மேஜர் முகுந்த் வரதராஜன் பெற்ற அசோகச் சக்கர விருது பற்றி தெரியுமா?

Advertisement

Ashoka Chakra Award List In Tamil | அசோகச் சக்கர விருது

இந்தியாவில் ராணுவபடை, கடற்படை, காவல்படை ஆகியவற்றில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு விருது வழங்குவது என்பது வழக்கமான ஒன்றாகும். போர்க்களத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு சர்வோத்தம் யுத் சேவா பதக்கம், உத்தம் யுத் சேவா பதக்கம், யுத் சேவா பதக்கம்,பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம், அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், விஷிஷ்ட் சேவா பதக்கம் போன்ற விருதுகள் வழங்கப்படும். அமைதிகால வீரர்களுக்கு அசோக் சக்ரா, கீர்த்தி சக்ரா, சௌர்ய சக்ரா போன்ற விருதுகள் வழங்கப்படும் . போர்க்கள வீரர்களுக்கு பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா போன்ற விருதுகள் வழங்கப்படும்.

இந்த விருதுகள் அனைத்தும் வீரரின் செயலை பாராட்டும் விதமாக அவர்கள் பணிபுரியும் போதோ அல்லது ஓய்வு காலத்திலோ வழங்கப்படும். வீரர்கள் உயிரோடு இல்லை என்றாலும் அவர்கள் குடும்பத்தினருக்கு இந்த விருதுகளை சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவிற்காக செயல்படும் அணைத்து வீரர்களுக்கும் நன்றி கூறுவதில் நாம் அனைவரும் கடமை பட்டிருக்கிறோம். ஆகவே அவர்கள் வீர செயல்களுக்கு வழங்கும் அசோகச் சக்கர விருது பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

முகுந்த் வரதராஜன் (Mukund Varadarajan) வாழ்க்கை கதை.!

 

அசோகச் சக்கர விருது:

இந்தியப் படைகளின் போர்க்களத்தில் போர் புரியும் வீரரின் வீரச் செயல்களுக்கு மற்றும் அமைதிகால செயல்களுக்கு வழங்கப்படும் விருது தான் அசோகச் சக்கர விருது என்றழைக்கப்படும். போர்க்களத்தில் வீரரின் உயிர்தியாகத்திற்காக இந்த அசோகச் சக்கர விருது வழங்கப்படுகிறது. இது போர்க்காலத்தில் நிகழ்த்திய வீரச்செயல்களுக்கு வழங்கப்படும் பரம வீரச் சக்கரத்திற்கு இணையானது. இந்த விருது படைத்துறையில் அல்லாமல் குடிமக்களுக்கும் வழங்கப்படலாம்; மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படலாம்.

அசோகச் சக்கர விருது இந்தியாவின் தேசிய கொடியில் உள்ள அசோகச் சக்கரம் போன்று வடிவமைத்திருக்கும்.அசோகரின் பல சிற்பங்களில் காணப்படும் ஓர் 24 ஆரங்களைக் கொண்ட சக்கர வடிவ சின்னமாகும்.அசோகர் பயன்படுத்தியமையால் இது அசோகச் சக்கரம் என்றும் அழைக்கப்படுகிறது.அசோகச் சக்கரம் சாரநாத் இல் உள்ள சிங்க தலைகள் பதித்த அசோகத்தூணில் படைத்திருக்கும்.

ராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருதுகள்..!

அசோகச் சக்கர விருது பெற்ற வீரர்கள்:

ஆண்டு  விருது பெற்றவர் 
1952 பச்சித்தர் சிங், நர்பகதூர் தாபா
1953 சுஹாஸ் பிஸ்வாஸ்
1955 தாமோதர் காசிநாத் ஜாதர்
1956 சுந்தர் சிங்
1957 ஜோகிந்தர் சிங், முத்துசுவாமி ராமன், பொள்ளூர், ஜகன்னாத் ராவ்ஜி சிட்னிஸ்
1958 எரிக் ஜேம்ஸ் டக்கர், நாயகன் பகதூர் ராய்
1962 சல் பகதூர் லிம்பு
1965 புர்ஷோத்தம், சமன் லால், லஜ்ஜா ராம், தேஜ் சிங்
1967 சங்கர் லால், ஸ்ரீவஸ்தவா
1968 லகான் சிங், ஹுகும் சிங், கோவிந்த் சிங், தன்பத் சிங், தகாத் சிங்
1969 ஜஸ் ராம் சிங்
1971 பைஜ் நாத் சிங்
1972 உம்மத் சிங் மஹ்ரா, புரே லால்
1978 குர்னாம் சிங், முன்னி லால்
1981 சைரஸ் அடி, பித்தவல்லா
1984 யூரி மாலிஷேவ், ஜெனடி, ஸ்ட்ரெகலோவ்
1985 ராகேஷ் சர்மா, புகாந்த் மிஸ்ரா, ஜஸ்பீர் சிங் ரெய்னா, ராம் பிரகாஷ், ரோபீரியா, பவானி தத் ஜோஷி, நிர்பய் சிங் சிசோடியா, செரிங் முட்டப்
1986 விஜய் ஜாகிர்தார்
1987 நீர்ஜா பானோட்
1991 ரந்தீர் பிரசாத் வர்மா
1992 சந்தீப் சங்கலா
1993 ராகேஷ் சிங், மல்ஹான்
1994 நீலகண்டன், ஜெயச்சந்திரன் நாயர்
1995 ஹர்ஷ் உதய் சிங் கவுர், சுஜ்ஜன் சிங் யாதவ், ராஜீவ் குமார் ஜூன்
1996 அருண் சிங், ஜஸ்ரோத்தியா
1997 சாந்தி ஸ்வரூப் ராணா, புனித் நாத் தத்
2000 சுதிர் குமார் வாலியா
2001 கமலேஷ் குமாரி யாதவ், மத்பர் சிங் நேகி, ஜகதீஷ் பிரசாத் யாதவ்
2002 ரம்பீர் சிங் தோமர், சுரீந்தர் சிங்
2003 சுரேஷ் சந்த் யாதவ்
2004 சஞ்சோக் சேத்ரி, திரிவேணி சிங்
2007 வசந்த் வேணுகோபால், சுனி லால், ஹர்ஷன் ராதாகிருஷ்ணன் நாயர்
2008 தினேஷ் ரகு ராமன்
2009 பிரமோத் குமார் சதபதி, ஆர்பி டைங்டோ, ஜோஜன் தாமஸ், மோகன் சந்த் சர்மா, சந்தீப் உன்னிகிருஷ்ணன், கஜேந்தர் சிங் பிஷ்ட், துக்காராம் ஓம்பல், அசோக் காம்தே, விஜய் சலாஸ்கர், ஹேமந்த் கர்கரே, பகதூர் சிங் போஹ்ரா
2010 மோஹித் ஷர்மா, டி. ஸ்ரீராம் குமார், ராஜேஷ் குமார்
2011 லைஷ்ராம் ஜோதின் சிங்
2012 நவ்தீப் சிங்
2014 கே. பிரசாத் பாபு, நீரஜ் குமார் சிங், முகுந்த் வரதராஜன்
2016 மோகன் நாத் கோஸ்வாமி *
2017 ஹாங்பான் தாதா
2018 ஜோதி பிரகாஷ் நிராலா
2019 நசீர் அகமது வானி
2021 பாபு ராம்
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement