உலக சிக்கன தினம் | World Savings Day in Tamil
சேமிப்பின் அவசியத்தையும், விழிப்புணர்வையும் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக உலக சிக்கன தினம் என்ற ஒன்று நடைமுறைக்கு வந்தது. ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய சொந்த உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தன் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் சேமிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று. சிறிய வயதிலிருந்து சேமிக்கும் பழக்கத்தினை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாள்காட்டியில் இருக்கக்கூடிய சிறப்பு தினங்கள் பற்றி நாம் அனைவருமே தெரிந்து வைத்திருக்க வேண்டும். தினங்கள் பற்றிய கேள்விகள் பெரும்பாலும் போட்டி தேர்வுகளில் கேட்கப்படுகிறது. சரி வாங்க இந்த பதிவில் உலக சிக்கன தினம் எப்போது என்று தெரிந்துக்கொள்ளலாம்.
எனது சிக்கனம் கட்டுரை |
உலக சிக்கன தினம் எப்போது?
விடை: வருடந்தோறும் அக்டோபர் 30-ம் தேதி உலக சிக்கன தினம் கொண்டாடப்படுகிறது.
சிக்கன தினம் யாரால் அறிவிக்கப்பட்டது:
உலக சிக்கன தினம் முதன்முதலில் இத்தாலியின் மிலான் நகரில் 1924-ம் ஆண்டு முதல் சர்வதேச சேமிப்பு வங்கி காங்கிரசின் போது அனுசரிக்கப்பட்டது.
இத்தாலிய பேராசிரியர் பிலிப்போ ரவிசா அக்டோபர் 30 ஆம் தேதியை ‘சர்வதேச சிக்கன தினம்’ என்று அறிவித்தார்.
இத்தினம் பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்காக சிக்கனத்தினதும், சேமிப்பினதும் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றது.
சேமிப்பு அவசியம்:
வரவிற்கு ஏற்ப செலவு செய்தால் வாழ்க்கையில் சந்தோசம் நிலைக்கும். குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒருவர் மட்டும் சிக்கனத்தை கடைப்பிடித்தால் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியாது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிக்கனத்தை கடைப்பிடித்தால் வாழ்வானது செழிப்பாக இருக்கும்.
சிறுசேமிப்பு வாசகங்கள் |
எதற்காக சிக்கன தினம் தெரியுமா?
கடந்த 1924-ம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற சர்வதேச சேமிப்பு வங்கிகளின் சிக்கன மாநாடு நடைபெற்றது. உலகின் பல சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டுக்குப் பிறகு, மக்கள் அனைவரும் சிக்கனத்தை அறிய வேண்டுமென, உலக சிக்கன தினம் என ஒரு தினம் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது. சேமிப்பு, சிக்கனம் போன்றவை பற்றி மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்பதே இத்தினம் உருவாக்கப்பட்டதற்கு முக்கிய நோக்கமாகும்.
உலக அமைதி தினம் |
சிக்கனம் எது தெரியுமா:
சிக்கனமாய் இருப்பதற்கு உணவு உண்ணாமல் இருத்தலோ, நம்முடைய அன்றாட தேவைகளை நிறைவேற்றி கொள்ளாமல் இருப்பது சிக்கனம் இல்லை. தேவைகளை அறிந்து வீண் செலவுகளை குறைத்து கொள்வதே சிக்கனமாகும்.
ஒவ்வொருவரும் சிக்கனத்தை கடைப்பிடித்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவோம்..
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |