உலகின் சிறந்த 50 சாண்ட்விச் பட்டியல்.. 13-வது இடத்தில் இந்தியா..!

உலகின் சிறந்த 50 சாண்ட்விச் பட்டியல்.. 13-வது இடத்தில் இந்தியாவின் வடா பாவ்..! Best Sandwiches in The World 2023 in Tamil..!

உணவு என்பது அனைத்து இடங்களிலும் வெறுமனே ஒரு உணவாக இருப்பதில்லை. அதற்கு மாறாக உணவு என்பது ஒரு கலாசாரத்தை நேரடியாக அல்லது மறைமுகமாக பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இது இந்தியாவுக்கு மட்டும் பொருந்துமா? என்றால் நிச்சயம் இல்லை. இது உலகம் முழுவதும் பொருந்தும். உணவில் பல வகைகள் உள்ளன. இந்த உணவு வகைகள் உலகமெங்கும் மக்கள் மனதில் பெரும் பிரியங்களை சம்பாதித்து வைத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்த உண்மையை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இந்தியாவுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது உணவு சார்ந்த அங்கீகாரங்களை டேஸ்ட் அட்லஸ் (Taste Atlas) எனும் அமைப்பு அறிவித்து வருகிறது. அந்த வகையில் டேஸ்ட் அட்லஸ் தற்பொழுது 50 சிறந்த சாண்ட்விச்களின் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் நமது இந்தியா 13-ஆம் இடத்தை பிடித்துள்ளது. அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

உலகின் சிறந்த 50 சாண்ட்விச் பட்டியல் – Best Sandwiches in The World 2023:

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உலகின் மிகப்பெரிய Railway Station எங்கு உள்ளது தெரியுமா..?

 

மும்பையின் வடா பாவ் – Vada Pav:Vada Pav

உணவு சார்ந்த அங்கீகாரங்களை டேஸ்ட் அட்லஸ் (Taste Atlas) எனும் அமைப்பு அறிவித்த 50 சிறந்த சாண்ட்விச்களின் பட்டியலில் வடா பாவ் உலகின் சிறந்த சாண்ட்விச்கள் பட்டியலில் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது. வடா பாவ் மும்பையில் ஸ்பெஷல் ஸ்ட்ரீட் ஃபுட் வடா பாவ் ஆகும்.

இந்த சாண்ட்விச் மும்பையில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமான உணவாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இவற்றை நீங்கள் தேநீர், காலை உணவு அல்லது மதிய உணவு என எந்த நேரத்திலும் நீங்கள் அனுபவிக்கக்கூடிய ஒரு உணவாகும்.

மும்பைவாசிகளிடம் அவர்களுக்குப் பிடித்த தெரு உணவு பற்றிக் கேட்டால், அவர்கள் யோசிக்காமல் வடா பாவ் என்று தான் சொல்வார்கள். வடா பாவ் மும்பை வாசிகளின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. தெருவோரமாக இருந்தாலும் சரி, பணக்கார உணவு விடுதியாக இருந்தாலும் சரி, வடா பாவ் என்பது அனைவருக்கும் பிடித்தமான உணவு. இத்தகைய தெரு உணவரிக்கு உலகின் 13-வது சிறந்த சாண்ட்விச் உணவாக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil