். ஐசக் நியூட்டன் அறிமுகம்:
சர். ஐசக் நியூட்டன் இங்கிலாந்து நாட்டு இயற்பியல் வல்லுநர், சிறந்த கணித மேதை யுங்கூட. தம்முடைய ‘புவியீர்ப்பு விதிகள் காரணமாய் உலகளவில் நன்கறியப்பட்டவர்.
இவர் நுண்கணிதத்தை (Calculus)க் கண்டுபிடித்தவர். இவருடைய ‘பிரின்ஸிபியா’ என்கிற கணித நூல் அறிவியல் அறிஞர்களால் வியந்து போற்றப்படுகிற நூலாகும்.
சர். ஐசக் நியூட்டன் பிறப்பு:
நியூட்டன் 1642 டிசம்பர் 25-ஆம் நாள் லிங்கன்ஷைர் (இங்கிலாந்து) என்னுமிடத்தில் பிறந்தார். கணிதத்தில் அபார அறிவுத்திறன் கொண்டவர் இவர். 1665-ல் ட்ரினிட்டி கல்லூரியில் பட்டம் பெற்றார்.
புவியீர்ப்பு, இயந்திர நுட்பம் தொடர்பாய் இவர் செய்த ஆராய்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை.
நியூட்டனின் புவி ஈர்ப்பு விதிகள்
1. எல்லாப் பொருட்களும் ஒன்றோடொன்று ஈர்க்கப் படுகின்றன. அவை ஈர்க்கப்படுகிற வேகம் பொருளின் திண்மைக்குச் சரியான விகிதத்திலும், அவற்றுக்கிடையேயான தூரத்துக்குச் சரியான விகிதத்திலும் இருக்கும்.
2.ஒவ்வொரு வினை(action)யும் அதற்கு எதிரான, அதே அளவிலான எதிர்வினை(reaction)யைக் கொண்டிருக்கும்.
3. அசைவற்ற ஒரு பொருள் அசைவதற்கு வெளியிலிருந்து விசைத்திறம் (force) தேவைப்படும். இவற்றை அறியாத இயற்பியல் மாணவன் இருக்க முடியாது.
தம்முடைய அறிவியல் சார்ந்த, கணிதம் சார்ந்த விளக்கங்களுக்காக நியூட்டன் பல விருதுகளை, கவுர விப்புகளைப் பெற்றிருக்கிறார். அவ்விதம் கவுரவிக்கப் பட்ட முதல் அறிவியல் மேதை அநேகமாய் இவராகத்தான் இருக்கும்.
சர். ஐசக் நியூட்டன் வகித்த பதவிகள்
1667-ல் ட்ரினிட்டி கல்லூரி இயற்பியல் பேராசிரியரானார். அப்போது அவருடைய வயது 27. 1672-ல் ராயல் விஞ்ஞானக் கழகத்தின் உறுப்பினராய் தேர்வு செய்யப்பட்டார்.
1689-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் பிரதிநிதியாய் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டார்.
1703-ல் ராயல் விஞ்ஞானக் கழகத்தின் தலைவரானார். 1705-ல் ராணி ஆன் வழங்கிய கவுரவப் பட்டத்தை ஏற்றார்.
நியூட்டன் கடைசிவரை பிரம்மச்சாரியாகவே இருந்தார். தம்முடைய வாழ்வை அறிவியல் ஆராய்ச்சிக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார்.
1727 மார்ச் 20-ஆம் நாள் காலமான நியூட்டனின் கல்லறையில் இப்படியொரு வாசகம் பொறிக்கப்பட் டிருக்கிறது, ‘விலைமதிக்க முடியாத, மிகச் சிறந்த மனிதகுல மாணிக்கம்’ என்று.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |