பாடும் பறவை எதுவென்று தெரியுமா.?

Advertisement

பாடும் பறவை எது

இன்றைய காலத்தில் பலரும் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கிறது. இதற்காக பலரும் தங்களை தயார்படுத்தி கொள்கிறார்கள். அரசு தேர்வுகளில் பொது அறிவு என்பது தனிப்பிரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக செய்தித்தாள், செய்திகள் போன்றவை தினந்தோறும் படித்து வருகிறார்கள். நம் பதிவிலும் தினந்தோறும் பொது அறிவு சம்மந்தபட்ட பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பாடும் பறவை எது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

பாடும் பறவை:

பாடும் பறவை எதுவென்றால் குயில்.  இவை அழகாகப் பாடும் பறவை இனத்தைச் சேர்ந்தது. மற்ற பறவைகளைப் போல குயிலுக்கு கூடு கட்டத் தெரியாது.

குயில் என்பது ஆசியா, ஆஸ்திரேலியா, அமைதிப் பெருங்கடல் ஆகிய இடங்களில் காணப்படும் குயில் குடும்பத்தைச் சேர்ந்த பேரினம் ஆகும். இவை பெரிய பால் ஈருருமை குயிலாகவும், பழங்களையும் பூச்சிகளையும் உண்பதோடு, பெரிய சத்தத்தை எழுப்பக் கூடியனவாகவும் உள்ளன. இவை தங்கள் முட்டைகளை பிற பறவைகளின் கூடுகளில் இடும் வழக்கத்தைக் கொண்டவையாக இருக்கிறது.

உடல் அமைப்பு:

பாடும் பறவை எது

குயில்கள் கூடு கட்டாமல் பிற பறவைகளின் கூடுகளில் முட்டையிடுபவை. இந்தியக் குயில்கள் பெரும்பாலும் காகக் கூடுகளில் முட்டையிடுகின்றன. முட்டையின் நிறம் வெளுப்பான பச்சை. குயிற் குஞ்சுகள் முதலில் பொரிப்பதோடு வேகமாகவும் வளர்கின்றன. இந்தியக் குயில் 33 சென்டி மீட்டர் வரை வளர்கிறது.

உணவு:

ஆல், அத்திப்பழங்களை முதன்மையாக உண்ணும். பூச்சிகளையும் மயிர்க்கொட்டிகளையும் உண்கிறது. குயில்கள் பெரிதும் பழங்களையே விரும்பி உண்ணுகின்றன. புதர்களிலுள்ள குற்றுச் செடிகளின் பழங்களையும், கம்பளிப் புழுக்களையும், பூச்சிகளையும் சாப்பிட கூடியது.

குயிலானது காகத்தை விட சிறியதாக காணப்படும். இவை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வால் ஆனது நீளமாக காணப்படும். ஆண் குயில் கருப்பாக இருக்கும், பெண் குயில் வெள்ளையாக காணப்படும். இவை கூட்டமாக இருக்காது, தனியாக பறக்க கூடியது. அது போல ஆண் குயில்களே தான் அதிகமாக பார்க்க முடியும், பெண் குயிலை எப்போதாவது தான் பார்க்க முடியும்.

என்ன சத்தம் எழுப்பும்:

ஆண் குயில், பெண் குயில் இரண்டுமே வெட்கப்படும் பண்பு உடையதாகக் இருக்கிறது. இவ பெரும்பாலும் மரக்கிளைகளில் தான் அமர்ந்திருக்கும். அதிகாலையில் பெண்குயில்கள் ஆனது  பிங், பிங் என்றும், ஆண் குயில்கள் உ..ஓ..உ..ஓ..உ..ஓ.. என்றும் பாட கூடியது, பெண் குயில்கள் எத்தனை முறை பாடுகிறதோ அத்தனை முறை ஆண் குயில்களும் பதிலுக்கு பாட கூடியது. பகல் பொழுதில் மட்டுமே பாட கூடியது.

குயில்கள் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றன. குயிலுக்கு கூடு கட்ட தெரியாது. இவை மற்ற பறவைகளின் கூடுகளில் சென்று முட்டை இடுகின்றன.  ஏப்ரல் – ஆகஸ்ட் போன்ற மாதங்களில் தான் குயில் இனப்பெருக்கம் செய்யும். குயிலின் முட்டையானது இளம் சாம்பல் மற்றும் பச்சை நிறத்தில் காணப்படும்.

TNPSC தேர்வுக்கு பயன்படும் கேள்வி, பதில்கள்

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil

 

Advertisement