உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியவர்

Ulagam Imboothangalal Aanathu

உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர் | Ulagam Imboothangalal Aanathu Endru Kooriyavar

இந்த பூமி மனிதர்களின் வாழ்க்கை நிலையை குறிப்பதாகும். அதிலும் குறிப்பாக மனிதனின் அனுபவம், வரலாறு போன்றவற்றை குறிப்பதாகும். மனிதர்கள்  எப்போதும் இந்த உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறுகின்றனர், ஆனால் முதன் முதலாக உலகம் பஞ்சபூதங்களால் ஆனது என்று கூறியவர் யார் தெரியுமா, வாங்க இந்த பதிவில் உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியவர் யார் என்று தெரிந்து கொள்ளலாம்.

உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியவர்:

விடை: தொல்காப்பியர் உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது என்று கூறியவர்.

தொல்காப்பியர்:

 • தமிழ் இலக்கியங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த நூலான தொல்காப்பியத்தை இயற்றியவர் தான் தொல்காப்பியர். இலக்கணத்துக்கு அடிப்படையாக இருக்கும் நூல் தொல்காப்பியம், இன்றளவும் மக்களின் பயன்பாட்டில் உள்ள நூல்.
 • பழமையான நூலான இந்த நூலை அடிப்படையாக கொண்டுதான் பல நூல்கள் பிற்காலங்களில் தோன்றியது.
 • தொல்காப்பியர் எந்த காலத்தில் வாழ்ந்தவர் என்பதற்கான சான்று இன்றளவும் யாருக்கும் தெரிவதில்லை. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இந்த மாவட்டத்தில் உள்ள காப்புக்காடு என்னும் இடத்தில் தொல்காப்பியருக்கு சிலை நிறுவப்பட்டள்ளது.
 • இவர் திரணதூமாக்கினியார் என்ற இயற்பெயரை உடையவர் என்றும் சமதக்கினி மாமுனிவரின் மகன் என்றும் நச்சினார்க்கினியர் கூறினார். இதற்கு எச்சான்றும் இல்லை.
 • தொல்கப்பியர் பதஞ்சலி முனிவர் காலத்தில் முற்பட்டவர் என்று சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • இவர் தன்னுடைய பாடலில் உலகம் பஞ்சபூதங்களால் ஆனது என்று கூறியுள்ளார். அந்த பாடல் பின்வருமாறு

நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்

உலகம் எவற்றால் ஆனது?

 • உலகம் ஐம்பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகியவற்றால் ஆனது.

ஐம்பூதங்கள் பெயர்கள்:

ஐம்பூதங்கள் என்பவை

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகும்.

ஐம்பூதங்கள் வேறு பெயர்கள்:

 1. வானம்
 2. வாயு
 3. தீ
 4. நீர்
 5. நிலம்

ஆகாயம்:

 • சூரிய கதிர்வீச்சை தடுக்கவும், பூமியின் தட்ப வெப்பநிலையை சமநிலைப்படுத்தவும், மழைபொழியவும் வளிமண்டலம் அவசியம் ஆகும்.

காற்று:

 • நீருக்கு அடுத்து மனிதனின் முக்கிய தேவை காற்று. வாயு இல்லாத சூழலில் சிறு புழு, பூச்சிகள் கூட வாழ முடியாது.

நீர்:

 • மனிதர்களின் அடிப்படை தேவைகளில் மிகவும் முக்கியமான ஒன்று. உணவு இல்லாமல் கூட ஒரு மனிதரால் வாழ முடியும் ஆனால், நீர் அருந்தாமல் எந்த உயிரினத்தாலும் வாழ முடியாது.

நெருப்பு:

 • இதை கண்டுபிடித்த பிறகு தான் மானிடர்கள் உணவை சமைத்து உண்டனர். இதற்கு முன்னர் வெறும் இலை, தழைகளை பச்சையாக உண்டு வாழ்ந்து வந்தனர்.

நிலம்:

 • அனைத்து ஜீவராசிகளும் வாழ்வதற்கான வாழிடமாக திகழ்கிறது. நீர் எனும் பூதத்தில் இருந்து வாசனை எனும் குணத்தில் தோன்றியது தான் நிலம். இப்படி நம்முடைய மனித வாழ்க்கை பஞ்ச பூதங்களோடு பின்னி பிணைந்ததாக உள்ளது.
 • இதனால் தான் தொல்காப்பியர் உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியுள்ளார்.
உலகம் எவற்றால் ஆனது?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil