வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கண்ணனின் தந்தை, தாய் மற்றும் தாய்மாமன் பெயர்.?

Updated On: September 9, 2024 5:17 PM
Follow Us:
kannan thaai thanthai
---Advertisement---
Advertisement

கண்ணனின் தாய்மாமன் பெயர் | கண்ணனின் தந்தை பெயர் என்ன

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பகவான் கிருஷ்ணின் தந்தை, தாய் மற்றும் தாய்மாமன் பெயர்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். கிருட்டினன், கிருட்டிணன், அல்லது கிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறார். கோபாலன், மதனகோபாலன், மதனசேகரன், ராஜகோபாலன், வேணுகோபாலன், ஸ்ரீதரன், முரளிதரன், கேசவன், கோவர்தனன், இராதா கிருஷ்ணன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

இவரின் வாழ்க்கை வரலாறு மிகப் பெரியது. இவர் பிறந்த தினத்தை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இவர் பிறந்த வரலாறு பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கோகுலாஷ்டமி/கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.?

கண்ணனின் தந்தை, தாய் மற்றும் தாய்மாமன் பெயர்:

கண்ணனின் தந்தை, தாய் மற்றும் தாய்மாமன் பெயர்

 பகவான் மகா விஷ்ணு எடுத்த எட்டாவது அவதாரம் கிருஷ்ண அவதாரம் என்று கூறப்படுகிறது. ஆவணி மாதம் அஷ்டமி நாளில் வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக கிருஷ்ண பகவான் அவதரித்தார். எனவே, கண்ணனின் தந்தை பெயர் வசுதேவர் தாயின் பெயர் தேவகி ஆகும். கண்ணனின் தாய்மாமன் பெயர் கம்சன் ஆகும்.  

மதுரா நகரில் வசுதேவர் – தேவகிக்கு எட்டாவது மகனாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்தார். கிருஷ்ணர் சிறைச்சாலையில் பிறந்தார். சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர் கோகுலத்தில் வளர்ப்புத்தாய் யசோதையால் வளர்க்கப்பட்டார். இவர் தனது தாய்மாமனான கொடியன் கம்சனை வதம் செய்து அரசாட்சி செய்தார்.

இவர் இளம்வயதில், கோகுலம் என்று சொல்லப்படும் பிருந்தாவனத்தில் இருந்தபோது, அங்கு இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். அங்கு இருந்த ராதையிடம் காதல் புரிந்தார். வாலிப வயதை அடைந்தவுடன் மதுரா சென்று தன் தாய்மாமன் ஆன கம்சனை வென்று, தாத்தாவான உக்கிரசேனரிடம் ராச்சியத்தை ஒப்படைத்தார். அதன் பிறகு துவாரகை எனும் புது நகரை நிறுவி,  மதுரா மக்களுடன் அங்கு குடிபெயர்ந்தார்.

கிருஷ்ணருக்கு மொத்தம் 16,008 மனைவிகள். ஆனால், எண்மனையாட்டி என அழைக்கப்படும் எட்டு மனைவிகளுடன் மட்டும் தான் தொடர்பில் இருந்தார். மற்ற பெண்களுடன் எந்த வித தொடர்பும் இல்லை. அதாவது, ருக்மணி, ச‌‌த்‌தியபாமா‌, சாம்பவதி,நக்னசித்தி, காளிந்தி, மித்திரவிந்தை, இலக்குமணை, பத்திரை ஆகிய எட்டு பெண்களும் அவரின் மனைவிகள் ஆவர். மற்ற  16, 000 பேர் அவரது சுதேசி மனைவிகள். இப்பெண்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக நரகாசுரனின் மாளிகையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள். கிருட்டிணர் நரகாசுரனை கொன்ற பிறகு அப்பெண்களை மீட்டு அவர்களின் குடும்பங்களுக்கு அழைத்து சென்றார். ஆனால், அப்பெண்களின் குடும்பத்தினர் அவர்களை ஏற்க மறுத்தார்கள். அதனால், அனைவரையும் கிருட்டிணர் ஒரே நாளில் மணந்தார். அதன் பிறகு, அவர்களுக்கு என்று ஒரு தனி அரண்மனை கட்டி அப்பெண்களை அங்கு வாழ வைத்தார்.

கிருஷ்ணன் 108 போற்றி தமிழ்

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now