தமிழ்நாடு எவ்வாறு ஒளிர வேண்டும் என பாரதியார் கூறினார்

Advertisement

தமிழ்நாடு எவ்வாறு ஒளிர வேண்டும் என பாரதியார் கூறினார்?

தமிழ் மொழி, தமிழ் பேசும் பலருடைய தாய்மொழி. திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழி. எல்லா மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குகிறது. பாரதி எனும் புரட்சி கவிஞன் தமிழையும் மக்களையும் அன்போடு நேசித்த பெரும் காதலன். அவன் கொண்ட தமிழ் பற்று அளவிட முடியாதது. பாரதியார் ‘எட்டயபுரம்’ என்னும் ஊரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ‘ சுப்பிரமணியன்’ ஆகும். இவர் பதினோரு வயதில் தமது கவித்திறமையால் ‘ பாரதி ‘ என்ற பட்டத்தைப் பெற்றார். மேலும், இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், இதழாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர் எனப் பல்திறன் பெற்ற வித்தகர் ஆவார். சரி இந்த பதிவில் தமிழ்நாடு எவ்வாறு ஒளிர வேண்டும் என் பாரதியார் கூறினார் என்பதை பற்றியும்.. பாரதியார் பற்றிய சில குறிப்புகளையும் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

தமிழ்நாடு எவ்வாறு ஒளிர வேண்டும் என பாரதியார் கூறினார்?

பொருந்தாத பழைய கருத்துக்களால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிர வேண்டும்.

பாரதியார் வினா விடை – Bharathiyar Questions and Answers in Tamil:

1 பாரதியார் நடத்திய இதழ்களின் பெயர் என்ன?

விடை: இந்தியா, விஜயா

2 பாரதியார் எத்தகைய ஆற்றலைப் பெற்றிருந்தார்?

விடை; கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூக சீர்திருத்த சிந்தனையாளர், விடுதலை போராட்ட வீரர் பன்முக ஆற்றல் பெற்றிருந்தார்.

3 “சிந்துக்குத் தந்தை” எனப் பாரதியாரைப் புகழ்ந்த கவிஞர் யார்?

விடை: பாரதிதாசன்

4 வாழ்க நிரந்திரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே என்று தமிழை போற்றியவர் யார்?

விடை: பாரதியார்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வினா விடை

பாரதியார் வாழ்ந்த காலம்: 11.12.1882 – 11.09.1921(அகவை 38)

பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.

பாரதியாரின் பெற்றோர்: சின்னச்சாமி அய்யர் – லெட்சுமி அம்மாள்

பாரதியாரின் இயர் பெயர்: சுப்ரமணிய பாரதியார்.

பாரதியார் 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.

பாரதியாரின் சிறப்பு பெயர்கள்: மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்.

பாரதிக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் – வ.ரா(ராமசாமி அய்யங்கார்)

பாரதி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டார்.

பாரதி என்பதன் பொருள் – கலைமகள்.

பாரதியின் முதல் பாடல் “தனிமை இரக்கம்” வெளியிட்ட பத்திரிக்கை – மதுரையிலிருந்து வெளிவந்த “விவேக பானு” என்ற பத்திரிக்கை.

பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி – மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி(1904)

பாரதியார் எந்த பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் – இந்தியா என்ற வாரப் பத்திரிக்கை (1906ல் சென்னையில் பாரதியாரே தொடங்கி நடத்தினார்)

பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், சக்கரவர்த்தினி பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார்.

பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்: பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு முதலியன.

பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் எட்டையபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணி அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களால் 11.12.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது.

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement