Animals Without Bones in Tamil
இந்த உலகில் லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. அவ்வாறு உள்ள உயிரினங்களுக்கு இடையே பல வியக்க வைக்கும் வித்தியாசங்கள் உள்ளன. மனிதரின் உடலமைப்பு சீராக இருக்க வேண்டும் என்றால் அதற்கு முக்கிய பங்கு வகிப்பது எலும்புகள் தான். ஆனால் இந்த உலகில் எலும்புகளே இல்லாமல் சில உயிரினங்கள் உள்ளன. அப்படி ஒரு உயிரினம் உள்ளதா என்று நீங்கள் கேட்கும் கேள்வி புரிகின்றது. ஆம் நண்பர்களே எலும்புகளே இல்லாமல் உள்ள உயிரினங்கள் பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்ன உயிரினங்கள் என்று அறிந்துக் கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
இதையும் படித்துப்பாருங்கள் => நீண்ட நாட்கள் உயிர்வாழும் 5 உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா
Which Creature has no Bones in Tamil:
ஒரு மனிதன் அசைவதற்கும் , நடப்பதற்கும் மற்றும் ஓடுவதற்கும் ஏன் மனிதனின் உடலமைப்பு சீராக இருக்க வேண்டும் என்றால் அதற்கு முக்கிய பங்குவகிப்பது எலும்புகள் தான். அப்படி நமக்கு மிகவும் முக்கியமாக உள்ள எலும்புகள் இல்லாமல் இந்த உலகில் சில உயிரினங்கள் அவற்றை பற்றி பார்க்கலாம்.
1. ஜெல்லிமீன்:
நாம் முதலாவது பார்க்க இருக்கும் எலும்பு இல்லாத உயிரினம் ஜெல்லிமீன் தான். 4.5 மி.மீட்டர் அளவில் உள்ள இந்த உயிரினம் பொதுவாக அனைத்து கடல் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
இவற்றுக்கு இறப்பு என்பது கிடையாது என்பது பல ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன. அதேபோல் இவற்றுக்கு எலும்புகளும் கிடையாது என்பதையும் பல ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன.
2. ஆக்டோபஸ்:
அடுத்து நாம் பார்க்க இருக்கும் எலும்பு இல்லாத உயிரினம் ஆக்டோபஸ் தான். ஆக்டோபஸ் என்றதும் நாம் அனைவருக்கும் நினைவில் வருவது அவற்றின் உடலமைப்பு தான்.
அதிலும் குறிப்பாக அவற்றின் எட்டு நீண்ட வால் போன்ற கால்கள் தான் நினைவில் வரும். இவற்றுக்கு எட்டு கால்கள் இருந்த போதிலும் எலும்புகளே இல்லாத விலங்கு தான் இந்த ஆக்டோபஸ்.
உடலில் எலும்பு இல்லாததால் இவற்றால் மிகச் சிறிய இடுக்குகளிலும் நுழைந்து வெளிவந்து விடும்.
இதையும் படித்துப்பாருங்கள் => கரப்பான் பூச்சிக்கு எத்தனை இதயம் உள்ளன தெரியுமா
3. நத்தை:
எலும்புகள் இல்லாத உயிரினங்களுள் இதுவும் ஒன்று. இவற்றுக்கு கால்கள் கூட கிடையாது. அதன் அடிப்பாகம் முழுவதும் தட்டையான பாதம் போல செயல்படும். வயிற்றுப் பகுதியை உந்தித் தள்ளி ஊர்ந்து செல்லும்.
இதற்கு வழவழப்பான பிசின் உதவுகிறது. மிக மெதுவாகச் செல்லும் நத்தைகள், சராசரியாக விநாடிக்கு ஒரு மில்லி மீட்டர் வேகத்தில் நகரும். இது தன் உடல் எடையை விட 10 மடங்கு எடை உள்ள பொருட்களைத் துாக்கிச் செல்லும்.
நத்தையில் பல இனங்கள் உள்ளன. இவை குளம், குட்டை , ஆறு மற்றும் கடல் போன்ற இடங்களில் வாழுகின்றன.
4. மாண்டிஸ் இறால்:
மாண்டிஸ் இறால் கிரகத்தின் வலிமையான விலங்காக கருதப்பட்டது. இது ஸ்டோமடோபோடா குழுவைச் சேர்ந்த ஒரு ஓட்டுமீன் இனமாகும். இது சுமார் 12 செமீ நீளம் இருக்கும். இதற்கும் எலும்புகளே கிடையாது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |