ஐம்பெரும் காப்பியங்கள் TNPSC Questions

imperum kappiyam author in tamil

ஐம்பெரும் காப்பியங்கள் பற்றி கட்டுரை

Aimperum kappiyam tamil:- முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரியபுராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவைகள் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன. சரி இந்த பதிவில் ஐம்பெரும் காப்பியம் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

தொல்காப்பியம் வரலாறு

ஐம்பெரும் காப்பியங்கள் என்னென்ன? அதன் ஆசிரியர் பெயர்கள்:

ஐம்பெரும் காப்பியங்கள் யாவை ஐம்பெரும் காப்பியங்கள் ஆசிரியர் பெயர்
சிலப்பதிகாரம் இளங்கோவடிகள்
மணிமேகலை சீத்தலைச் சாத்தனார்
சீவகசிந்தாமணி திருத்தக்க தேவர்
வளையாபதி
குண்டலகேசி நாதகுத்தனார்

ஐம்பெரும் காப்பியம் – அணிகலப் பெயர்கள்

இந்த நூலின் பெயர்கள் அணிகலன்களின் பெயரால் அமைந்துள்ளன.

சிலப்பதிகாரம் சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி – கண்ணகியின் சிலம்பால் உருவாகிய வரலாறு
மணிமேகலை ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி – இத்தொடர் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும். இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு.
குண்டலகேசி குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். – குண்டலமும் கூந்தல் அழகும் கொண்டவள் குண்டலகேசி – குண்டலகேசி என்பவளின் வரலாறு கூறும் நூல்.
வளையாபதி வளையல் அணிந்த பெண் வளையாபதி – வளையாபதியின் வரலாறு கூறும் நூல்.
சீவக சிந்தாமணி சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல். – சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு

ஐம்பெரும்காப்பியங்கள் அட்டவணை:

ஐம்பெரும் காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி வளையாபதி குண்டலகேசி
ஆசிரியர் இளங்கோவடிகள் சீத்தலைச் சாத்தனார் திருத்தக்க தேவர் தெரியவில்லை நாதகுத்தனார்
சமயம் கவுந்தி மூலம் சமணம் பேசப்படுகிறது. இளங்கோ சமரசப் பார்வையோடு சிவன், திருமால், அருகன், செவ்வேள், கொற்றவை பற்றிப் பேசுகிறார் பௌத்தம் – அறவண அடிகள் மூலம் பேசப்படல். சமணம் சமணம் பௌத்தம்
கதைத் தலைவன் /தலைவி கோவலன் மணிமேகலை சீவகன், எட்டு மனைவியர் நவகோடி
நாராயணன்
பத்திரை
– துறவியாய்
மாறிய
குண்டலகேசி
காவியப் குப்பு/ பாடல்கள் காண்டங்கள்-3 காதைகள் – 30 காதைகள்-30 13 இலம் பகங்கள் 72
பாடல்களே கிடைத்
துள்ளன.
19
பாடல்களே
கிடைத்துள்ளன
பாவகை அகவல் யாப்பு அகவல் யாப்பு விருத்தப்பா விருத்தப்பா விருத்தப்பா
பாத்திரங்கள் (பிற) மாதவி, கவுந்தி அடிகள், மாதரி, பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், மாடலன் சித்ராபதி, அறவண அடிகள், மாதவி, சுதமதி, தீவதிலகை, உதய குமாரன், மணிமேகலா தெய்வம், ஆபுத்திரன், ஆதிரை, சாதுவன் சச்சந்தன், விசயை, நந்தட்டன், கட்டியங் காரன், கந்துக்கடன், சீவகன் மணந்த எண்மர் நவகோடி நாராயணன் போன்றோர் குண்டலகேசி,
கணவன்
கரளன்
நூற்சிறப்பு 1.முதற்காப்பியம் முத்தமிழ்க் காப்பியம்
2.பெண்ணைக் காப்பியத் தலைவி ஆக்கியது.
3.மன்னருக்கு நிகராக வணிகர் கருதப்படுதல்.
1.உணவிடும் உன்னதப் பணி
2.சிறைச் சாலை அறச்சாலையானது.
3.துறவியாகவே மணிமேகலை இருந்தாள்.
மணநூல் தமிழன்னையின் வளையல் கதைப்
போக்கு
மணி
மேகலைக்
காப்பியத்தை
ஒத்துள்ளது.
தமிழன்னையின் காதணி.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்–> பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

 

ஐஞ்சிறு காப்பியங்கள் சிறப்புகள்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil