யோகா தினம் எப்போது? | Ulaga Yoga Dhinam
தோழர் தோழிகள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.. இன்றைய பொது அறிவு பகுதியில் சர்வதேச யோகா தினம் எப்போது என்று தெரிந்துக்கொள்ளலாம். யோகா பயிற்சியை தினமும் செய்வதால் மன அழுத்தம் குறையும், ஆயுள் அதிகரிக்கும், தூக்கமின்மை பிரச்சனை சரியாகும், நாள்பட்ட எந்த விதமான நோய்களைம் குணப்படுத்தும் ஆற்றல் உடையது இந்த யோகா கலை. யோகாசனங்கள் செய்யும் போது உடலை நன்கு வளைத்து யோகா பயிற்சியை செய்வதால் உடல் அழகான தோற்றத்தை கொடுக்கிறது. இத்தகைய சிறப்புகளை உடைய யோகா பயிற்சி தினம் எப்போது என்று தெரிந்துக்கொள்ளாமல் இருக்கலாமா? வாங்க இப்போது தெரிஞ்சிக்கலாம்..!
உலக சுகாதார தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? |
சர்வதேச யோகா தினம் எப்போது?
விடை: ஜூன் மாதம் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
யோகாவின் சிறப்புகள்:
2015-ஆம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
யோகா பயிற்சியினை அனைவருமே தினமும் தவறாமல் செய்ய வேண்டும். யோகா செய்வதால் உடலுக்கு அத்தனை நன்மைகள் கிடைக்கிறது.
யோகா என்பது ஒன்றிணைத்தல் அல்லது மனதை ஒருமுகப்படுத்துதல் என்பதாகும். தினமும் யோகா செய்வதால் மனதில் உள்ள அழுத்தங்கள் குறைந்து மனதை அமைதி நிலையில் கொண்டு செல்லும்.
இன்றைய தொற்று பரவும் காலத்தில் மக்கள் பெரிதும் யோகா பயிற்சியினை செய்வதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள்.
பகவத் கீதையில் கூட யோகா குறித்து கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார். கர்மாவுக்கும் யோகாவுக்கு தொடர்புள்ளது. கர்மாவின் செயல்திறன்தான் யோகா.
உலக காற்று தினம் |
பழமை வாய்ந்த யோகா தினம்:
யோகா கலை தோன்றி பல வருடங்கள் கடந்துவிட்டன. ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த யோகா கலையின் பெருமையை மக்கள் அனைவருக்கும் பரவ செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றினார்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |