உலக தாய்மொழி தினம் எப்போது? | Ulaga Thaimoli Thinam

Advertisement

தேசிய தாய்மொழி தினம் கொண்டாடப்படும் நாள் | UlagaThaimozhi Thinam

நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய பொது அறிவு சார்ந்த பதிவில் தேசிய தாய்மொழி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது என்று தெரிந்துக்கொள்ளப்போகிறோம். நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும் உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகின்றது. உலகத்தில் மனிதர் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கு முக்கிய காரணம் மொழிதான். பேச்சு வழக்குகளில் பல மொழிகள் உள்ளது. அவை அனைத்தும் மாவட்டம், நாடு, மாநிலம், கண்டம் என்று வேறுபடுகிறது. நாட்டில் வாழும் ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒவ்வொரு தாய்மொழி உள்ளது. சர்வதேச தாய்மொழி தினம் எப்போது வருகிறது என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

உலக தண்ணீர் தினம் என்று கொண்டாடப்படுகிறது தெரியுமா?

உலக தாய்மொழி தினம்:

விடை: உலக தேசிய தாய்மொழி தினமானது பிப்ரவரி 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 

உலக தாய்மொழி தினம் பற்றி சிறு குறிப்பு:

சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்க தாய் மொழி எனும் உளியால் மட்டுமே முடியும். எந்த இடத்திற்கு சென்றாலும் தாய்மொழி தமிழ் என்று சொல்வது மிகவும் பெருமைக்குரியது. ஏனென்றால் தாய்மொழிக்கு அவ்வளவு மதிப்பும், புகழும் கிடைத்துள்ளது. தாய்மொழியின் அவசியம் அனைவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும்.

நம் தாய்மொழியை காப்பாற்றுவதற்காக இந்திய மக்களாகிய நாம் மிகவும் போராடி மொழியுணர்வை வெளிப்படுத்தியிருக்கிறோம். உலகளவில் கிட்டத்தட்ட 6000 மொழிகள் பேசப்படுகிறது. உலகில் தோன்றுகிற உயிருக்கு முதல் சொந்தம் தாய். குழந்தை முதன் முதலில் கேட்க தொடங்குகிற முதல் மொழி தாயின் குரலே.

நாடு, மதம் சாதிகளை கடந்து தமிழராகிய நம் அனைவரையும் ஒன்றிணைப்பத நமது தாய்மொழியே. இது பல்லாயிரமாண்டு அழியாத நம் பண்பாட்டின் அடையாளமாக விளங்குகிறது. வங்காள தேச அரசின் முயற்சி மற்றும் பல நாடுகளின் ஆதரவோடு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவன அமைப்பின் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ம் நாள் உலக தேசிய தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement