தேசிய கண் தான தினம் எப்போது? | World Eye Donation Day in Tamil

Advertisement

உலக கண் தான தினம் | Eye Donation Day in Tamil 

தானத்தில் சிறந்த தானம் என்று சொல்வது கண் தானத்தை தான். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். கண் தானம் செய்வதால் இந்த உலகத்தை விட்டு நாம் சென்றாலும் மற்றொருவரால் நம் கண்கள் இந்த உலகத்தை பார்த்து ரசிக்க முடியும். உலகத்தில் பார்வை திறன் அற்றவர்களாக 4 கோடி மக்கள் உள்ளனர். கண் தானம் செய்வதற்கு தாமாக முன் வந்தோம் என்றால் உலகில் பார்வை இல்லாதவர்களை பார்வை உடையவர்களாக மாற்றி அமைக்கலாம். சரி வாங்க இன்றைய பொது அறிவு பகுதியில் உலக கண் தான தினம் எப்போது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

உலக சுகாதார தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

தேசிய கண் தான தினம் எப்போது?

விடை: கண் தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டு செல்வதற்காக வருடந்தோறும் செப்டம்பர் மாதம் 08-ம் தேதி தேசிய கண் தானம் தினம் கொண்டாடப்படுகிறது.

கண் தானத்தின் சில தகவல்:

  • தாமாகவே கண் தானம் செய்ய விரும்புபவர்கள் நமக்கு அருகாமையில் உள்ள கண் தான வங்கியை தொடர்பு கொண்டு அங்குள்ளவர்களிடம் கண் தானம் பற்றிய விவரங்களை கேட்டுக்கொள்ளலாம்.
  • ஒரு மனிதர் இறந்த பின்னரே அவர்களுடைய கண்களை மற்றவர்களுக்கு தானமாக வழங்க முடியும்.
  • ஒருவர் இறந்து 4 முதல் 6 மணி நேரத்திற்குள் அவரது கண்கள் அகற்றப்பட வேண்டும்.
  • கண்தானம் செய்யும் இறந்தவரையும், கண்களைப் பெற்றுக் கொள்பவரையும் மருத்துவர் முறையாக பரிசோதனை செய்த பிறகுதான், கண் விழிகளை பார்வையற்றவருக்குப் பொருத்த முடியும்.
  • இந்த கண்களைத் தானமாக பெறும் நிகழ்வு 20 முதல் 30 நிமிடங்களில் முடிந்து விடும்.
  • இறந்த பிறகு முகத்திலிருந்து கண்களை எடுப்பதால் முக மாறுதல்கள் எதுவும் ஏற்படாது.
  • கண் தானம் செய்பவர் இறந்ததும் அங்குள்ளவர்கள் அவரது கண்களை மூடி, கண்ணின் மீது ஐஸ்கட்டி அல்லது ஈரமான பஞ்சை வைக்க வேண்டும்.
  • கண் தானம் அளிப்பவரின் பெயரும், பெறுபவரின் பெயரும் ரகசியமாக வைக்கப்படும்.
  • முதலில் இறந்தவரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்பட்டு, உடல்நிலையின் ஆரோக்கியம் பற்றி ஆய்வு செய்யப்படும். பின்னரே கண் எடுக்கப்பட்டு, மற்றவருக்கு பொருத்தப்படும்.
உலக காற்று தினம்

கண் தானம் யாரெல்லாம் செய்யலாம்:

  • ஆண், பெண், வயது வித்தியாசமின்றி அனைவரும் கண் தானம் செய்யலாம்.
  • கண்களுக்கு கண்ணாடி அணிந்தவர்களும் கண் தானம் செய்யலாம்.
  • இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள், ஆஸ்த்துமா போன்ற நோயால் அவதிப்படுபவர்களும் ஓட கண் தானம் செய்யலாம்.
  • உடலில் பிற உறுப்புகளில் புற்று நோய் வந்து இறந்தவர்களும் கூட தானம் செய்யலாம்.

கண் தானம் யாரெல்லாம் செய்யக்கூடாது:

  • கொடிய தொற்று நோய்களான எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, காலரா, விச காய்ச்சல், மூளைக்காய்ச்சல் மற்றும் வெறி நாய்கடியால் இறந்தவர்கள் கண்களை தானம் செய்ய கூடாது.

கண் தானம் செய்தவரின் உறவினர்கள் செய்ய வேண்டியது:

  • கண்களைத் தானமாகப் பெறுவதற்கு இறந்தவரின் கணவன், மனைவி, உடன் பிறந்தவர் அல்லது நெருங்கிய உறவினர் ஒருவரும் மற்ற சாட்சிகள் இருவரும் எழுத்து மூலம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  • இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தினுடைய சரியான முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றைத் தெளிவாக கூற வேண்டும். அப்போதுதான் இத்தகவல் கண் வங்கிக் குழுவினருக்கு மிக விரைவாக வந்து சேரும்.
  • கண் தானம் செய்தவர் இறந்த உடனே அவர்களது கண் இமைகளை மூடி வைக்கவும்.
  • இறந்தவரின் உடல் இருக்குமிடத்தில் மின் விசிறியை நிறுத்தி வைக்க வேண்டும்.
  • குளிர் சாதனப் பெட்டியில் உடல் வைக்கப்பட்டிருந்தால் அதனை இயக்கத்தில் வைக்கலாம்.
  • இறந்தவரது தலையை தலையணையை வைத்து சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.
உலக அமைதி தினம்

கண் தானம் பற்றிய புள்ளி விவரம்:

  • இந்திய நாட்டில் மொத்தம் பார்வையற்றவர்களின் எண்ணிக்கையானது 70 லட்சம்.
  • கருவிழி நோயால் பார்வையிழந்து கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை 10 இலட்சம்.
  • ஒரு ஆண்டுக்குத் தேவையான கரு விழிகளின் எண்ணிக்கை 75 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை.
  • இந்தியாவில் கண் தானம் மூலம் கிடைக்கும் கரு விழிகளின் எண்ணிக்கை 22 ஆயிரம்.
  • இந்த எண்ணிக்கையில் தரப் பரிசோதனைகளுக்குப் பின்பு நல்ல நிலையில் கிடைப்பது 40 முதல் 50 சதவிகிதம்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement