கலித்தொகை நூல் குறிப்பு..! Kalithogai in Tamil..!

Advertisement

கலித்தொகை குறிப்பு வரைக..!

Kalithogai in Tamil: கலித்தொகை என்பது சங்ககால தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். கலி என்பது வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி ஆகிய  நால்வகைப் பாக்களுள் ஒன்றாகிய கலிப்பாவுக்கு இலக்கியமாகத் திகழும் நூல் இது ஒன்றே. பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன.

அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம் பெறுகின்றன.

கலித்தொகை காதலர்தம் அகத்தொகை எனவும் கூறலாம். இப்பாடல்களின் மூலம் பண்டைக் கால ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்மை, நல்லவர் தீயவர் பண்புகள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளலாம்.

சரி இந்த பதிவில் கலித்தொகை பற்றிய சில தகவல்களை நாம் படித்தறியலாம் வாங்க.

கலித்தொகை நூல் குறிப்பு..! Kalithogai in Tamil..!

கலித்தொகையின் உருவம்:

  • தினை – அகத்திணை
  • பாவகை – கலிப்பா
  • பாடல்கள் – 150
  • அடி எல்லை – 11 – 80
  • பாடியவரின் எண்ணிக்கை – 5

பதினெண் மேற்கணக்கு நூல்கள்

பெயர்க்காரணம்:

  • கலிப்பா வகையால் பாடப்பெற்ற ஒரே தொகை நூல் இதுவே.

வேறு பெயர்கள்:

  1. கலி
  2. குறுங்கலி
  3. கற்றறிந்தோர் ஏத்தும் கலி
  4. கல்விவலார் கண்ட கலி
  5. அகப்பாடல் இலக்கியம்

தொகுப்பு, உரை, பதிப்பு:

  • இந்த நூலை தொகுத்தவர்: நல்லந்துவனார்
    இந்த நூலை தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
  • இந்நூலின் முதலில் உள்ள கடவுள் வாழ்த்தையும் இறுதியில் உள்ள நெய்தற்கலியையும் நல்லந்துவனாரே பாடி நூல் முழுவதையும் தொகுத்தார் என்பார் நச்சினார்கினியர்.
  • இந்த நூல் முழுமைக்கும் நச்சினார்கினியர் உரை உள்ளது.
    இந்நூலை முதலில் பதிப்பித்தவர்: சி. வை. தாமோதரம்பிள்ளை.

கடவுள் வாழ்த்து:

  • இந்த நூலில் கடவுள் வாழ்த்தை பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • கடவுள் வாழ்த்தில் குறிப்பிடும் தெய்வம்: சிவன்.

கலித்தொகை நூல் பாடியவர்கள்:

  • பாலை திணை பாடியவர்: பெருங்கடுங்கோண் (35 பாடல்கள்)
  • மருதம் திணை பாடியவர்: மருதம் இளநாகனார் (35 பாடல்கள்)
  • நெய்தல் திணை பாடியவர்: நல்லந்துவனார் (33 பாடல்கள்)
  • குறிஞ்சி திணை பாடியவர்: கபிலர் (29 பாடல்கள்)
  • முல்லை தினை பாடியவர்: சோழன் நல்லுருத்திரன் (17 பாடல்கள்)

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

கலித்தொகை நூல் குறிப்பு மற்றும் வினா விடைகள்:

1. எட்டுத்தொகை நூல்களுள் பாலைத் திணையை முதன்மையாக கொண்டு பாடப்படும் நூல் எது?

விடை: கலித்தொகை

2. தொகை நூல்களுள் முதன் முதலாக பதிப்பிக்கப்பட்ட நூல் எது?

விடை: கலித்தொகை

3. தொகை நூல்களில் பாண்டியர்களைப் பற்றி குறிப்புகள் மிகுந்து காணப்படும் நூல் எது?

விடை: கலித்தொகை

4. எட்டுத்தொகை நூல்களுள் காமக்கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே ஒரு சங்க நூல் எது?

விடை: கலித்தொகை

5. தமிழர்களின் மரபுவழி விளையாட்டான ஏறு தழுவுதல் (மஞ்சள் விரட்டி – ஜல்லிக்கட்டு) கூறும் நூல் எது?

விடை: கலித்தொகை

6. சங்ககால வழக்கங்களில் ஒன்றான மடலேறுதல் குறித்து கூறும் சிறப்புத்தன்மை வாய்ந்த நூல் எது?

விடை: கலித்தொகை

7. பெருந்திணை மற்றும் கைக்கிளை போன்ற பாடல்கள் இடம் பெற்ற ஒரே ஒரு சங்க நூல் எது?

விடை: கலித்தொகை

8. புராணங்களிலும், இதிகாசங்களிலும் இடம் பெரும் செய்திகளை மிகுதியாக கூறும் ஒரே நூல் எது?

விடை: கலித்தொகை

9. பெண்கள் பிறந்த வீட்டிற்கு உரியவர் அல்ல என்ற இக்கால சிந்தனையை கூறும் ஒரே நூல் எது?

விடை: கலித்தொகை

10. ஒரு பாடலுக்கு இசையோடு பாடுவதற்கு ஏற்ப துள்ளலோசை கொண்டு நாடகப் பாங்கில் அமைந்த ஒரே நூல் எது?

விடை: கலித்தொகை

11. நான்கு வகை பாக்களில் கலிப்பா விற்கு இலக்கியமாக திகழும் ஒரே நூல் எது?

விடை: கலித்தொகை

12. கலித்தொகை பாடிய புலவர்களின் எண்ணிக்கை

விடை: 5

13. கலித்தொகை அடிவரையர

விடை “11 அடிச் சிற்றெல்லையும் “80 அடிப் பேரேல்லையும்” கொண்டது.

14. கலித்தொகைப் பாடல்கள் எண்ணிக்கை.

விடை: “149″மற்றும் கடவுள் வாழ்த்துடன் சேர்க்கும் போது மொத்தம் 150 பாடல்களாகும்.

15. கலித்தொகையை தொகுத்தவர் யார்?

விடை: நல்லந்துவனார்

16. கலித்தொகையை தொகுப்பித்தவர் யார்?

விடை: யார் எனத் தெரியவில்லை

17. கலித்தொகையில் இடம்பெறும் கடவுள் வாழ்த்துப் பாடலில் குறிப்பிடப்படும் கடவுள்

விடை: சிவன்

18. கலித்தொகையை முதலில் பதிப்பித்தவர் யார்?

விடை: தமிழ் தந்தை ராவ் பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை

எட்டுத்தொகை நூல்கள் யாவை

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement