சர்வதேச நடன தினம் | International Dance Day in Tamil Language
வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் உலக நடன தினம் எப்போது என்று தெரிந்து கொள்ளலாம். எல்லோருக்குமே பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும், பார்ப்பதற்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது சொல்லவே வேண்டாம் அனைவரும் விரும்பி செய்யக்கூடிய செயல்களில் ஒன்று. அந்த வகையில் நடன கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக உலக நடன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது, நாம் இந்த பதிவில் உலக நடன தினம் எப்போது கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க.
உலக நடன தினம்:
விடை: ஆண்டுதோறும் ஏப்ரல் 29-ம் தேதி உலக நடன தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச நடன தினம்:
- நடன கலைஞர்களின் சேவையை பாராட்டும் விதமாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. மக்களிடம் நடனத்தின் முக்கியத்துவம் மற்றும் உலக நாடுகளிடம் ஆரம்பக்கல்வியில் இருந்து உயர்கல்வி வரை நடனத்தின் அவசியத்தை வலியுறுத்துவதும் உலக நடனத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
- இது பிரெஞ் நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நூவர் என்பவரின் பிறந்த தினம் ஆகும், இவர் பாலே (Ballet) நடனத்தில் மிகவும் வல்லவர்.
- சர்வதேச நடன சபை International Dance Council மூலம் 2003-ம் ஆண்டில் இருந்து இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
- தாளத்துக்கும், இசைக்கும் ஏற்ப உடலை அசைத்து செய்யும் ஒரு கலை வடிவம் நடனம் ஆகும். நடனம் பார்ப்பவருக்கும் அதை ஆடுபவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது. பண்பாடு, சமூகம், கலை, நெறிமுறைகள் போன்றவற்றை உள்ளடக்கியது.
- 2005-ல் உலக நடன தினம் ஆரம்ப கல்வியின் மூலம் நடனத்தை போதிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.
- மேலும் நடனம் உடலுக்கு நன்மை தரக்கூடியது, உங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு நடன பயிற்சி உங்களுக்கு உதவியாக இருக்கும்.
- இப்பொழுது உடல் பருமனாக உள்ளவர்கள் தங்களின் எடையை குறைக்க Zumba நடனம் தான் கற்று வருகின்றனர். மனதில் கவலை உள்ள பல மக்கள் தங்களது கவலையை போக்குவதற்கு பெரும்பாலும் நடனம் தான் ஆடுகிறார்கள்.
- நடனங்கள் பல்வேறு பாணிகளில் இருக்கிறது. நடன அசைவுகளுக்கு ஏற்ப உடல் வளைந்து, நெளிந்து கொடுப்பது மட்டும் இன்றி மனதிற்கு சந்தோஷத்தை கொடுப்பதற்கும், உடல் வலிமை பெறுவதற்கும் உதவுகிறது.
மாநிலம் | நடனம் |
தமிழ்நாடு | பரதநாட்டியம், கோலாட்டம், கும்மியாட்டம், தெருக்கூத்து |
கேரளம் | சாக்கியார் கூத்து, கதகளி, மோகினி ஆட்டம், ஓட்டம் துள்ளல், தாசி ஆட்டம், கூடி ஆட்டம், கிருஷ்ணா ஆட்டம் |
ஆந்திர பிரதேசம் | குச்சிப்புடி, கோட்டம், வீதி பகவதம். |
ஓடிஸா | ஒடிசி |
மணிப்பூர் | மணிப்புரி |
வட இந்திய மாநிலங்கள் | கதக் |
அசாம் | சத்ரியா |
ஜம்மு-காஷ்மீர் | சக்ரி, ரூப். |
அஸ்சாம் | பிகு |
பீகார் | பிதேஷியா, ஜட்டா-ஜட்டின், லாகூய், நாச்சாரி |
நடனம் வகைகள் | Dance Types in Tamil
தென்னிந்தியக் கிராமிய நடனங்கள்:
- தேவராட்டம்
- தொல்லு குனிதா
- தண்டரியா
- கரகம்
- கும்மி
- கூட்டியாட்டம்
- படையணி
- கோலம் (நடனம்)
- லவா
- நிக்கோபாரிய நடனம்
வடஇந்தியக் கிராமிய நடனங்கள்:
- டும்ஹால்
- ரூப்
- லாமா நடனம்
- பங்கி நடனம்
- பங்காரா
- ராஸ்
- கிட்டா
- தம்யால்
- டுப்
- லகூர்
- துராங்
- மாலி நடனம்
- தேரா தலி
கிழக்கிந்தியக் கிராமிய நடனங்கள்:
- நாகா நடனம்
- ஹஸாகிரி
- மூங்கில் நடனம்
- நொங்கிறேம்
- பிகு
- தங்-டா
- கர்மா
- பொனுங்
- பிரிதா ஓர் வ்ரிதா
- ஹுர்க்கா பாவுல்
- காளி நாச்
- கண்ட பட்டுவா
- பைக்
- தல்காய்
மேற்கிந்திய நடனங்கள்:
- கெண்டி
- பகோரியா நடனம்
- ஜாவார்
- கர்பா
- தாண்டியா
- காலா
- டிண்டி
- மண்டோ
உலக ஊனமுற்றோர் தினம் எப்போது? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |