உலக சாக்லேட் தினம் | World Chocolate Day in Tamil
சாக்லேட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து, ருசித்து சாப்பிடக்கூடிய பொருள் சாக்லேட். சாக்லேட் சாப்பிடுவது ஒவ்வொரு விதத்தில் தீமை என்றாலும், மற்றொரு விதத்தில் நன்மை தரக்கூடியது என்றே சொல்லலாம். எல்லோருக்கும் பிடித்த சாக்லேட்டை சிறப்பு செய்யும் விதத்தில் சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. என்ன சாக்லேட்டுக்கு சிறப்பு தினம் இருக்கா..! என்று ஆச்சரியப்படும் மக்களுக்கு ஆமாம் என்று தான் பதில் சொல்ல வேண்டும். அட ஆமாங்க நம் நாட்டில் சாக்லேட்டுக்கு என்று ஒரு தனி தினம் உள்ளது வாங்க எப்போது சர்வேதேச சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது என்பதையும், எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம்.
சர்வதேச சாக்லேட் தினம்:
விடை: ஜூலை 7-ம் தேதி சர்வதேச சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது.
சாக்லேட் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
- Sarvadesa Chocolate Thinam in Tamil: மனிதன் கண்டுப்பிடித்த ஒரு சூப்பரான உணவுப்பொருளை நினைவுப்படுத்தி பாராட்டும் வகையில் ஐரோப்பாவில் 16-ம் நூற்றாண்டில் இருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- ஒரு சிலர் மாயன் காலத்தில் சாக்லேட் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகின்றனர். இருப்பினும் ஐரோப்பியர்கள் ஜூலை 7-ம் தேதி 1550-ம் ஆண்டு தான் மக்களுக்கு சாக்லேட்டை அறிமுகப்படுத்தினார்கள் என்ற கூற்று உள்ளது, அதனால் தான் ஜூலை 7-ம் தேதியை சர்வதேச சாக்லேட் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
வரலாறு:
- அந்த காலத்தில் கோக்கோ விதையிலிருந்து உருவாகும் சாக்லேட்டை பானமாக குடித்து வந்தார்கள்.
- சாக்லேட் விதைகளை தனியாக சாப்பிட முடியாது என்பதால் தேன், பால், பழம் போன்றவற்றில் பிசைந்து சாப்பிட்டு வந்தார்கள். இதுவே சாக்லேட்டின் முதல் வடிவம் ஆகும்.
- நாளடைவில் சாக்லேட்டுகளை வெண்ணிலா, இனிப்பு போன்ற பொருட்களில் கலவையின் மூலம் தயாரிக்கப்பட்டு, இப்போது உலகம் முழுக்க விரும்பி சாப்பிடும் உணவாகிவிட்டது.
- சாக்லேட்டுகள் கொக்கோ பீன்ஸ் மரத்தில் உள்ள பழத்தின் விதையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஒரு கோக்கோ பழத்தில் 20 முதல் 60 விதைகள் வரை இருக்கும்.
- சாக்லேட் என்ற வார்த்தை மெக்ஸிக்கோ மாகாணத்தில் பேசப்படும் nahuatl என்ற மொழியில் உள்ள xocolatl என்ற சொல்லில் இருந்து உருவானது.
நன்மைகள்:
- சாக்லேட் சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் குறைய, இதயம் சீராக செயல்படவும் மற்றும் இதய பாதிப்புகளை குறைக்கவும் உதவியாக இருக்கும்.
- அதிலும் குறிப்பாக டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் சருமத்தை பாதுகாக்கவும், மூளைக்கு வலிமை தரவும் உதவுகிறது.
சாக்லேட் தினம்:
- சர்வதேச சாக்லேட் தினம் ஜூலை 7-ம் தேதி கொண்டாடப்பட்டாலும் ஒரு சில நாடுகளில் சாக்லேட் தினம் வேறுபடுகிறது.
- United States அக்டோபர் 28-ம் தேதி தேசிய சாக்லேட் தினமாக கொண்டாடுகிறது.
- ஆப்பிரிக்கா பிப்ரவரி 14-ம் தேதியை சாக்லேட் தினமாக கொண்டாடுகின்றனர்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
GK in Tamil |