சர்வதேச மாணவர்கள் தினம் | International Students Day in Tamil

Advertisement

சர்வதேச மாணவர்கள் தினம் | Sarvadesa Manavargal Dhinam in Tamil

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்த நாட்டில் உள்ள மன்னர் எவ்வளவு முக்கியமோ அதே போன்று மாணவர்கள் மிகவும் முக்கியம். நம் நாடு அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, காவல் துறை, கணினி துறை என அனைத்து துறையிலும் சாதனை படைத்து பொருளாதார வளர்ச்சியில் கொடிகட்டி பறப்பதற்கு மாணவர்களின் பங்கு இன்றியமையாதது. அந்த வகையில் மாணவர்களின் எழுச்சியை போற்றும் விதமாக சர்வதேச மாணவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த பதிவில் சர்வதேச மாணவர்கள் தினம் எப்போது என்று தெரிந்துகொள்வோம் வாங்க.

சர்வதேச மாணவர்கள் தினம்:

விடை: மாணவர்களின் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட வருடந்தோறும் நவம்பர் 17-ம் தேதி சர்வதேச மாணவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக தேசிய இளைஞர் தினம்

சர்வதேச மாணவர்கள் தினம் அறிவிக்கப்பட்டது:

  • இந்த தினம் கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம் செக்கோசிலோவாக்கியா தலைநகரில் மாணவர்கள் இறந்ததை நினைவுபடுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
  • 1939-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடந்தது.
  • இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஜான் ஓப்ளெட்டல், மாணவர்கள் மற்றும் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அந்த மாணவர்களை நினைவு கூறும் விதமாக சர்வதேச மாணவர்கள் தினம் நவம்பர் 17 அனுசரிக்கப்பட்டு வருகிறது.

International Students Day in Tamil:

  • இந்த தினத்தை முதன் முதலில் 1941-ம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பு மூலம் லண்டனில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் அப்போது அகதிகளாக இடம் பெயர்ந்த மாணவர்கள் அங்கத்தவர்களாயிருந்தனர்.
  • 1967-1974 ஆண்டில் கிரேக்கத்தில் உள்ள மாணவர்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்தொழில்நுட்ப பயிற்சி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
  • இந்த போராட்டம் 1973 நவம்பர் 17-ல் தீவிரமாக இருந்தது. இந்த போராட்டம் இராணுவ வீரர்களால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதனால் கிரேக்கத்தில் நவம்பர் 17 விடுமுறை நாளாக உள்ளது.
தேசிய பெண் குழந்தை தினம் எப்போது?

மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நற்பண்புகள்:

  • மாணவர்கள் எதிர்கால தூண்கள். எனவே அவர்களை முடிந்தவரை காயப்படுத்தாமல் பக்குவமாக சொல்லி புரியவைப்பது நல்லது.
  • பல்வேறு நாடுகளில் உள்ள மாணவர்கள் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்து கொண்டிருக்கின்றன.
  • மாணவர்கள் அமைதியாகவும், பணிவாகவும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
  • பெற்றோர்கள் மற்றும் வயதில் மூத்தோர்களை பணிந்து, மதித்து நடக்க வேண்டும். மாணவர்கள் நல்ல முறையில் இயங்குவதற்கு ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது எனவே ஆசிரியர் பேச்சை கேட்டு மதித்து நடக்க வேண்டும்.
தேசிய நூலக தினம் எப்போது?
உலக புற்றுநோய் தினம்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement