உலக அமைதி தினம் | Ulaga Amaithi Dhinam

Ulaga Amaithi Dhinam

உலக அமைதி நாள் | International Day of Peace in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் உலக அமைதி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம். பொது அறிவு சம்பந்தமான விஷயங்களை இளம் வயதிலிருந்து நாம் படித்து தெரிந்துகொண்டால் எதிர்கால வாழ்க்கைக்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல் அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க இப்போது உலக அமைதி நாள் எப்போது என்று படித்தறிவோம்..

முக்கிய தினங்கள் 2022

உலக அமைதி நாள்:

உலக அமைதி நாளானது செப்டம்பர் 21-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் அமைதியான நிலையில் போர் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

உலக அமைதி நாள் ஏன் வந்தது:

ஐநாவின் பொது செயலாளராக பணியாற்றி வந்த ஹாமர்சீல்ட் என்பவர் 1961-ம் ஆண்டு விமான விபத்தில் உயிரை இழந்தார். அவருடைய இறப்பை நினைவு கூறும் வகையில் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது செவ்வாய்க்கிழமையை சர்வதேச அமைதி நாள் என்று கடைப்பிடித்து வந்தார்கள்.

பிறகு 2002-ம் ஆண்டில் இருந்து செப்டம்பர் 21-ம் தேதியை உலக அமைதி தினம் என்று ஐக்கிய நாடுகள் அறிவித்தது.

வரலாற்றில் இன்று என்ன நாள்?

 

உலகளவில் பல போர் சண்டைகள், பதற்ற நிலைமை, தொற்றுநோய் பிரச்சனைகள், பொருளாதார நெருக்கடி, காலநிலை மாற்றம் அடைதல் போன்ற பல இன்னல்களில் மக்கள் அமைதியில்லாத சூழலில் வாழும் நிலையில் உலக அமைதி என்ற நாள் முக்கியமாக கருதப்படுகிறது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil