Avvaiyar GK Questions in Tamil
வாசகர்கள் அணைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஔவையார் பற்றிய பொது அறிவு வினாக்கள் (Avvaiyar GK Questions in Tamil) பற்றி கொடுத்துள்ளோம். சங்ககால பெண் புலவர்களில் மிகவும் பிரபலமானவர் ஔவையார். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் ஔவையார் பற்றி தெரியும். புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய எட்டுத்தொகை நூல்களில் இவரது பாடல்களில் 59 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.
அவற்றில் 33 பாடல்கள் புறத்திணை பாடல்கள். மீதமுள்ள 26 பாடல்கள் அகத்திணை பாடல்கள். அதிக பாடல்களை பாடிய புலவர்களின் வரிசையில் ஔவையார் 09 ஆவது இடத்தில் உள்ளார். ஔவையார் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல தகவல்கள் உள்ளது. ஆகையால், நீங்கள் ஔவையார் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் பின்வறுமாறு Avvaiyar GK Questions in Tamil தொகுத்து கொடுத்துள்ளோம்.
GK Questions About Avvaiyar in Tamil | ஔவையார் பற்றிய பொது அறிவு வினாக்கள் மற்றும் விடைகள்:
- சங்க காலத்தில் மிகுதியான பாடல்களை பாடியவர் – ஔவையார்.
- அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர் – ஔவையார்
- .”அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று திருக்குறளைப் போற்றியவர் – ஔவையார்.
- “கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று)” என்றப் பாடல் வரிகளின் ஆசிரியர் – ஔவையார்
- “எறும்புந்தன் கையால்எண் சாண்” என்றப் பாடல் வரிகளின் ஆசிரியர் ஔவையார்
- ‘இளமையில் கல்’ என்று கூறியவர் -ஔவையார்.
- ஔவையார் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்- புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை.
- ‘இளமையில் கல்’ – ஔவையார்.
- புகழேந்திப்புலவர், ஒட்டக்கூத்தர், ஔவையார் முதலியோர் கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் ஆவர்.
- கடைச்சங்கப் புலவர்கள் பரணர், இடைக்காடர், ஔவை ஆகியோரிடம் நட்பு பூண்டவர்.
- அதியமானிடம் நட்பு பாராட்டி அவருக்காக தூது சென்றவர் – ஔவையார்.
- ஔவையார் பாடியதாக
அகநானூற்றில் — 4
குறுந்தொகையில் — 15
நற்றிணையில் — 7
புறநானூற்றில் — 33
மொத்தம் = 59 பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன. - ஔவைக்கு கொடுக்கப்பட்ட நெல்லிக்கனி கிடைத்த இடம் பூரிக்கல்.
- திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற கருத்தைக் கூறியவர் ஔவையார்.
- ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி”. இப்பாடலை பாடியவர் – ஔவையார்.
- “சாதி இரண்டொழிய வேறில்லையென்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்” இதில் ‘தமிழ்மகள்’ என்பது யாரைக் குறிக்கிறது? ஔவையார்.
- “பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்” என்று கூறியவர் –ஔவையார்.
- ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று கூறியவர் – ஔவையார்.
- “சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது” எனும் பாடலைப் பாடியவர் – ஔவையார்.
- “சாதல் நீங்க எமக்கீந் தனையே” எனும் பாடலைப் பாடியவர் –ஔவையார்
- “போரில்லா மகிழ்ச்சியில் இந்த உலகம் திளைக்கட்டும்” என்று கூறியவர் -ஔவையார்.
- “இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து” – இப்பாடலைப் பாடியவர் ஔவையார்.
- ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ எனத் தமிழரின் கடற்பயணம் குறித்து கூறியவர் – ஔவையார்.
- ‘மீதூண் விரும்பேல்’ என்று கூறியவர் – ஔவையார்.
- ‘உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்’ என்கிறார் – ஔவையார்.
- “ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன”- ஔவையார். - அதியமான் நெடுமானஞ்சி என்னும் குறுநில மன்னனுடன் ஆழ்ந்த நட்புக் கொண்டவர்- ஔவையார்.
- “இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து” – இப்பாடலைப் பாடியவர் ஔவையார்.
- ”பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து” – இப்பாடலைப் பாடியவர் ஔவையார். - “இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே” என்ற பாடலைப் பாடியவர் ஒளவையார்.
- “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும் திறமுடனே ” – ஒளவையார் (தனிப்பாடல்) - சங்ககாலப் பெண்பாற்புலவர்- ஒளவையார்.
- ’சனி நீராடு’ என்பது ஔவையார் வாக்கு.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |