ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்
தமிழ் என்ற இந்த மூன்று எழுத்து இல்லாமல் நாம் இல்லை. தமிழ் மீது நமக்கு இருக்கும் பற்றும் மதிப்பும் நமது தாய்மொழியின் உன்னதத்தையும் யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. நமது மொழியின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்றுவதற்காக மட்டுமல்லாமல் தமிழ் மொழியின் மீது உள்ள ஆர்வத்தை வெளிபடுத்தவும் உலக தமிழ் மாநாடு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 உலக தமிழ் மாநாடு நடைபெற்று உள்ளது.
உலகின் தொன்மையான வரலாறும், பெருமையும், இலக்கியச் செறிவும் கொண்ட செம்மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் மேலதிக ஈர்ப்பை உருவாக்குவதற்கும், அறிவியல் ஆதாரங்களுடன் தமிழர் தம் வரலாற்றை நிலைநிறுத்தும் சான்றுகள் வெளிக்கொண்டு வருவதற்குமான தளமாக இந்த உலக தமிழ் மாநாடு உள்ளது. ஒவ்வொரு மாநாடும் தமிழின் பெருமையை உலகமே வியக்கும் வகையில் நடைபெற்றுவருகிறது. இன்று நாம் 5வது உலக தமிழ் மாநாட்டினை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
ஐந்தாவது உலக தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது:
விடை: ஐந்தாவது உலக தமிழ் மாநாடு தமிழ்நாட்டில் மதுரையில் 1981-ம் ஆண்டு ஜனவரி மாதம் 04 முதல் 10 தேதி வரை மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
ஐந்தாவது உலக தமிழ் மாநாடு:
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, அப்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் தலைமையில் மதுரையில் 1981-ம் ஆண்டு ஜனவரி 04 தொடங்கி ஜனவரி 10 வரை நடைபெற்றது.
தமிழ்மொழியை பெருமை செய்யும் வகையில் மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம் தொடங்கவும் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கவும் இம்மாநாடு வகை செய்தது.
தமிழ் மாநாடு நடைபெற்ற இடங்கள்:
மாநாடு | நடைபெற்ற இடங்கள் & ஆண்டு |
முதல் உலக தமிழ் மாநாடு | கோலாலம்பூர் (1966) |
இரண்டாவது உலக தமிழ் மாநாடு | சென்னை (1968), முதலமைச்சர் அண்ணாதுரை நடத்தினார். |
மூன்றாவது உலக தமிழ் மாநாடு | பாரிஸ் (1970,) பேராசிரியர் ஜூன் பிலியோசா நடத்தினார். |
நான்காவது உலக தமிழ் மாநாடு | யாழ்ப்பாணம் (1974), பேராசிரியர் சு.வித்தியானந்தன் நடத்தினார். |
ஐந்தாவது உலக தமிழ் மாநாடு | மதுரை (1981), முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடத்தினார். |
ஆறாவது உலக தமிழ் மாநாடு | கோலாலம்பூர் (1987) |
ஏழாவது உலக தமிழ் மாநாடு | மொரிசியஸ் (1989) |
எட்டாவது உலக தமிழ் மாநாடு | தஞ்சாவூர் (1995,) மறைந்த முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா நடத்தினார். |
ஒன்பதாம் மாநாடு | கோலாலம்பூர் (2015) |
பத்தாவது உலக மாநாடு | சிகாகோ (2019) |
11-வது உலக மாநாடு | சிங்கப்பூர் (2023) |
உலகின் மிக ஆழமான அகழி எது தெரியுமா ?