மணிமுத்தாறு அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

Manimuthar Dam

மணிமுத்தாறு அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

எங்கள் வாசகத்தை வாசித்து தெரிந்துகொள்ள வந்தமைக்கு நன்றி.. இன்றைய பதிவில் மணிமுத்தாறு அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டது என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். இது போன்ற பொது அறிவு சார்ந்த வினா விடைகளை தெரிந்து கொள்ளும் போது அரசு நடத்தும் பொது தேர்வுகளில் கலந்துகொள்ளும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சரி வாங்க மணிமுத்தாறு அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

மணிமுத்தாறு அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது:

விடை: தாமிரபரணி

மணிமுத்தாறு அணை பற்றிய சில தகவல்கள்:

திருநெல்வேலியிலிருந்து 50.8 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டது மணிமுத்தாறு அணை. 1958-ஆம் ஆண்டில் சிங்கம்பட்டி அருகில் கட்டப்பட்டது. மழைக்காலத்தில் வங்கக்கடலில் கலக்கும் நீரை சேமிக்கக் கட்டப்பட்டது.

118 அடிவரை நீர் தேக்கலாம். இவ்வணைக்கட்டு 3 கி.மீட்டர் நீளம் உடையது. இதனால் 65000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதாவது 26315 ஹெக்டேர் நிலங்கள் விவசாயத்தைக் காப்பாற்றி வருகிறது.

வடக்கே நாங்குநேரி மற்றும் திசையன்விளை, தெற்கே வீரவநல்லூர் மற்றும் கரிசல்பட்டி ஆகியவை இவ்வணைக்கட்டால் பாசன வசதி பெறுகிறது. இவ்வணைக்கட்டானது புவியீர்ப்பு விசையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது. இதன் உயரம் அஸ்திவாரத்துடன் சேர்ந்து 150 அடி (46 மீட்டர்) உடையது.

நீளம் 9268 அடியாகும். அதாவது 2825 மீட்டர். இவ்வணை கிடைமட்ட அழுத்தத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்ட Gravity Dam ஆகும். இவ்வணைக்கட்டில் 7 Spillway உள்ளது.

தாமிரபரணி நதியின் குறுக்காக 3 கிலோமீட்டரில் மணிமுத்தாறு அணை கட்டப்பட்டுள்ளது. இயற்கையாகவே மணிமுத்தாறு தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறாக இருப்பதாலும், அணைக்கட்டு அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ளதாலும் மணிமுத்தாறு அணை எனப் பெயர் வழங்கப்பட்டது.

மணிமுத்தாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.

இதன் இன்னொரு கிளை கோதை ஆறாக கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கிறது.

நெல்லை மாவட்டம் களக்காடு மலைப்பகுதியில் செங்காந்தேரி அருகே பச்சையாற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாகப் பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து விழுகிறது.

அணைக்கட்டு போல் தீயவர்களுக்கு அசைந்து கொடுக்காமல் மக்களின் நலனுக்காக உழைத்த மாமனிதர் கே.டிகோசல்ராமின் பெயரை உச்சரித்தவாறே இம்மணிமுத்தாறு இன்றளவும் ஓடிக் கொண்டிருக்கிறது.

மனிதரை நல்வழிப்படுத்த அறநூல்களும் நல் ஒழுக்கமும் தேவை. ஓடும் ஆற்றை நம்வழிப்படுத்தி மக்கள் பயன்பெற கே.டிகோசல்ராமின் உழைப்பு வழிசெய்தது.

தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளின் பெயர்கள்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil