கங்கை ஆறு பிறப்பிடம் | Gangai Aatrin Pirapidam Tamil
கங்கை ஆற்றின் பிறப்பிடம்: நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் கங்கை ஆற்றின் பிறப்பிடம் எது என்று தெரிந்துக்கொள்ளலாம். இளம் வயதிலிருந்து நமது அறிவு திறனை வளர்த்துக்கொள்ள பொது அறிவு சம்பந்தமான விஷயங்களை நிறைய படிக்க வேண்டும். சிறு வயதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விஷயங்களும் எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் பயன்படும். வாங்க இந்த பதிவில் கங்கை ஆற்றின் பிறப்பிடம் எது என்று கீழ் காண்போம்..
இருண்ட கண்டம் என அழைக்கப்படும் கண்டம் எது? |
கங்கை ஆற்றின் பிறப்பிடம் எது?:
விடை: காங்கோத்ரி (கங்கை ஆற்றின் தாய் ஆறு எது)
கங்கை ஆறு:
கங்கை நதி என்பது இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் வழியாக பாய்கின்ற ஒரு ஆறாகும். இந்திய நாட்டின் முக்கியமான ஆறாக விளங்குகிறது. இந்தியாவின் தேசிய நதி கங்கை நதியாகும். இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது.
ஆறுகளின் பிரிவு:
அதன் பிறகு உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாக சென்று, ஹூக்ளி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
சிறப்பு பெயர்:
வங்க தேசத்தில் கங்கை ஆறினை பத்மா ஆறு என்று அழைக்கிறார்கள். கங்கை ஆறு மொத்தம் 2525 கி.மீ அளவிற்கு ஓடுகிறது.
உலகின் மிக உயர்ந்த சிகரம் எது? |
கங்கையின் மதிப்பு:
2007-ஆம் ஆண்டில் உலகின் ஐந்தாவது மிக மாசுபடுத்தப்பட்ட நதி என கங்கை ஆறு மதிப்பிடப்பட்டது.
கங்கா ஆரத்தி:
வாரணாசியில் கங்கைக்கரையில் தினம்தோறும் கங்கை ஆற்றுக்கு ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை கங்கா ஆர்த்தி என்று கூறுகின்றனர்.
கங்கை ஆற்றின் துணை ஆறுகள்:
- யமுனை ஆறு
- கோசி ஆறு
- கோமதி ஆறு
- காக்ரா ஆறு
- கண்டகி ஆறு
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |