ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடைகள்

6th Social Book Back Answers in Tamil

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடைகள் | 6th Social Book Back Answers in Tamil

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் ஒருமதிப்பேன் வினா விடைகளை பதிவு செய்துள்ளோம். குறிப்பாக இந்த பதிவு ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், பொது தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இருவருக்குமே ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகளை பற்றி தேர்வுகளில் கேட்பார்கள். அந்த வகையில் இந்த பதிவு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடைகள் கீழ் இப்பொழுது பார்க்கலாம்.

வரலாறு – ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடைகள்

பாடம் 1 வரலாறு என்றால் என்ன? ஒரு மதிப்பெண் வினா விடைகள்..!

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேரிக்க மேற்கொண்ட நடவடிக்கை

 • வணிகம்
 • வேட்டையாடுதல்
 • ஓவியம் வரைதல்
 • விலங்குககள் வளர்த்தல்

விடை : வேட்டையாடுதல்II. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.

1 கூற்று: பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாடச் செல்லும்போது நாய்களை உடன் அழைத்துச் சென்றனர்

காரணம்: குகைகளில் பழைய கற்கால மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகள் வருவதை நாய்கள் தமது மோப்ப சக்தியினால் அறிந்து அவனுக்கு உணர்த்தும்.

 • அ. கூற்று சரி , காரணம் தவறு
 • கூற்று சரி, கூற்றுக்கான காரணமும் சரி
 • கூற்று தவறு , காரணம் சரி
 • கூற்று தவறு , காரணம் தவறு

விடை: கூற்று சரி, கூற்றுக்கான காரணமும் சரி

2. பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் அகழாய்வுகள் மூலமாக தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அப்பொருட்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ளப் பாதுகாக்கப்படுகின்றன. இக்கூற்றுடன் தொடர்புடையது எது?

 • அருங்காட்சியகங்கள்
 • புதைபொருள் படிமங்கள்
 • கற்கருவிகள்
 • எலும்புகள்

விடை : அருங்காட்சியகங்கள்

3. தவறான வாக்கிய இணையைக் கண்டுபிடி

 • பழைய கற்காலம் – கற்கருவிகள்
 • பாறை ஓவியங்கள் – குகைச் சுவர்கள்
 • செப்புத்தகடுகள் – ஒரு வரலாற்று ஆதாரம்
 • பூனைகள் – முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு

விடை : பூனைகள் – முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு

4. தவறான வாக்கிய இணையைக் கண்டுபிடி

 • பாறைகள் மற்றும் குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
 • வேட்டையாடுதல் குறிப்பதாக ஓவியங்கள் இருந்தன.
 • பழங்கால மனிதன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேட்டையாடுதல் எடுத்துரைப்பதற்காக வரைந்திருக்கலாம்.
 • பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன

விடை: பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தனIII. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் ________________

விடை : குகைகள்

2. வரலாற்றின் தந்தை ________________

விடை : ஹெரோடோஸ்

3. பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு ________________

விடை : நாய்

4. கல்வெட்டுகள் ________________ ஆதாரங்கள் ஆகும்.

விடை : தொல்பொருள்

5. அசோகச் சக்கரத்தில் ______ ஆரக்கால்கள் உள்ளன.

விடை : 24IV. சரியா ? தவறா ?

1. பழைய கற்காலத்தைச் சார்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன.

விடை : சரி

2. பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன

விடை : சரி

3. அசோகரது காலத்தில் புத்த சமயம் நாடு முழுவதும் பரவியது

விடை : சரி

V. பொருத்துக:

1. பாறைசெப்புத்தகடுகள் ஓவியங்கள்
2. எழுதப்பட்ட பதிவுகள்மிகவும் புகழ்பெற்ற அரசர் பதிவுகள்
3. அசோகர்தேவாரம்
4. மத சார்புள்ள இலக்கியம்வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது
விடை : 1 – ஈ, 2 அ, 3 – ஆ, 4 – இ

 பாடம் 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி – ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடைகள் – 6th Social Book Back Answers in Tamil

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. பரிணாமத்தின் வழிமுறை __________________________

 • நேரடியானது
 • மறைமுகமானது
 • படிப்படியான
 • விரைவானது

விடை : நேரடியானது

2. தான்சானியா _________________ கண்டத்தில் உள்ளது.

 • ஆசியா
 • ஆப்பிரிக்கா
 • அமெரிக்கா
 • ஐரோப்பா

விடை : ஆப்பிரிக்காII. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.

1 கூற்று : உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.

 • காரணம் : தட்பவெப்பநிலை மாற்றமே கூற்று சரி
 • கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது
 • கூற்றும் காரணமும் சரி. ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.
 • கூற்றும் காரணமும் தவறானவை.

விடை : கூற்றும் காரணமும் சரி. ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.

2. தவறான வாக்கிய இணையைக் கண்டுபிடி

 • ஆஸ்ட்ரலோபிதிகஸ் – இரு கால்களால் நடப்பது
 • ஹேமோ ஹபிலிஸ் – நிமிர்ந்து நின்ற மனிதன்
 • ஹேமோ எரல்டஸ் – சிந்திக்கும் மனிதன்
 • ஹேமோ சேப்பியன்ஸ் – முகத்தின் முன்பக்க நீட்சி குறைந்து காணப்படுவது.

விடை : b, c மற்றும் d

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. தான்சானியாவில் காணப்பட்ட தொடக்ககால மனிதர்களின் காலடித்தடங்களை ___________________ உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார்கள்.

விடை : மானிடயியலாளர்கள்

2. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நம் முன்னோர்கள் ___________________ வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

விடை : நாடோடி

3. பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் ___________________ ஆகும்.

விடை : வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல்

4. ___________________ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது

விடை : (ஏர்) கலப்பை

5. பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ___________________ என்னுமிடத்தில் காணப்படுகின்றன

விடை : பொரிவரை – கரிக்கையூர்

6. ___________________ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு பானை செய்வதை எளிதாக்கியது.

விடை : சக்கரம்

7. ___________________ தொல்லியல் துறையுடன் தொடர்புடையது.

விடை : மானிடவியல்

8. நகரங்களும் பெரு நகரங்களும் ___________________ ஆகியவற்றால் தோன்றின.

விடை : வர்த்தகம் மற்றும் வணிகம்IV. சரியா ? தவறா ?

1. நாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும்.

விடை : தவறு

2. ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.

விடை : சரி

3. மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.

விடை : சரி

3. மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.

விடை : சரிபாடம் 3 சிந்து சமவெளி நாகரிகம் – ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடைகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. சிந்து சமவெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர் _________________

 • செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
 • செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்
 • செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி
 • செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்

விடை : செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்

2. சிந்து சமவெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.

 • பழைய கற்காலம்
 • இடைக்கற்காலம்
 • புதிய கற்காலம்
 • உலோக காலம்

விடை : உலோக காலம்

3. ஆற்றங்கரைகள் ‘நாகரிகத் தொட்டில்கள்’ என அழைக்கப்படக் காரணம்

 • மண் மிகவும் வளமானதால்
 • சீரான கால நிலை நிலவுவதால்
 • போக்குவரத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதால்
 • பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்

விடை : பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்II. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.

1 கூற்று : ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம்.
காரணம் : திட்டமிடப்பட்ட நகர அமைப்பு மேம்பட்ட கழிவு நீர் அமைப்பு

 • கூற்றும் காரணமும் சரி.
 • கூற்று தவறு, காரணம் சரி.
 • கூற்று சரி, காரணம் தவறு
 • கூற்றும் காரணமும் தவறு.

விடை : கூற்றும் காரணமும் சரி.

2. கூற்று : ஹரப்பா வெண்கல காலத்தைச் சார்ந்தது.
காரணம் : ஹரப்பா மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது.

 • கூற்றும் காரணமும் சரி.
 • கூற்று தவறானது. காரணம் சரி.
 • கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது.
 • கூற்று மற்றும் காரணம் தவறானவை.

விடை : கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது.

3. கூற்று : ஹரப்பா மக்களின் பொறியியல் திறன் குறிப்பிடத்தக்கது.
காரணம் : கடலின் அலைகள், ஓதங்கள் நீரோட்டத்தைக் கணித்த கப்பல் கட்டும் தளத்தைக் கட்டியிருப்பது.

 • கூற்றும் காரணமும் சரி.
 • கூற்று தவறானது. காரணம் சரி.
 • கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது.
 • கூற்று மற்றும் காரணம் தவறானவை..

விடை : கூற்றும் காரணமும் சரி.

4. கீழே கூறப்பட்டுள்ள மொஹஞ்ச-தாரோவை பற்றி கூற்றுகளில் எவை சரியானவை?

 • தங்க ஆபரணங்கள் பற்றித் தெரியவில்லை
 • வீடுகள் கட்ட செங்கற்களால் கட்டப்பட்டன.
 • கருவிகள் இரும்பினால் செய்யப்பட்டன.
 • பெருங்குளம் நீர் கசியாமல் இருப்பதற்காக பல அடுக்குகளால் இயற்கை தார் கொண்டு பூசப்பட்டன.

விடை : வீடுகள் கட்ட செங்கற்களால் கட்டப்பட்டன.III . கீழ்க்காணும் கூற்றை ஆராய்க.

அ. நகரங்கள், தெருக்களின் வடிவமைப்பு மற்றும் செங்கல் அளவுகள் ஆகியவற்றின் சீரான தன்மை
ஆ. ஒரு விரிவான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு.
இ. தானியக் களஞ்சியம் ஹரப்பா நகரங்களில் முக்கியமான பகுதியாக விளங்கியது.

மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

 • அ & ஆ
 • அ & இ
 • ஆ & இ
 • அனைத்தும் சரி

விடை : அனைத்தும் சரிIV. பொருந்தாததை வட்டமிடுக.

 1. காளைகள், ஆடுகள், எருதுகள், பன்றிகள், குதிரைகள்.

விடை : குதிரைகள்

V. தவறான இணையைத் தேர்ந்தெடு

 • ASI – ஜான் மார்ஷல்
 • கோட்டை – தானியக் களஞ்சியம்
 • லோத்தல் – கப்பல் கட்டும் தளம்
 • ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு

விடை : ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறுIII. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ___________________ மிகப் பழமையான நாகரிகம்.

விடை : (சுமேரிய) மெசபொட்டாமிய நாகரிகம்

2. இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை ___________________ என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.

விடை : அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்

3. ___________________ தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது..

விடை : தானியக்களஞ்சியங்கள்

4. மக்கள் குழுக்களாகச் சேர்ந்து ___________________ உருவாக்குகிறார்கள்.

விடை : சமூகத்தைIV. சரியா ? தவறா ?

1. மொஹர்கர் புதிய கற்காலம் மக்கள் வாழ்ந்த ஓர் இடமாகும்

விடை : சரி

2. இந்தியாவின் தொல்பொருள் ஆய்வியல் துறை தொல்பொருள் ஆராய்ச்சிக்கும், நாட்டின் கலாச்சார நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பிற்கும் பொறுப்பானது.

விடை : சரி

3. தானியக் களஞ்சியம் தானியங்களைச் சேகரித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

விடை : சரி

4. முதல் எழுத்துவடிவம் சீனர்களால் உருவாக்கப்பட்டது

விடை : தவறுVIII. பொருத்துக.

1. மொஹஞ்சதாராமேடான பகுதி
2. வெண்கலம்சிவப்பு மணிக்கல்
3. கோட்டைஉலோகக் கலவை
4. கார்னிலியன்இறந்தோர் மேடு
விடை : 1 – ஈ, 2 – இ, 3- அ, 3 – ஆ

 பாடம் 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடைகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. 6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்?

 • ஈராக்
 • சிந்துவளி
 • தமிழகம்
 • தொண்டமண்டலம்

விடை : ஈராக்

2. இவற்றுள் எது தமிழக நகரம்?

 • ஈராக்
 • ஹரப்பா
 • மொகஞ்சதாரோ
 • காஞ்சிபுரம்

விடை : காஞ்சிபுரம்

3. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்

 • பூம்புகார்
 • மதுரை
 • கொற்கை
 • காஞ்சிபுரம்

விடை : மதுரை

4. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது

 • கல்லணை
 • காஞ்சிபுர ஏரிகள்
 • பராக்கிரம பாண்டியன் ஏரி
 • காவிரி ஏரி

விடை : கல்லணை

5. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?

 • மதுரை
 • காஞ்சிபுரம்
 • பூம்புகார்
 • சென்னை

விடை : சென்னை

6. கீழடி அகழாய்வுகளுடன் எது தொடர்புடைய நகரம்

 • மதுரை
 • காஞ்சிபுரம்
 • பூம்புகார்
 • சென்னை

விடை : மதுரைII. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.

1 கூற்று : பூம்புகார் நகரத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும் பெற்றது.
காரணம் : வங்காளவிரிகுடா கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால் அண்டைய நாடுகளுடன் வணிகம் சிறப்புற்றிருந்தது.

 • கூற்று சரி; காரணம் தவறு.
 • கூற்று சரி; கூற்றுக்கான காரணமும் சரி.
 • கூற்று தவறு; காரணம் சரி.
 • கூற்று தவறு; காரணம் தவறு

விடை : கூற்று சரி; கூற்றுக்கான காரணமும் சரி.

2. அ. திருநாவுக்கரசர், “கல்வியில் கரையில” எனக்குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம்.
ஆ. இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்று என யுவான்சுவாங் குறிப்பிட்டது காஞ்சிபுரம்.
இ. நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம் என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.

 • அ மட்டும் சரி
 • ஆ மட்டும் சரி
 • இ மட்டும் சரி
 • அனைத்தும் சரி

விடை : அனைத்தும் சரி

3 . சரியான தொடரைக் கண்டறிக.

 • நாளங்காடி என்பது இரவு நேர கடை.
 • அல்லங்காடி என்பது பகல் நேர கடை.
 • ரோமானிய நாட்டு நாணயம் தயாரித்த தொழிற்சாலை கிடைத்தது பூம்புகார்.
 • கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது.

விடை : கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது.

4 . தவறான தொடரைக் கண்டறிக.

 • மெகஸ்தனிஸ் தன்னுடடிய பயணக் குறிப்புகளில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
 • யுவான் சுவாங் தமிழ்நாட்டு நகரான காஞ்சிபுரத்திற்கு வந்தார்.
 • கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.
 • ஈராக் நகரம் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடை : கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.

5. சரியான இணையைக் கண்டறிக.

 • கூடல் நகர் – பூம்புகார்
 • தூங்கா நகரம் – ஹரப்பா
 • கல்வி நகரம் – மதுரை
 • கோயில் நகரம் – காஞ்சிபுரம்

விடை : கோயில் நகரம் – காஞ்சிபுரம்

6. பொருந்தாததை வட்டமிடுக.

 • வட மலை – தங்கம்
 • மேற்கு மலை – சந்தனம்
 • தென் கடல் – முத்து
 • கீழ்கடல் – அகில்

விடை : கீழ்கடல் – அகில்

7. தவறான இணையைத் தேர்ந்தெடு

 • ASI – ஜான் மார்ஷல்
 • கோட்டை – தானியக் களஞ்சியம்
 • லோத்தல் – கப்பல் கட்டும் தளம்
 • ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு

விடை : ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறுIII. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் ___________________

விடை : இராஜசிம்மன் என்ற பல்லவ மன்னன்

2. கோயில் நகரம் என அழைக்கப்படுவது ___________________

விடை : காஞ்சிபுரம்

3. மாசாத்துவன் எனும் பெயர் தரும் பொருள் ___________________

விடை : பெரு வணிகர்IV. சரியா ? தவறா ?

1. பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாக பண்பாட்டு பரிமாற்றம் நடைபெற்றது

விடை : சரி

2. மதுரையில் அல்லங்காடியில் பெண்கள் பயமின்றி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கிச் சென்றனர்.

விடை : சரி

3. பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன

விடை : சரி

4. போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்.

விடை : சரி

12 வகுப்பு தமிழ் வினா விடை – இளந்தமிழே

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com