சீனா தலைநகரம் எது? | China Thalainagaram Ethu
Which is The Capital of China in Tamil: நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் சீனாவின் தலைநகரம் எது என்று தெரிந்து கொள்ளலாம். ஒரு நாட்டின் தலைநகரம் என்பது அந்த நாட்டின் நிர்வாகம் அமைந்துள்ள இடத்தை குறிக்கிறது. ஒரு சில நாடுகளுக்கு நிர்வாகம் மற்றும் வர்த்தகத்திற்கு என வெவ்வேறு தலைநகரங்களை கொண்டுள்ளது. ஒரு தலைநகரம் அனைவருக்கும் சென்று வரக்கூடிய இடமாக மற்றும் கட்டமைப்பு வசதிகள் இருக்க கூடிய இடமாக இருக்க வேண்டும். இப்படியான வசதிகளை கொண்டிருந்தால்தான் அது தலைநகரம் என அழைக்கப்படுகிறது. சரி வாங்க சீனாவின் தலைநகரம் எது என்று படித்து தெரிந்து கொள்வோம்.
சீனாவின் தலைநகரம் எது?

விடை: பெய்ஜிங் (Beijing) சீனாவின் தலைநகரம் ஆகும்.
Which is The Capital of China in Tamil:
- கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு சீனா. இதனுடைய தலைநகர் பெய்ஜிங் மற்றும் இதனுடைய வர்த்தக தலைநகர் shanghai ஆகும்.
- அதிக பரப்பளவை கொண்ட நாடுகளான ரஷ்யா, கனடா போன்ற நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய நாடுகளில் சீனாவும் ஒன்று.
- மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு என்ற பெருமை சீனாவிற்கு உள்ளது. மேலும் உலக அளவில் சீனா ஏற்றுமதியில் இரண்டாவது இடத்திலும், இறக்குமதி அளவில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
- தமிழ்நாட்டில் மன்னர்கள் ஆட்சி செய்ததை போலவே சீனாவிலும் சியா வம்சம் முதலான சிங் வம்சம் வரையான அரசர்கள் சீனாவை ஆட்சி புரிந்து வந்தனர். 1911-ம் ஆண்டில் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதுடன் முடிவடைந்தது.
- இந்த நாடு வட சீனச் சமவெளியூடாகப் அமையும் மஞ்சள் ஆற்றங்கரையில் இருந்து உருவானது. சீனா ஆசிய கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடாகும்.
பெய்ஜிங் பற்றிய தகவல்கள்:
- பெய்ஜிங் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும், 3000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வரலாறு கொண்டது.
- இது சீன அரசாங்கத்தின் தலைமையிடமாக இருப்பதால் அரசியல், பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளுக்கு மையமாக உள்ளது.
- உலகளவில் மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் (Peking University, Tsinghua University) உள்ள இடம்.
- 2008ல் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 2022ல் குளிர்கால ஒலிம்பிக்ஸ் நடத்திய முக்கிய நகரம்.
சீனாவின் சிறப்புகள்:
- China Thalainagaram Ethu: உலகின் மிக உயரமான சிகரம் என்று அழைக்கப்படும் எவரெஸ்ட் சிகரம் திபெத் மற்றும் நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. சீனாவின் எல்லையில் இமயமலை தொடர் அமைந்துள்ளது.
- சைனாவில் இருக்கும் யாங்சி ஆறு உலகின் மூன்றாவது மிக நீளமான நதியாகும். இந்த நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு மலைப்பகுதியாக உள்ளது, இங்கு 1500-க்கு மேற்பட்ட ஆறுகள் அமைந்துள்ளது.
- யாழு சாங் பூ நதி சமுத்திரத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இது இந்தியாவின் பிரம்மபுத்ரா என்று அழைக்கப்படுகிறது.
- உலக அதிசயங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவர் இந்த நாட்டில் தான் உள்ளது. சீனாவின் தேசிய மொழி Mandarin.
- இந்த நாட்டின் பிரபலமான உணவு Peking Duck, இங்கு உள்ள மக்கள் உணவை Chop Stick மூலம் உட்கொள்கின்றனர்.
- நாணயம் Renminbi என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்டின் தேசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ், சீனாவின் தேசிய விலங்கு பாண்டா (panda), சீனாவின் தேசிய பழம் கிவி ஆகும்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
GK in Tamil |