வானவில் என்பது என்ன?

Advertisement

வானவில் பற்றிய செய்திகள்

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பான வணக்கங்கள்.. இன்றைய பதிவில் வானவில் என்பது என்ன, வானவில் எப்படி தோன்றுகிறது, வானவில் தோன்றும் நிறங்கள் என்னென்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். இது போன்ற பொது அறிவு சார்ந்த விஷயங்கள் தெரிந்துகொள்வது மிகவும் நல்ல செயலாகும். ஆம் ஏதாவது பொது தேர்வுகளில் கலந்து கொள்ளும் போது அப்போது வானவில் பற்றிய பொது அறிவு சார்ந்த வினாக்கள் கேட்கப்பட்டிருந்தால் அந்த வினாக்களுக்கு விடையளிக்க தங்களுக்கு மிகவும் சுலபமாக இருக்கும். சரி வாங்க வானவில் பற்றிய தகவல்களை இங்கு நாம் பார்க்கலாம்.

வானவில் என்பது என்ன?

மழைத் துளிகளின்னூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது முழு அக எதிரொளிப்பு நடைபெறுவதனால் ஒளி பிரிகையடைந்து ஏழு நிறங்கள்(VIBGYOR) வானத்தில் தெரிகின்றன. நீர்த் திவலைகளிலும் சூரிய ஒளி பிரதிபலிக்கும்போது வானவில் தோன்றுகிறது.

வானவில்லில் ஏழு வண்ணங்கள் தெரியும். ஆங்கிலத்தில் இதனை VIBGYOR என்று குறிப்பிடுவார்கள்.

1 சிவப்பு

2 ஆரஞ்சு

3 மஞ்சள்

4 பச்சை

5 நீலம்

6 கருநீலம்

7 ஊதா

என்பதே இந்த வண்ணங்கள். பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் வானவில் தோன்றுகிறது. வானவில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும். வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது வானவில் வட்ட வடிவில் தெரியும்.

வானவில் எப்படி தோன்றுகிறது?

மழைத்துளியின் கோளப் பகுதியின் மீது சூரிய ஒளி ஊடுருவி நமது கண்ணில் படும்போது தோன்றுவதே வானவில்.

ஒளிவிலகல் என்னும் Refraction தான் இந்தச் செயல். இயற்கையின் அழகிய தோற்றங்களில் ஒன்றான ஏழு வண்ணங்கள் கொண்ட வானவில் தோன்ற மழைதான் வேண்டும் என்றில்லை. ஏதேனும் நீர்த் துளிகளோ, பனி படர்ந்த கண்ணாடியோ போதும்.

சூரிய ஒளியில் வண்ணஜாலங்கள் தோன்றும். வானத்தில் தான் என்றில்லை, நீர்நிலைகளிலும், முகம் பார்க்கும் கண்ணாடிகளிலும் , கார் windshield- லும் இது ஏற்படும். வானத்தில் தோன்றுவதே வானவில் எனப் படுகிறது.

இதற்கு முக்கிய நிபந்தனைகள் : சூரியன் நமக்குப் பின்புறம் அடிவானத்திலிருந்து 42 டிகிரி உயரம் மட்டுமே, அல்லது அதற்கும் கீழ், இருக்க வேண்டும்.

சூரியன் எவ்வளவு கீழே இருக்கிறதோ அவ்வளவு பெரிய வட்டமாக வானவில் தெரியும். மழைத்துளிகளோ, பனியோ நமக்கு முன்புறம் இருக்க வேண்டும்.

அப்போது அவற்றின் மீது படும் சூரிய ஒளி முறிந்தது போலாகி நம் பார்வையில் (கண்ணாடியில் காண்பது போன்று ) வண்ணங்களை அள்ளி வீசும்.

வானவில்லில் பல வண்ணச் சேர்க்கைகள் ஒன்றின் மீது ஒன்று படர்ந்து (overlapped) காணப்பட்டாலும் நம் கண்களுக்கு VIBGYOR எனச் சுருங்கச் சொல்லப் படும் ஏழு வண்ணங்கள்தான் தெளிவாகத் தோன்றும்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement