உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு | World Sugar Bowl Country in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு பகுதியில் உலகின் சர்க்கரை கிண்ணம் எது என்று தெரிந்துக்கொள்ளலாம். பொது அறிவு சமபந்தமான வினா விடைகள் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் ஒவ்வொரு தேர்வாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் எங்களுடைய பொதுநலம் பதிவில் தினமும் பல விதமான பொது அறிவு கேள்வி பதில்களை பதிவிட்டு வருகிறோம். வாங்க இந்த பதிவில் நாம் உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு எது என்று தெரிந்துக்கொள்ளுவோம்..
உலகின் சர்க்கரை கிண்ணம் எது?:
விடை: உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு கியூபா.
கியூபா நாடு:
- கியூபா நாடானது மிகப்பெரிய சர்க்கரை தொழில் கொண்டுள்ள நாடாக இருந்தது. இப்போது இந்த நிலை சிதைந்து வருகிறது.
- இதன் நிலையை இப்போது பிரேசில் எடுத்துக்கொண்டது, இதனைத் தொடர்ந்து அடுத்து இந்தியா இருக்கிறது.
- கியூபா என்ற நாடானது கரீபியன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும்.
- கியூபா நாட்டின் முக்கிய விவசாய பொருளாதாரமாக இருப்பது சர்க்கரை பொருளாதாரம் தான்.
- கியூபா நாடு 1960 ஆம் ஆண்டு வரையிலும் உலகின் மிகப்பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளராக இருந்தது. அதனால் தான் உலகின் சர்க்கரை கிண்ணம் என்று பெயர் வந்தது.
கியூபா நாட்டின் பற்றிய சில ஆச்சர்ய தகவல்:
- கியூபா நாட்டை பற்றி சுமார் 400 தீவுகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த தீவுகளை வானில் இருந்து பார்த்தால் முதலை படுத்திருப்பது போன்று காட்சியளிக்கும்.
- கியூபாவின் கடற்கரை 5700 கிலோ மீட்டர் நீளத்தினை கொண்டுள்ளது. இதனுடைய தலைநகரமாக விளங்குவது ஹவானா நகரமாகும்.
- மனிதர்கள் என்றாலே தும்மல் வருவது சகஜமான ஒன்றாகும். ஆனால் இந்த கியூபா நாட்டில் தும்முவதை தவறாக வைத்திருக்கிறார்கள். ஆம் பொது இடங்களில் அந்த நாட்டில் சட்டப்படி குற்றம். அப்படி தும்முவதாக இருந்தால் தனிப்பட்ட இடத்தில் தான் தும்ம வேண்டும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதால் தான் அங்குள்ள மக்கள் ஆரோக்கியமாய் வாழ்கிறார்கள்.
- உலக நாடுகளிலேயே கொகா கோலாவை விற்பனை செய்ய தடைசெய்யப்பட்ட இரண்டு நாடுகளில் கியூபாவும் ஒன்று.
- உலகிலேயே அதிகமான பொது மக்கள் VINTAGE கார்களை பயன்படுத்தும், அதாவது 1940 களில் அமெரிக்காவில் பயன்படுத்தியது போன்ற கார்களை இன்றும் பயன்படுத்தும் நாடு கியூபாவாகும். ஆனால் அந்த கார் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.
- இதனை வெளிநாட்டவர்கள் யாராலும் வாங்க முடியாது. கியூபா நாட்டின் பிரஜாவுரிமை பெற்றவர்களுக்கும் அந்த நாட்டில் பிறந்து பிறநாட்டில் வசிப்போர்களுக்கும் மட்டுமே இந்த கார்களை வாங்க உரிமை உள்ளது.
- இந்த நாட்டில் 1959 வரை 60 தொடக்கம் 75 சதவீதம் வரை கல்வியறிவு விகிதம் இருந்தது. ஆனால் இன்று 99.7 சதவீத மக்கள் படிப்பறிவோடு இருக்கின்றனர்.
- கியூபாவில் டிவி, ரேடியோ, செய்தித்தாள்கள் அனைத்துமே அரசாங்கத்தின் கீழ் செயல்படுகிறது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
GK in Tamil |