மகாவீரர் பிறந்த இடம் எது? | Mahavir Birth Place in Tamil

Advertisement

மகாவீரர் பிறந்த ஊர் எது? 

நண்பர்கள் அனைவருக்கும் பொதுநலம் பதிவின் மகிழ்வான வணக்கங்கள்.. இந்த பதிவில் மகாவீரர் பிறந்த இடம் எது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். தொடர்ந்து நமது பதிவில் பலவகையான பொது அறிவு (GK in Tamil) சார்ந்த விஷயங்களை பதிவு செய்து வருகின்றோம். அதனை தொடர்ந்து இந்த பதிவில் மகாவீரர் பிறந்த இடத்தை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..

ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரம் எது?

மகாவீரர் பிறந்த இடம் எது?:

விடை: பீஹார் மாநிலத்தில் வைஷாலிக்கு அருகிலுள்ள குண்டக் கிராமம் எனும் ஊரில் பிறந்தார்

மகாவீரர்:

உலகிற்கு சமண சமயத்தை அறிமுகப்படுத்தியவர் மாபெரும் ஜைன மதத்துறவி மகாவீரர் ஆவார். மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற போதனையை போதித்தவர்.

இவர் அரச குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு அதிக நாட்டம் ஆன்மீகத்திலும், தியானத்திலும் தான் இருந்தது. பின்னர் யசோதரை என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இல்லற வாழ்க்கையை நடத்தி வந்தார்.

சமண சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டதால் இல்லற வாழ்க்கையை விட்டுவிட்டு துறவற வாழ்க்கையை மேற்கொள்ள ஆரம்பித்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் பெயர் என்ன?
இந்திய மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்கள்

மகாவீர் போதனை:

மகாவீரின் போதனைகளனைத்தும் அன்பு, மனிதநேயம், அஹிம்சையை அடிப்படையாக கொண்டே விளங்கியது. மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் போன்றவற்றை கடைப்பிடித்தால், ‘சித்த நிலையை அடையலாம்’ எனவும் போதித்தார்.

ஆன்மீக பயணம்:

உலகில் வாழும் மனிதர்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடி 12 ஆண்டுகள் தியான தேடலில் ஈடுபட்டவர். 12 ஆண்டு சாலா எனும் மரத்தடியில் ஞானத்தை பெற்றார். அதிலிருந்து மக்கள் அனைவரும் இவரை மகாவீரர் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். மகாவீரர் என்பதற்கு பொருள் “பெரும்வீரர்” என்று அர்த்தமாகும். இவர் போதித்த சமண சமயம் இந்தியா முழுவதும் பரவ தொடங்கியது. வெறும் காலில், துணிகள் எதுவுமில்லாமல், அவர் போதித்த போதனைகளைக் கேட்க அனைத்துத்தரப்பு மக்களும் திரண்டு வந்தனர்.

இந்தியாவின் ஆரஞ்சு நகரம்

இறப்பு காலம்:

உயிர் வகைகளில் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்ட வேண்டும், பிற உயிர்களுக்கு தீங்கு செய்வதையும், உயிர்களை கொள்ளாமல் இருத்தலே அறநெறி எனக் காட்டி அகிம்சை வழியையும், அன்பு வழியையும் மக்களுக்கு உணர்த்தியவர்.  சமண சமயத்தின் திருவுருவமாகவே வாழ்ந்த மகாவீரர் கி. மு. 527-ல் பீகாரிலுள்ள “பாவா” என்னும் இடத்தில் தன்னுடைய 72-வது வயதில் இவ்வுலகை விட்டு சென்றார்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> gk in tamil
Advertisement