தேசிய தபால் தினம் எப்போது? | Desiya Thapal Dhinam in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் தேசிய தபால் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். இது போன்ற கேள்விகளை குழந்தைகள் இளம் வயதிலேயே படித்து தெரிந்து கொண்டால், எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு உதவியாக இருக்கும். பொது அறிவு சார்ந்த பல வினா விடைகளை நாங்கள் எங்களுடைய பொதுநலம்.காம் பதிவில் பதிவிட்டு வருகிறோம். அதனையும் படித்து பயன்பெறுங்கள். சரி வாங்க தேசிய அளவில் தபால் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேசிய தபால் தினம்:
விடை: அக்டோபர் 10-ம் தேதி தேசிய தபால் தினம் கொண்டாடப்படுகிறது.
National Postal Day In Tamil:
- தபால் துறை கடந்த ஆண்டுகளாக ஆற்றிய பங்களிப்பை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக உள்ளது. அஞ்சல் துறை 1764-ம் ஆண்டு துவக்கப்பட்டது.
- மற்ற எல்லா துறைகளை விடவும் மனிதனின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக விளங்கியது தபால் துறை. ஆரம்ப காலத்தில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளை பரிமாறுவதற்கு ஒரு கருவியாக இருந்தது கடிதங்கள். சில கடிதங்கள் காவியமாகவும், வரலாறாகவும் இருந்தது.
- நாடு முழுவதும் தற்பொழுது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன் மக்களிடம் தகவல் பரிமாற்றம் கடிதம் வாயிலாக தான் இருந்தது.
- முன்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளாரா/ இல்லையா என்பதே தபால் மூலமாக தான் வரும். ஆனால் இப்பொழுது தகவல் பரிமாற்றம் பெரும்பாலும் கணினி, தொலைபேசியின் மூலம் வந்துவிடுகிறது.
சர்வதேச யோகா தினம் எப்போது? |
தேசிய தபால் தினம்:
- ஆனால் இன்றும் ஒரு சில இடங்களில் கடித பரிமாற்றங்கள் இருந்து வருகிறது. ஒரு சிலருக்கு பேனாவையும், பேப்பரையும் பார்த்தால் கடிதம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிடும்.
- நமக்கு பிடித்தவர்கள் எழுதிய கடிதத்தை நாம் எப்பொழுதாவது எடுத்து பார்த்தால் நம் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் வந்துவிடும். ஆனால் இப்பொழுது அதெல்லாம் குறைந்துவிட்டது.
- இப்பொழுது நாம் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் எளிமையாக வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் இன்னும் பல வலைத்தளங்களில் தெரிவித்து விடுகிறோம்.
- தபால் துறையில் எவ்வளவோ நலத்திட்டங்கள் உள்ளது. தபால் துறையில் மக்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. அதனை மீட்டெடுக்க முடிந்த வரை கடிதத்தை பழக்கத்துக்கு கொண்டு வருவோமாக. இதை செய்வதால் நம்முடைய நாட்டிற்கு மட்டுமல்ல நம் மனதிற்கும் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்.
உலக தபால் தினம் – World Post Day in Tamil
விடை: உலக அஞ்சல் தினம் அக்டோபர் மாதம் 09–ம் தேதி கொண்டாடப்படுகிறது.
தபால் வாரம்:
விடை: தேசிய தபால் வாரம் அக்டோபர் மாதம் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
உலக சிரிப்பு தினம் |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |