உலக வானிலை தினம் | World Meteorological Day in Tamil
வணக்கம் நண்பர்களே. இன்றைய பொது அறிவு பகுதியில் உலக வானிலை தினம் எப்போது என்று தெரிந்துக்கொள்ளலாம். இது மாதிரியான பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை நாம் அதிகமாக இளம் வயதிலிருந்து படித்து தெரிந்துகொண்டால் எதிர்காலத்தில் நீங்கள் ஒரு அரசு வேலைக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்றால் அப்போது அந்த பொது அறிவு பற்றிய கேள்விகள் உங்களுக்கு கை கொடுக்கும். தேர்விற்கு மட்டும் பயன்படாமல் உங்களுடைய அறிவுத்திறனை மேம்படுத்தவும் பயன்படுகிறது. சரி வாங்க இந்த பதிவில் உலக வானிலை தினம் எப்போது என்று தெரிந்துக்கொள்ளலாம்..
உலக சிரிப்பு தினம் |
உலக வானிலை நாள் எப்போது:
விடை: உலக வானிலை நாளானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 23-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
வானிலை தினம் எதனால் கொண்டாடப்படுகிறது?
வானிலை மண்டலத்தை சீராக வைப்பதற்காக உரிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நடத்துவதற்காக உலக வானிலை தினம் மார்ச் மாதம் 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
வானிலை அமைப்பு எப்போது துவங்கப்பட்டது:
1950-ம் ஆண்டில் உலக வானிலை அமைப்பு துவங்கப்பட்டது. வானிலை, காலநிலை, தண்ணீர் போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொள்வதில் ஐ.நா.வின் சிறப்பு அமைப்பாக, 1951 முதல் செயல்பட்டு வருகிறது.
சர்வதேச யோகா தினம் எப்போது? |
உயிரிழப்புகள்:
வானிலையில் ஏற்படும் மாற்றத்தினால் மனிதர்கள் மட்டும் பாதிப்படையாமல் மற்ற உயிரினங்களும் பாதிப்பு அடைகின்றன. ஓசோன் படலம் பாதிப்புக்கு உள்ளாகி பூமியில் வெப்பத்தை அதிகரிக்கிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
வானிலை:
வானவில் என்பது ஒரு குழிவான நீர்வாழ் மேகத்தில் சூரியனின் கதிர்களின் விளைவு அல்லது ஒளிவிலகல் ஆகும். வானிலை என்பது நமது வழிகாட்டி, ஆறுதல் முன்னெச்சரிக்கை செய்யக்கூடியவை. வானிலை பகுதியானது எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறதோ அந்த அளவிற்கு மனித இனங்கள், தாவரங்கள், உயிரினங்கள்உயிர் வாழ முடியும்.
அதிக புயல் காற்று, பலத்த மழை, கடும் வெயில் ஏற்பட்டால் எந்த உயிருக்கும் உத்திரவாதமில்லை. சில பல நேரங்களில் இந்த வானிலை மோசமாகி நம் பயணம், மற்றும் நமது பாதுகாப்பைக் கூட பாதிக்கிறது.
உலக சுற்றுலா தினம் எப்போது? |
பருவமழை அளவு, மேக மூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை போன்ற பல தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையங்கள் தருகின்றன.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |