Advertisement
அமெரிக்காவின் தேசிய விளையாட்டு எது? | America National Game in Tamil Language
நண்பர்களுக்கு வணக்கம் நாம் இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் அமெரிக்காவின் தேசிய விளையாட்டு எது என்று பார்க்கலாம். ஒவ்வொரு நாட்டிற்குமே தனித்தனியான தேசிய மரம், மலர், சின்னம், மொழி, விளையாட்டு இருக்கும். ஒவ்வொன்றுமே அந்த அந்த நாட்டில் ஒரு சிறப்பை அடைந்துள்ளதால் அதனை நாம் தேசிய மரம், மலர் என அழைக்கின்றோம். அந்த வகையில் இந்த பதிவில் அமெரிக்காவின் தேசிய விளையாட்டு எது என்று தெரிந்து கொள்ளலாம்.
இவரது பிறந்த தினம் தேசிய விளையாட்டு |
அமெரிக்காவின் தேசிய விளையாட்டு எது?
விடை: பேஸ்பால் (Base ball) அமெரிக்காவின் தேசிய விளையாட்டாகும்.
அமெரிக்காவின் தேசிய விளையாட்டு:
- இந்த விளையாட்டு 19-ம் நூற்றாண்டில் வட அமெரிக்காவில் உருவானது. பேஸ்பால் விளையாட்டில் இரண்டு அணிகள் இருக்கும், ஒவ்வொரு அணியிலும் 9 வீரர்கள் இருப்பார்கள்.
- ஒருவர் பிட்சில் நிற்பவர், Catcher, First Base, Second Base, Third Base, Shortstop மற்றும் இடது, வலது, சென்டர் ஆகிய பகுதிகளில் மூன்று fielder மொத்தம் 9 பேர். ஒரு போட்டியில் 9 ஆட்டங்கள் (Innings) நடைபெறும்.
- ஒரு ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி Bating மற்றும் பந்து வீச்சில் ஈடுபடுவார்கள். போட்டியின் ஆரம்பத்தில் Batsman அணியிலிருந்து ஒருவர் வந்து விளையாடலாம். அதற்கு அடுத்து வரும் ஆட்டங்களில் முந்தைய ஆட்டத்தில் எவர் கடைசியாக வெளியேற்றப்படுகிறாரோ, அந்த வரிசையில் அவருக்கு அடுத்து உள்ள வீரர் புதிய ஆட்டத்தில் Bating தொடங்குவார்.
- Batsman, Bating Box-ல் நின்று தான் விளையாட வேண்டும். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் மூன்று வாய்ப்புகள் தரப்படும். இந்த வாய்ப்புகளில் பந்தை அடிக்க தவறினால் அந்த ஆட்டக்காரர் வெளியேற்றப்படுவார்.
- பந்தை அடித்துவிட்டால், fielder-யிடம் பந்து வருவதற்குள் அவர் நிச்சயமாக முதல் தளத்தை நோக்கி ஓட வேண்டும். ஆட்டம் முடிவதற்குள் எல்லா தளத்தையும் அடைந்து விட்டு மீண்டும் Home Base வந்தால் தான் ஸ்கோர் வழங்கப்படும்.
விதிமுறைகள்:
- பந்து வீச்சாளர் ஸ்டிரைக் ஜோன்க்குள்ளே (strike Zone) இருந்து பந்தை வீச வேண்டும். பந்தை பிடிப்பவர் Catcher Base-ல் இருப்பார்.
- வீச்சாளர் ‘ஸ்டிரைக் ஜோன்’ அல்லாமல் மற்ற பகுதியில் நான்கு முறை ஒரே வீரருக்கு வீசினால், அந்த வீரர் இலவசமாக அடுத்த அடித்தளத்திற்கு செல்லலாம்.
- பந்து வீச்சாளர் வீசிய பந்து ஸ்டிரைக் ஜோனில் மூன்று முறை தாண்டிச் சென்றால், அப்போது கேட்சர் பிடித்தால் ஆட்டக்காரர் வெளியேற்றப்படுவார்.
- பந்தை Direct-ஆக கேட்சர் பிடித்தால் ஆட்டக்காரர் வெளியேற்றப்படுவார்.
- பந்தை Bat-ஆல் இரண்டு முறை அடித்தால் ஆட்ட நாயகன் விளையாட்டில் இருந்து வெளியேற்றப்படுவர்.
- ஓட்டக்காரர்கள் ஓடும் போது எதிர் அணி வீரர் பந்தை கையில் வைத்துக் கொண்டு அவரை தொட்டால் அல்லது வேறொரு வீரர் அந்த பந்தை பிடித்துவிட்டால் வீரர் அந்த ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.
- ஒரு பந்து வீச்சில் எத்தனை வீரர்களை வேண்டுமானாலும் வெளியேற்ற முடியும். இரு வீரர்கள் ஒரே சமயத்தில் வெளியேறினால் அதனை இரட்டை ஆட்டம் என்பர்.
- இந்த விளையாட்டில் எதிர் அணியை விட அதிக ஓட்டங்களை யார் எடுத்துள்ளார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.
இந்தியாவின் தேசிய விளையாட்டு எது? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |
Advertisement