மகாத்மா காந்தி பிறந்த ஊர் எது?

Advertisement

மகாத்மா காந்தி பிறந்த ஊர் எது? | Mahatma Gandhi Pirantha Oor

ஹாய் பிரண்ட்ஸ் தினமும் ஒரு பொது அறிவு வினா விடைகளை பற்றி நாம் தெரிந்து கொண்டால் நமது வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எப்படி வாழ்க்கைகள பயனுள்ளதாக இருக்கும் என்று கேட்குறீர்களாக? ஆம் நாம் இப்பொழுது எல்லாம் பொது தேர்வுகள் அதிகமாக நடத்தப்படுகிறது. அந்த தேர்வுகளில் பெரும்பாலும் பொது அறிவு சார்ந்த வினாக்கள் தான் கேட்கப்படுகிறது. ஆகவே நீங்கள் நிறைய பொது அறிவு விஷயங்களை தெரிந்து கொள்ளும்போது, பொது தேர்வுகளில் கலந்துகொள்ளும்போது அது உங்களுக்கு மிகவும் கை கொடுக்கும். அந்த வகையில் இன்று நாம் இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தை வாங்கி தந்த தேச தந்தையான மகாத்மா காந்தி பிறந்த ஊர் எனது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.

மகாத்மா காந்தி பிறந்த ஊர் எது? | Where Was Mahatma Gandhi Born in Tamil

  • காந்தியடிகள் பிறந்த ஊர் குஜராத்தில் போர்பந்தர் என்ற ஊரில் பிறந்தவர்.

மகாத்மா காந்தி பற்றிய தகவல்கள்:

1. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் பகுதியின் போர்பந்தரில், அக்டோபர் 02, 1869 அன்று பிறந்தார்.

2. காந்தியின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி குஜராத்தில் போர்பந்தர் என்ற பகுதியின் தலைமை அமைச்சராக இருந்தவர்.

3. வீட்டில் இறுதியாகப் பிறந்தவர் தான் காந்த. அவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர்.

4. ராஜ்கோட்டில் மேல்நிலைக் கல்வி பயின்றபோது, காந்தி தன் சிறுவயதிலேயே நிச்சயிக்கப்பட்ட, கஸ்தூர்பாவை மணந்துகொண்டார்.

5. மோகன்தாஸ் காந்தியின் 16-வது வயதில், அவரின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மரணமடைந்தார்.

6. தனது 19-வது வயதில், கல்வி பயில்வதற்காக இங்கிலாந்துக்குப் பயணம் சென்றார் காந்தி.

7. காந்தி முதன் முதலாகப் பகவத் கீதை புத்தகத்தைப் படித்தபோது, அவருக்கு வயது 20. பகவத் கீதை காந்தியின் மனதை ஈர்த்த புத்தகங்களுள் முதன்மையானது.

8. இங்கிலாந்து சென்று மூன்று ஆண்டுகள் கழித்து, இந்தியா திரும்பினார் காந்தி. பம்பாய் (மும்பை) உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற முயன்று, சிறிது காலம் சட்ட வரைவாளராகப் பணியாற்றினார்.

9. 1893-ம் ஆண்டு, இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்குப் பயணப்பட்டார் காந்தி.

10. ரயில் பயணத்தின்போது, நிறம் காரணமாக அவமானப்படுத்தப்பட்டார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய நிறவெறிக்கு எதிராக, நாட்டல் இந்திய காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்தார்.

இந்தியாவின் முதல் பிரதமர் யார்?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement