நவீன இந்தியாவின் சிற்பி யார் தெரியுமா..?

Naveena Indiavin Sirpi yaar 

நவீன இந்தியாவின் சிற்பி | Naveena Indiavin Sirpi yaar 

இந்த பூமியில் வாழ்ந்து சாதனை படைத்த ஒவ்வொரு தலைவர்களுக்குமே ஒரு சிறப்பு பெயர் உண்டு. அவர்களுக்கு புனைபெயர்கள் வந்ததற்கான முக்கிய காரணம், பல தலைவர்கள் தன்னலம் இன்றி பிறர் நலனுக்காக பாடுபட்டதால் தான். அப்படி இந்த நாட்டிற்காக பல சோதனைகளை கடந்து சாதனை படைத்த ஒருவரை தான் நாம் நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கிறோம். யார் அந்த சிற்பி என்று தானே யோசிக்கிறீர்கள்..! யோசிக்க வேண்டாம், நாம் இந்த தொகுப்பில் நவீன இந்தியாவின் சிற்பி யார் என்ற கேள்விக்கான விடையை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

நவீன இந்தியாவின் சிற்பி யார்?

விடை: ஜவஹர்லால் நேரு நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்படுகிறார்.

 • சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்கள். இந்தியாவின் பிரதமராக பதினேழு ஆண்டுகள் பதவியில் இருந்து தனது சேவைகளை செம்மையாக செய்தவர் நவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு அவர்கள்.

பிறப்பு:

 • நவீன இந்தியாவின் சிற்பி யார்? இவர் நவம்பர் 14-ம் தேதி, 1889 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் பெயர் மோதிலால் நேரு, ஸ்வரூபராணி ஆகும். இவர் பிறந்த தினத்தை தான் நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.

கல்வி:

 • இங்கிலாந்தில் தனது பள்ளி படிப்பை முடித்தார். தனது பட்டப்படிப்பை கேம்பிரிட்ஜ் மற்றும் ட்ரினிட்டி கல்லூரியில் 1910-ம் ஆண்டு முடித்தார். பின்னர் தனது பணிகளை செய்வதற்காக இந்தியாவிற்கு திரும்பினார்.

அரசியல்:

 • 1919-ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்தவர். 1920-ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று 1921-ம் ஆண்டு சிறைக்கு சென்றார். இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களில் இவர் மிகவும் முக்கியமான ஒருவர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் பிரதமராக பொறுப்பேற்றார்.

நலப்பணிகள்:

 • நேரு அவர்கள் பிரதமராக இருந்த பொழுது 1951-ல் ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கினார். AIIMS, IIT, IIM, NIT போன்ற கல்வி நிலையங்களை உருவாக்கினார். இலவச கட்டாய கல்வியை அறிமுகப்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வந்தார்.
 • ஏழை எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தவர் ஜவகர்லால் நேரு அவர்கள். இந்திய தேசத்தை தொலைநோக்கு பார்வையோடு வளர்ச்சிக்கு வழி காட்டியவர் நேரு. இந்தியா பன்முக தன்மையோடு மத சார்பற்ற நாடாக விளங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.
 • கல்வி, மருத்துவம், பொருளாதாரம் என அனைத்து துறையிலும் தனது கால்தடத்தை பதித்தவர். இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம், தொன்மை போன்றவற்றில் பற்று கொண்டவராக இருந்த போதிலும் அதில் மூட நம்பிக்கையோ, வெறியோ இல்லாமல் வாழ்ந்து காட்டியவர்.

நூல்கள்:

 • 1934-ல் “உலக வரலாற்றின் காட்சிகள்”
 • 1936-ல் “சுயசரிதை”
 • “இந்தியாவின் கண்டுப்பிடிப்பு”
 • இந்த படைப்புகள் ஒரு எழுத்தாளராக மட்டும் பெருமை சேர்க்காமல் அவருக்கு நல்ல பெயரையும் தேடி தந்தது.

மறைவு:

 • Naveena Indiavin Sirpi: சுதந்திர இந்தியாவுக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட ஜவஹர்லால் நேரு அவர்கள் மாரடைப்பால் மே மாதம் 27-ம் தேதி 1964-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.
நவீன இந்தியாவின் தந்தை யார்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil