இந்தியாவின் பெண் ஆளுநர்கள் பட்டியல்

Advertisement

இந்திய நாட்டின் பெண் ஆளுநர்கள் பெயர் பட்டியல் | Indian Woman Governor List in Tamil

கவர்னர் (Governor) என்றால் ஆட்சி செய்பவர் என்று பொருள் ஆகும். கவர்னர் என்பவரை தமிழில் ஆளுநர் என்று சொல்வார்கள். பொதுவாக ஆளுநர் என்பவர் இறையாண்மைக்கு உட்படாத அரசு ஒன்றின் அதன் அரசுத்தலைவருக்குக் கீழ் செயல்படும் நிறுவாக அதிகாரி ஆவார். இந்தியாவின் மாநிலங்களில் ஆளுநர்களும், இந்தியாவின் ஆட்சிப்பகுதிகளில் துணை ஆளுநர்களும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்றுப் பணியாற்றுகின்றனர். ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்த பதிவில் இந்தியாவில் ஆளுநர்களாகவும் துணைநிலை ஆளுநர்களாகவும் பொறுப்பாற்றிய பெண்களின் பட்டியல்களை கீழ் படித்தறியலாம் வாங்க.

தமிழ்நாட்டின் ஆளுநர் பெயர் என்ன?

பெண் ஆளுநர்கள் பட்டியல் | Indian Woman Governor List in Tamil:-

எண் பெண் ஆளுநர்கள் பெயர்கள் துவக்கம் முடிவு மாநிலம்
1 இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு 15 ஆகஸ்டு 1947 2 மார்ச் 1949 உத்தரப் பிரதேசம்
2 பத்மசா நாயுடு 3 நவம்பர் 1956 31 மே 1967 மேற்கு வங்காளம்
3 விஜயலட்சுமி பண்டிட் 28 நவம்பர் 1962 18 அக்டோபர் 1964 மகாராஷ்டிரா
4 சாரதா முகர்ஜி 5 மே 1977 14 ஆகஸ்டு 1978 ஆந்திரப் பிரதேசம்
14 ஆகஸ்டு 1978 5 ஆகஸ்டு 1983 குஜராத்
5 குமுத்பேன் ஜோஷி 26 நவம்பர் 1985 2 பிப்ரவரி 1990 ஆந்திரப் பிரதேசம்
6 ஜோதி வெங்கடாசலம் 14 அக்டோபர் 1977 27 அக்டோபர் 1982 கேரளா 
7 ராம் துலாரி சின்கா 23 பிப்ரவரி 1988 12 பிப்ரவரி 1990 கேரளா 
8 சரளா கிரெவால் 31 மார்ச் 1989 5 பிப்ரவரி 1990 மத்தியப் பிரதேசம்
9 சந்திரவதி 19 பிப்ரவரி 1990 18 டிசம்பர் 1990 புதுச்சேரி
10 இராசேந்திர குமாரி பாஜ்பாயி 2 மே 1995 18 டிசம்பர் 1990 புதுச்சேரி
11 இரஞ்சனி ராய் 23 ஏப்ரல் 1998 29 ஜூலை 2002 புதுச்சேரி
12 எம். பாத்திமா பீவி 25 ஜனவரி 1997 1 ஜூலை 2001 தமிழ்நாடு
13 சீலா கௌல் 17 நவம்பர் 1995 23 ஏப்ரல் 1996 இமாச்சலப் பிரதேசம்
14 இரமா தேவி 26 ஜூலை  1997 1 டிசம்பர் 1999 இமாச்சலப் பிரதேசம்
2 டிசம்பர் 1999 20 ஆகஸ்டு 2002 கர்நாடக
15 பிரதிபா பாட்டில் 8 நவம்பர் 2004 23 ஜூன் 2007 ராஜஸ்தான்
16 பிரபா ராவ் 19 ஜூலை 2008 24 ஜனவரி 2010 இமாச்சலப் பிரதேசம்
25 ஜனவரி 2010 26 ஏப்ரல் 2010 ராஜஸ்தான்
17 கம்லா பெனிவால் 27 நவம்பர் 2009 6 ஜூலை 2014 குஜராத்
18 ஊர்மிளா சிங் 25 ஜனவரி 2010 27 ஜனவரி 2015 இமாச்சலப் பிரதேசம்
19 மார்கரட் அல்வா 12 மே 2012 7 ஆகஸ்டு 2014 ராஜஸ்தான்
20 சீலா தீக்‌சித் 04 மார்ச் 2014 25 ஆகஸ்டு 2014 கேரளா
21 மிருதுளா சின்கா 31 ஆகஸ்டு 2014 25 அக்டோபர் 2019 கோவா (மாநிலம்)
22 திரௌபதி முர்மு 18 மே 2015 12 ஜூலை 2021 ஜார்க்கண்ட்
23 நச்மா எப்துல்லா 21 ஆகஸ்டு 2016 10 ஆகஸ்டு 2021 மணிப்பூர்
24
ஆனந்திபென் படேல்
23 ஜனவரி 2018 18 ஜூலை 2019 மத்தியப் பிரதேசம்
29 ஜூலை 2019 பதவியில் உத்திரப் பிரதேசம்
25 பேபி ராணி மௌரியா 26 ஆகஸ்டு 2018 10 செப்டம்பர் 2021 உத்தராகண்ட்
26 அனுசுயா யுகே 29 ஜூலை 2019 பதவியில் சட்டீஸ்கர்
27 தமிழிசை சௌந்தரராஜன் 8 செப்டம்பர் 2019 பதவியில் தெலுங்கானா
தமிழிசை சௌந்தரராஜன் 18 பிப்ரவரி 2021 பதவியில் புதுச்சேரி

 

1 இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்?
2 இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் யார்?
3 இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் யார்?
4 இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி யார்?
5 இந்தியாவின் முதல் பெண்கள் 

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement