வெள்ளை அறிக்கை | White Paper Meaning in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. அரசு நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதை உறுதிப்படுத்துவது என்பதைத் தாண்டி, நிலைமை மோசமானதற்குத் தான் காரணமில்லை என்பதையும் அதைச் சீர்ப்படுத்துவது எளிதாக இல்லை என்பதையும் எடுத்துச் சொல்வதற்காகவும் வெள்ளை அறிக்கைகள் பயன்படுகின்றன. சரி இந்த பதிவில் வெள்ளை அறிக்கை என்றால் என்ன? என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்..
வெள்ளை அறிக்கை என்றால் என்ன?
வெள்ளை அறிக்கை என்பது அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் அறிக்கை ஆகும். அத்தகைய அறிவிப்பு மிக தெளிவாக இருக்க வேண்டும். குழப்பும் வகையில் இருக்க கூடாது.
அந்த வெள்ளை அறிக்கையில் உள்ளதை உள்ளபடி சொல்லிருக்க வேண்டும்.
உண்மை நிலவரத்தை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
வெளிப்படையான புள்ளி விவரங்களோடு தெளிவுபடுத்துவது.
சிரமமான விஷயங்களை பற்றி மக்களுக்கு தெளிவாக சுருக்கமாக தெரிவிப்பதே வெள்ளை அறிக்கை.
இதனால் அரசின் குறிக்கோளை மக்கள் தெளிவாக அறிய முடியும்.
இந்த வெள்ளை காகிதம் எந்த சொல் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து தோன்றியது.
அரசாங்க கொள்கைகளை முன்வைப்பதில் வெள்ளை ஆவணங்கள் முக்கிய பங்கு வகுக்கிறது.
மக்களின் கருத்துக்களையும் இதனால் அரசு அறிய முடியும்.
மக்களிடையே அரசின் கொள்கைகள் குறித்து விழிப்புணர்வுகளை உருவாக்கவும் உதவுகிறது.
வெள்ளை அறிக்கை என்பது ஒரு அரசாங்கமோ அல்லது ஒரு அமைப்போ பிரச்சனைக்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகும். வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட்ட அமைப்பின் தெளிவான குறிக்கோளை மக்கள் அறிந்துகொண்டு, விவாதிக்கவோ, ஆலோசிக்கவோ முடியும். வெள்ளை அறிக்கை, ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக அல்லது புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய வெளியிடப்படுகிறது.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |