Tamil Literature Questions and Answers
தமிழ் இலக்கியம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கிய வகைகளில் ஒன்று. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் என உள்ளன. தமிழ் இலக்கியமானது பழங்காலம், இடைக்காலம், இக்காலம் என்று பிரிவுகளாக உள்ளன.
நாம் இன்றைய பொது அறிவு பகுதியில் தமிழ் இலக்கியம் பற்றிய வினா விடைகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம். இந்த வினா விடைகளானது போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் ஒவ்வொரு தேர்வாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க இப்போது அந்த கேள்வி பதில்களை படித்து அறிவை மேம்படுத்தி கொள்வோம்.
பொது அறிவு வினா விடைகள் |
- எட்டுத்தொகை நூல்களுள் பாண்டியர்களைப் பற்றி மட்டும் கூறும் நூல்கள் யாவை?
விடை: கலித்தொகை, பரிபாடல்
2. பரிபாடலுக்கு உரை எழுதியவர் யார்?
விடை: பரிமேலழகர்
3. உலகின் தோற்றம் குறித்து கூறும் நூல் எது?
விடை: பரிபாடல்
4. கலித்தொகையின் கடவுள் வாழ்த்தில் இடம்பெற்ற கடவுள் யார்?
விடை: சிவன்
5. கலித்தொகையை முதலில் பதிப்பித்தவர் யார்?
விடை: சி.வை தாமோதரம் பிள்ளை
6. கலித்தொகையுள் குறைந்த பாடல்களை கொண்ட திணை எது?
விடை: முல்லை திணை 17 பாடல்கள்
7. பாண்டியரைத் தவிர மற்ற மன்னர்கள் பற்றிய குறிப்பில்லாத சங்க நூல் எது?
விடை: கலித்தொகை
8. ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல் எது?
விடை: கலித்தொகை
9. பெருந்திணைப் பாடல்கள் இடம் பெற்ற ஒரே சங்க நூல் எது?
விடை: கலித்தொகை
10. காமக்கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் யாது?
விடை: கலித்தொகை
பத்துப்பாட்டு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் |
11. அசோகர் காலத்தில் தமிழ் நாட்டில் பரவிய மதம் எது?
விடை: பௌத்தம்
12. தமிழில் எழுதப்பட்ட முதல் ஐந்திலக்கண நூல் எது?
விடை: வீரசோழியம்
13. சந்திரகுப்தன் காலத்தில் பத்திரபாகு முனிவர் மூலம் தமிழகம் வந்த மதம் எது?
விடை: சமணம்
14. மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட முதல் உரைநடை நூல் எது?
விடை: ஸ்ரீ புராணம்
15. நிகண்டு என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?
விடை: மண்டலபுருடர்
16. சித்திரக்கவி பாடுவதில் வல்லவர் யார்?
விடை: சேகனாப்புலவர்
17. யாருடைய படையெடுப்பால் தமிழகத்தில் இஸ்லாம் மதம் பரவியது?
விடை: மாலிக்கபூர்
18. இஸ்லாம் இலக்கியத்தில் பெரியநூல் மற்றும் காப்பிய நூல் எது?
விடை: சீறாப்புராணம்
19. இஸ்லாமிய மதுரகவி, மதுரகவி ராசன் என்று போற்றப்படுபவர் யார்?
விடை: காசிம் புலவர்
20. வசைபாடுவதில் களமேகத்தை ஒத்தவர் யார்?
TNPSC தேர்வுக்கான வினா விடைகள் |
விடை: சவ்வாது புலவர்
21. காமனின் தம்பி யார்?
விடை: சாமன்
22. பாரதக்கதைகளை மிகுதியும் கூறும் நூல் எது?
விடை: கலித்தொகை
23. புராணக் கதைகளை மிகுதியும் கூறும் நூல் எது?
விடை: பரிபாடல்
24. நாடகம் போன்று காட்சி அமைப்புகளைக் கொண்ட நூல் எது?
விடை: கலித்தொகை
25. இசையோடு கூடிய உரையாடல் அமைந்த நூல் எது?
விடை: கலித்தொகை
26. அகநானூற்றில் கடவுள் வாழ்த்தில் இடம் பெற்ற கடவுள் யார்?
விடை: சிவன்
27. ஓர் ஒழுங்கு முறையில் தொகுக்கப்பட்ட ஒரே தொகை நூல் எது?
விடை: அகநானூறு
28. சங்க இலக்கியத்துள் வரலாற்றுச் செய்திகளை அதிகமாகக் கூறும் அகநூல் எது?
விடை: அகநானூறு
29. வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாகக் கூறும் மிக புலவர்கள் யார்?
விடை: பரணர், மாமூலர்
30. புறநானூற்றின் கடவுள் வாழ்த்தில் இடம் பெற்ற கடவுள் யார்?
விடை: சிவன்
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |