தமிழ்நாட்டின் ஏரிகள் மாவட்டம் எது? | Tamilnattin Eri Mavattam
பொது அறிவு (GK in Tamil) சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள நினைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களுமே தனித்தனி சிறப்புகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்குமே ஒரு சிறப்பான பெயர் உண்டு. அந்த வகையில் நாம் இந்த பதிவில் தமிழகத்தின் ஏரி மாவட்டம் என்று அழைக்கப்படும் ஊரின் பெயரையும், அந்த ஊரின் சிறப்புகளையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தமிழகத்தின் ஏரி மாவட்டம் எது?
விடை: செங்கல்பட்டு மாவட்டம் தமிழகத்தின் ஏரி மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் ஏரிகள் மாவட்டம்:
- இதற்கு முன் அதிக ஏரிகளை கொண்ட மாவட்டமாக காஞ்சிபுரம் இருந்து வந்தது. காஞ்சிபுரத்தில் 909 ஏரிகள் இருந்தன. ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டதால், காஞ்சிபுரத்தில் 381 ஏரிகள் மட்டுமே உள்ளது.
சிறப்புகள்:
- செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகள் உள்ளது. இந்த மாவட்டத்தின் சிறப்புகளாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், சித்தர் பீடம், அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில், நடு பழனி மரகத தண்டாயுதபாணி கோவில், மழைமலை மாதா அருள்தலம் போன்றவை உள்ளது.
- மேலும் சுற்றி பார்ப்பதெற்கென பறவைகள் சரணாலயம் உள்ளது.
- சிறுபாணாற்றுப்படை நூலாசிரியர் நல்லூர் நத்தத்தனார் ஊரான இடைக்காழிநாடு உள்ளது.
பெயர்க்காரணம்:
- இந்த மாவட்டத்தில் செங்கழுநீர்ப் பூக்கள் அதிகமாக நீர் நிலைகளில் வளர்ந்து வந்ததால் முதலில் செங்கழுநீர்ப்பட்டு என்று அழைக்கப்பட்டு வந்தது. பின் அதுவே காலப்போக்கில் மருவி செங்கல்பட்டு என அழைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரி எது?
- விடை: கிருஷ்னகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் இருக்கும் பாரூர் ஏரி தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரியாகும்.
- இந்த ஏரி 600 ஏக்கர் பரப்பளவையும் 249 மில்லியன் கன அடி நீரின் கொள்ளளவையும் கொண்டுள்ளது. இந்த ஏரி பாசன வசதிக்கு உதவியாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் ஏரிகள் – Tamilnattin Eri Mavattam:
- தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளது. 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சென்னை:
- செங்குன்றம் ஏரி
- புழல் ஏரி
- செம்பரம்பாக்கம் ஏரி
- செங்கல்பட்டு ஏரி
- மதுராந்தகம் ஏரி
- பூண்டி ஏரி
- சோழவரம் ஏரி
- பழவேற்காடு ஏரி
கடலூர்:
- வீராணம் ஏரி
- வெலிங்டன் ஏரி
- வாலாஜா ஏரி
கிருஷ்ணகிரி:
கோயம்புத்தூர்:
- உக்கடம் பெரியகுளம்
- வாலாங்குளம்
- சிங்காநல்லூர் குளம்
- சூலூர்க் குளம்
- முத்தண்ணன் குளம்
- குறிச்சி குளம்
- செல்வசிந்தாமணி குளம்
சேலம்:
- மூக்கனேரி
- எமரால்டு ஏரி
- ஆட்டையாம்பட்டி ஏரி
- பனமரத்துப்பட்டி ஏரி
- வெள்ளாளபுரம் ஏரி
ஈரோடு:
- கெட்டிசமுத்திரம் ஏரி (அந்தியூர்)
- பெரிய ஏரி (அந்தியூர்)
- வௌவால் ஏரி (சந்திபாளையம்)
- வேம்பத்தி ஏாி
அரியலூர்:
- கரைவெட்டி ஏரி
- சுக்கிரன் ஏரி
நாமக்கல்:
திண்டுக்கல்:
- பேரிஜம் ஏரி
- கொடைக்கானல் ஏரி
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
GK in Tamil |