உலக புற்றுநோய் தினம் | World Cancer Day in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் உலக புற்றுநோய் தினம் எப்போது என்று பார்க்கலாம். அரசு நடத்தும் பெரும்பாலான தேர்வுகளில் இது போன்ற கேள்விகள் தான் கேட்கப்பட்டு வருகின்றன. இந்த பதிவு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, பொது அறிவு கேள்வி பதில்களை விரும்பி படிக்கும் மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க உலக புற்றுநோய் தினம் எப்போது என்று படித்தறியலாம்.
உலக காற்று தினம் |
உலக புற்றுநோய் தினம் எப்போது:
விடை: உலக புற்றுநோய் தினம் (World Cancer Day) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
- ஒவ்வொரு நாளும் புற்றுநோயால் பாதிக்கப்படுவதைத் தடுக்க சர்வதேச அளவில் பெரிய சமூகத்தை அணி திரட்டுவதற்கான ஒரு முக்கியமான நாளாக இது கருதப்படுகிறது. இது உலகளாவிய முயற்சியாகவும், பல மில்லியன் கணக்கிலான உயிர்களின் இறப்பிலிருந்து பாதுகாக்கின்றது.
- இந்த புற்றுநோய் பற்றி விளம்பரப்படுத்துதல், மக்களுக்கு புற்றுநோய் பற்றிய விளைவுகளை பற்றி தெரிய வைக்க இந்த நாள் கருதப்படுகிறது.
உலக புற்றுநோயின் தினத்தின் முக்கியத்துவம்:
நாளுக்கு நாள் புற்றுநோயின் தாக்கம் உயிர்களிடையே அதிகம் தாக்கி வருகிறது. மார்பகம், வாய், கர்ப்பப்பை, இரைப்பை, நுரையீரல், ரத்தம் என உடலில் பல்வேறு பகுதிகளில் பாதிக்கிறது.
ஆகவே உலக புற்றுநோய் தினம் அன்று உங்களுக்கு நீங்களே உறுதி செய்துகொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி, சரியான உணவு சாப்பிடுவேன், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தீய பழக்கங்களை செய்யமாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.
உலக தண்ணீர் தினம் என்று கொண்டாடப்படுகிறது தெரியுமா? |
- 1993 இல் நிறுவப்பட்ட சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) கடந்த 2000 ஆம் ஆண்டில் உலக புற்றுநோய் தினத்தை உருவாக்கியது.
- பாரிஸில் நடைபெற்ற புற்றுநோய்க்கு எதிரான முதல் உலக உச்சி மாநாட்டில் தான் இந்த நாளைக் கடைப்பிடிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
உலக புற்றுநோய் தினம் – எவ்வாறு விழிப்புணர்வு செய்ய வேண்டும்:
- உலக புற்றுநோய் தினமானது நமக்கும் நம்மை போன்ற உயிர்களையும் பாதுகாத்துக்கொள்ள செய்ய வேண்டியவை.
- சில பேர்க்கு புற்றுநோயின் பாதிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள இந்த நாள் ஒரு வாய்ப்பு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விழிப்புணர்வு செய்ய வேண்டும்.
- இந்த நாளை எல்லாரும் ஒரு முக்கியமான நாள் போல் எண்ணி சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு புற்றுநோய் பற்றியும், அதன் தீமைகளை பற்றியும் விழிப்புணர்வு செய்யவேண்டும்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |