மனித உடல் பொது அறிவு வினா விடை..?

Advertisement

மனித உடல் பற்றிய பொது அறிவு கேள்விகள் மற்றும் விடைகள்..!

பொதுநலம்.காம் நண்பர்களுக்கு எங்களது அன்பான வணக்கம். தொடர்ந்து நமது பதிவில் பலவகையான பொது அறிவு (GK in Tamil) சார்ந்த விஷயங்களை பதிவு செய்து வருகின்றோம். மனித உடலின் அனைத்துச் செயல்பாடுகளும் எலும்புகள் மற்றும் தசைகளின் இயக்கத்தின் உதவியால் நடைபெறுகின்றன. மனித உடல் எலும்புகளால் ஆன கட்டமைப்பால் உருவாக்கப்பட்டு, தசைகளால் இணைக்கப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பு எலும்பு மண்டலம் எனப்படுகிறது. பெரும்பாலான தசைகள், உடலின் பல்வேறு உறுப்புகளின் இயக்கத்திற்கோ, உடல் நிலையாக நிற்பதற்கோ உதவுகின்றன. சரி இன்றைய பதிவில் மனித உடல் பற்றிய பொது அறிவு வினா விடை தகவல்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

Human Body General Knowledge Questions in Tamil:

மனித உடல் பற்றிய தகவல்கள்
பொது அறிவு வினாக்கள் விடை 
* மனித உடலின் மிக கனமான உறுப்பு எது? தோல்
* மனித உடலில் எத்தனை எலும்புகள் இருக்கின்றன? 206
* நமது உடலில் ஓடும் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை தருவது? ஹீமோகுளோபின்
* மனிதனின் இயல்பான நாடித்துடிப்பு 1 நிமிடத்திற்கு எவ்வளவு? 72
* மனித உடலில் காணக்கூடிய மிக நீளமான எலும்பு எது? தொடை எலும்பு
* மனித உடலில் மிக சிறிய எலும்பு எங்கு உள்ளது? காது
* குழந்தை பிறக்கும் பொழுது எத்தனை எலும்புகளுடன் பிறக்கின்றன? 300
* மனித இதயம் எத்தனை அறைகள் கொண்டது? நான்கு
* மனித உடலின் எந்தப் பகுதி சூரிய ஒளியைப் பயன்படுத்தி வைட்டமின் D-ஐ உற்பத்தி செய்கிறது? தோல்
* சிறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகு? நெஃபிரான்

 

மனித உடல் பற்றிய தகவல்கள்
பொது அறிவு வினாக்கள் விடை 
* மனித பற்கள் மொத்தம் எண்ணிக்கை? 32
* நமது உடலில் ஒரு நாளைக்கு சுரக்கப்படும் உமிழ்நீர் அளவு? 1.5 லிட்டர்
* இரத்த ஓட்டத்தை கண்டறிந்தவர் யார்? வில்லியம் ஹார்வி
* இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள்? 120 நாட்கள்
* இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படும் நோய்? லுக்கீமியா
* இரத்த வகைகளை கண்டறிந்தவர் யார்? லேண்டஸ்டைனர்
* அனைவருக்கும் பொருந்தக்கூடிய இரத்த பிரிவு? O
* பெண் தன்மைக்கு காரணமான ஹார்மோன்? ஈஸ்ட்ரோஜன் 
* மனித உடலில் வியர்க்காத பகுதி என அழைக்கப்படுவது? உதடு
* தாய்ப்பாலில் உள்ள புரதம்? லேக்டோபெரின் 

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement