கோளறு பதிகம் வினா விடை

Advertisement

Kolaru Pathigam Question

பதிகங்களில் அதிக சக்திவாய்ந்த பதிகம் கோளறு பதிகம் ஆகும். திருஞானசம்மந்தர் அருளிய கோளறு பதிகம் மொத்தம் 11 பதிகங்களை உள்ளடக்கியது. திருநாவுகரசருக்கும் சம்பந்தருக்கும் இடையே எழுந்த உரையாடல் கோளறு பதிகம் தோன்ற காரணமாக இருந்தது. கோளறு பதிகத்தினை தினம் உச்சரிப்பதன் மூலம் பல நன்மைகள் நடக்கும். நாம் செய்த பாவங்களும் கிரகங்களினால் ஏற்படும் கிரகதோஷம் நீங்கும்.

கோளறு பதிகம் பற்றி அறியப்படாதவர் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு மிகவும் பிரபலமானதாகும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கிறது. எவர் ஒருவர் தினமும் கோளறு பதிகத்தை உச்சரித்து வருகிறாரோ அவருக்கு எல்லாக்காலத்திலும் துன்பம் என்பதே இல்லை. இப்படி அதன் சிறப்புகளை பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம்.  சரி விஷத்துக்கு வருவோம். கோளறு பதிகத்தை நீங்கள் எந்த அளவிற்கு படித்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள பின்வருமாறு கோளறு பதிகம் வினா விடை மூலம் தெரிந்துகொளுங்கள். அதாவத, கோளறு பதிகம் வினா விடைகளை பின்வருமாறு கொடுத்துள்ளோம் படித்து பயனடையுங்கள்.

கோளறு பதிகம் நன்மைகள் மற்றும் பாடல் விளக்கம்

கோளறு பதிகம் வினா விடை:

1. வேய் என்னும் சொல்லின் பொருள் என்ன.?

பதில் : மூங்கில் 

2.பதிகத்தில் ‘திருக்கடைக்காப்பு’ என்று எந்தப் பாட்டை அழைக்கிறோம்?

பதில் : இறுதிப் பாடலை மட்டும் 

3.கோளறு பதிகத்தை இயற்றியவர் யார்?

பதில் : திருஞானசம்பந்தர்

4.தேவாரத்தின் எந்தத் திருமுறையில் கோளறு பதிகம் இடம்பெற்றுள்ளது?

பதில் : இரண்டாம் திருமுறை

5.கோளறு பதிகத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?

பதில் : 11

6.கோளறு பதிகம் எந்தப் பண்ணில் (ராகம்) பாடப்படும்?

பதில்: பியந்தை காந்தாரம்

7.சிவபெருமான் எந்த வேடத்தில் தோன்றி அர்ச்சுனனுக்கு அருள்புரிந்தார்?

பதில்: வேட்டுவன்

8.கோளறு பதிகம் எந்தப் பாவகையைச் சார்ந்தது?

பதில்: விருத்தம் 

9.சிவபெருமான் திருமார்பில் அணிவது எது.?

பதில்: எலும்பு

10.சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து யாரை எரித்தார்?

பதில் : மன்மதன்

குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement