தமிழ்நாட்டின் தாகூர் என அழைக்கப்படுபவர் யார்? | Tamilnattin Tagore
நண்பர்களுக்கு வணக்கம்.. தினமும் குறைந்தது ஐந்து அல்லது பத்து பொது அறிவு சார்ந்த விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்பொழுதான் நாம் அரசு நடத்தும் பொது தேர்வுகளில் கலந்து கொள்ளும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் தமிழ்நாட்டின் தாகூர் என அழைக்கப்படுபவர் யார்? ஏன் அவருக்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற தகவலை நாம் இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
தமிழ்நாட்டின் தாகூர் யார்?
- விடை: வாணிதாசன்
வாணிதாசன் பற்றிய சிறு குறிப்பு:
இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர்.
இவரின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லுநர் இவர், “தமிழ்-பிரெஞ்ச் கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டார்.
பிரெஞ்ச் குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார் இவரின் முதல் பாடல் = பாரதி நாள் இன்றடா! பாட்டிசைத்து ஆடடா!
தான் வாழ்ந்த வீட்டிற்கு “புரட்சி அகம்” எனப் பெயரிட்டார் இவரது ‘விதவைக்கொரு செய்தி’ என்ற கவிதை ‘திராவிட நாடு’ இதழில் வெளிவந்து இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.
இவர் எல்லப்பன் வாத்தியார், முத்துக்குமார சுவாமி பிள்ளை, பாரதிதாசன் மற்றும் முடியரசன் ஆகியோரிடம் தமிழ் கற்றவர்.
1950 ஆம் ஆண்டு பாரதிதாசன் நடத்திய “அழகின் சிரிப்பு” என்ற கவியரங்கு நிகழ்ச்சியில் முடியரசன் முதல் பரிசையும், வாணிதாசன் 2-வது பரிசையும் வென்றனர்.
வாணிதாசன் பெற்ற பரிசு:
- 1938 இல் முதல் கவிதைக்கு தமிழர் இயக்கத் தலைவர் சி.பா.ஆதித்தனாரிடமிருந்து ரூ.10 பரிசு
- 1950 இல் கோவை முத்தமிழ் மாநாட்டு கவியரங்கில் 2-வது வெள்ளிக்கிண்ணப் பரிசு
- 1979 இல் தமிழக அரசின் பாவேந்தர் பரிசு ரூ. 10000
- 1972 இல் தமிழ்க் கவிஞர் மன்றத்தின் பொன்மோதிரப் பரிசு
- 1973 இல் புதுவை தமிழ் சங்க வெள்ளிக் கேடய பரிசு
- 1975 இல் கவிஞர் இறந்த பிறகு “பாட்டரங்கப் பாடல்” நூலிற்கு முதல் பரிசு ரூ. 2000
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |