உலகின் மிகப்பெரிய அணை எது ? | World Biggest Dam in Tamil

world largest dam in tamil

உலகின் மிகப்பெரிய அணை எது ? | World Biggest Dam in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு பதிவில் உலகின் மிகப்பெரிய அணை எது என்பதை பற்றி பார்க்கலாம். தண்ணீர் நேரடியாக கடலில் கலக்காமல் மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்படுவதுதான் அணையாகும். இந்த தண்ணீரை மக்கள் விவசாயம் மற்றும் மின்சார உற்பத்திக்காக பயன்படுத்துகிறார்கள். உலகில் நிறைய அணைகள் உள்ளன. அதில் நாம் மிகப்பெரிய அணைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

Ulagin Migaperiya Anaikal

கரிபா அணை:

ஆப்ரிக்காவில் உள்ள கரிபா அணை 1959-ம் ஆண்டு கட்டப்பட்டது இது ஜிம்பாவில் உள்ளது. இதில் நீரின் கொள்ளளவு 185 மில்லியன் சதுர மீட்டர் ஆகும். இதில் உள்ள ஏரி 32 கி.மீ அகலமும் 280 கி.மீ நீளமும் கொண்டது. இந்த அணையின் நீளம் 617 மீட்டரும், உயரம் 128 மீட்டராக  உள்ளது. இந்த அணையை அந்த நாட்டில் உள்ள 60% மின்சார பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்துகிறார்கள். 10000 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டது.

ப்ராட்ஸ்க் அணை:

ரஷ்யாவில் உள்ள ப்ராட்ஸ்க் அணை உலகின் இரண்டாவது பெரிய அணையாகும். இது சைபீரியாவில் உள்ளது. 1964-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அணைக்காக உருவாக்கப்பட்ட இந்த நீர் தேக்கம் 5540 கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. 169.27 பில்லியன் கன மீட்டர் நீரின் கொள்ளளவை கொண்டது. 1,262 -மீட்டர் நீளம்  கொண்ட இந்த அணை 125 மீட்டர் உயரம் கொண்டது. இந்த அணை மின்சார  உற்பத்திக்காக கட்டப்பட்டது.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

இந்திய மாநிலங்களில் மிகச்சிறியது எது தெரியுமா?

அக்கோஸ்ம்பா அணை – Ulagin Migaperiya Anaikal:

கானாவில் உள்ள அக்கோஸ்ம்பா அணை உலகின் மூன்றாவது பெரிய அணையாகும். இது வால்ட்ட ஆற்றின் அருகே உள்ளது. வால்ட்டா ஏரியும் உள்ளது இந்த ஏரியின் அளவு 8500 கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. 144 பில்லியன் கன மீட்டர் நீரின் கொள்ளளவை கொண்டது. அணை 700 மீட்டர் நீளமும் 134 மீட்டர் உயரம் கொண்டது. 1966-ம் ஆண்டு மின்சார உற்பத்திக்காக கட்டப்பட்டது.

டேனியல் ஜான்சன் அணை:

டேனியல் ஜான்சன் அணை இந்த அணை கனடாவில் உள்ளது. இந்த அணை உலகின் நான்காவது பெரிய அணையாகும். இதனை மெனிக் 5 அணை என்றும் அழைக்கப்படுகிறது. மேனிக்கவுகன் என்ற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 139.8 பில்லியன் கன லிட்டர் நீரின் கொள்ளளவை கொண்டது. இதன் பரப்பளவு 1310 மீட்டர் மற்றும் 213.9 மீட்டர் உயரமும், 13 ஆர்ச்களும், 14 முட்டு சுவர்களையும் கொண்டது. தோராயமாக 2.2 மில்லியன் கன மீட்டர் கான்கிரீட் (Concrete) பயன்படுத்தப்பட்டுள்ளது. 1968-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அந்த நாட்டில் உள்ள மக்களின் மின்சார பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்துகிறார்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் என்ன?

குரி அணை:

குரி அணை வெனிசுலாவில் உள்ளது. இந்த அணை உலகின் ஐந்தாவது பெரிய அணையாகும். 135 பில்லியன் கன மீட்டர் நீர் சேமிக்கும் அளவை கொண்டுள்ளது. 163 மீட்டர் உயரமும் 1300 மீட்டர் நீளமும் கொண்டது. 1986-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை வெனிசுலாவின் மின்சார உற்பத்திக்காக கட்டப்பட்டது. இந்த அணை 70% மின்சாரத்தை வழங்குகிறது.

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பார்க்கலாம் 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil