ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரம் | Australia Capital in Tamil

australia capital in tamil

ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரம் எது? | Australia Capital in Tamil

Australia Capital: வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரம் எது என்பதை பற்றி பார்க்கலாம். இது கங்காருகளின் தேசம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்டில் வேறு எந்த நாட்டுடனும் எல்லைகள் இல்லை என்பதால் இதனை மிகப்பெரிய தீவு நாடு என்றும் அழைக்கிறார்கள். இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடலின் கூட்டமைப்பில் உள்ளது இந்த நாடாகும். சரி வாங்க இந்த நாட்டின் சிறப்பையும் இதனுடைய தலைநகரம் பற்றி கீழே விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

ஆஸ்திரேலியா நாட்டின் வரலாறு – Australia Thalainagaram

capital of australia in tamil

  • இது உலகின் மிகச்சிறிய கண்டமாகும். ஆனால் இது பரப்பளவில் மிகப்பெரிய நாடாகும். 16-ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியா என்று ஒரு கண்டம் இருப்பதை கண்டுபிடித்தவர்கள் ஐரோப்பியர்கள் ஆவர். 75 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட இந்த நாட்டில் பெரும்பகுதி பாலை வனமாக உள்ளது. 34,218 கிலோமீட்டர் தூரம் கடற்கரையையும் கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கற்பாறையான அங்குஸ்டஸ்  இங்கு தான் உள்ளது. இந்த நாடு தட்டையான அமைப்பையும் மற்றும் வறட்சி நாடாகவும் விளங்குகிறது.

ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரம்:

  • இந்த நாட்டின் தேசிய மொழியாக ஆங்கிலம் பேசப்பட்டு வருகிறது. சீனம், இட்டலி, கிரேக்கம் போன்ற மொழிகளும் இந்த நாட்டில் பேசப்பட்டு வருகிறது. இந்த நாட்டின் தேசிய விலங்காக கங்காரு உள்ளது.
  • பழங்குடியினர் இந்த நாட்டில் தான் வாழ்ந்தவர்கள் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நாட்டின் தேசிய கொடி முத்திரையில் விலங்குகளில் கங்காருவும் பறவை இனத்தில் ஈமுவும் இடம் பெற்றுள்ளது. ஏனென்றால் இந்த இரண்டு உயிரினங்களுக்கும் பின்னோக்கி செல்ல தெரியாது முன்னோக்கி தான் நடக்க தெரியும் என்பதால் ஆஸ்திரேலியாவும் முன்னோக்கி வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக வைத்துள்ளனர். இந்த நாட்டின் தேசிய விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. இந்த நாட்டில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளனர்.
  • அதிக உடற் பருமன் மற்றும் தோல் நோய்களையும் கொண்ட நாடாக விளங்குகிறது. மேலும் எய்ட்ஸ் பரவாத நாடாகவும் இது உள்ளது. தமிழர்கள் 1970-ம் ஆண்டு முதல் தான் இங்கு வசிக்க ஆரம்பித்தார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் பெயர் என்ன?
இந்திய மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்கள்

ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரம் எது? | ஆஸ்திரேலியா கேப்பிடல்:

விடை: கான்பரா என்பது ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரம் ஆகும்.

  • ஆஸ்திரேலியா மொத்தம் 8 தலைநகரங்களை கொண்டுள்ளது. 1901 முதல் 1927 வரை Melbourne தலைநகரமாக இருந்தது. பின் 1927 முதல் இப்பொழுது வரை கான்பரா தலைநகரமாக உள்ளது.
இந்தியாவின் ஆரஞ்சு நகரம்

ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகர் – Capital of Australia in Tamil

  1. 1913-ம்  முதல் ஆஸ்திரேலியாவின் தலைநகரமாக கான்பரா உள்ளது.
  2. 1788-ம் ஆண்டு முதல் நியூ சவுத் வேல்ஸின் தலைநகரமாக சிட்னி உள்ளது.
  3. 1851-ம் ஆண்டு முதல் விக்டோரியாவின் தலைநகரமாக மெல்பேர்ண் உள்ளது.
  4. 1860-ம் ஆண்டு முதல் குயின்ஸ்லாந்து தலைநகரமாக பிரிஸ்பேன் அறிவிக்கப்பட்டது.
  5. 1829-ம் ஆண்டு முதல் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரமாக பேர்த் உள்ளது.
  6. 1856-ம் ஆண்டு முதல் தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரமாக அடிலெய்டு உள்ளது.
  7. 1826-ம் ஆண்டு முதல் தாசுமேனியாவின் தலைநகரமாக ஹோபார்ட் உள்ளது.
  8. 1911-ம் ஆண்டு முதல் வட ஆள்புலம் மாநிலத்தின் தலைநகரமாக டார்வின் உள்ளது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil