பாரதிதாசன் இயற்பெயர் என்ன? | Bharathidasan Iyar Peyar Enna?

Bharathidasan Iyar Peyar Enna

பாரதிதாசன் இயற்பெயர் என்னவென்று தெரியுமா?

வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் பாரதிதாசன் பற்றி தெரிந்து கொள்ளலாம். இவரது பாடல்கள் பலவற்றில் உள்ள கருத்துக்கள் யாவும் செறிவு மிகுந்ததாக இருக்கும். அறியாமையில் உள்ள பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை அவரது பாடல்கள் மூலம் எடுத்துரைத்துள்ளார். இப்பொழுது நாம் பாரதிதாசனின் இயற்பெயர் என்ன அவர் யாரின் மீது உள்ள பற்றால் தான் பெயரை மாற்றி கொண்டார் என்பதையெல்லாம் கீழே விரிவாக படித்தறியலாம் வாங்க.

பாரதிதாசன் இயற்பெயர் என்ன?

விடை: இவருடைய இயற்பெயர்கனக சுப்புரத்தினம்” ஆகும்.

பாரதிதாசன் குறிப்பு எழுதுக:

Bharathidasan Iyar Peyar

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

 

  • இவர் புதுச்சேரியில் 1891-ம் ஆண்டு 29-ம் தேதி ஏப்ரல் மாதம் பிறந்தார். தந்தையின் பெயர் கனகசபை முதலியார். தாயாரின் பெயர் இலக்குமி அம்மாள் ஆவர். 1920-ல் இவருக்கு திருமணம் ஆனது. மனைவியின் பெயர் பழனியம்மாள் ஆவார். இவர் புதுச்சேரியில் தமிழாசிரியராக பணியாற்றினார்.

பாரதிதாசன் பெயர் காரணம்:

  • மகாகவி பாரதியாரின் மீது கொண்ட மிகுந்த பாசத்தால் கனக சுப்புரத்தினம் என பெற்றோர்கள் வைத்த பெயரை பாரதிதாசன் என மாற்றி கொண்டார்.

சிறப்பு பெயர்கள்:

  • இவர் எழுதிய பாடல்கள் மூலம் இவருக்கு புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என்ற சிறப்பு பெயரும் கிடைக்கபெற்றது.

பாரதிதாசன் பெருமைகள்:

  • இவர் எழுத்தாளராக மற்றும் திரைப்படங்களில் கதை எழுதினாலும் மக்களுக்கு தொண்டாற்றுவதற்காக அரசியலிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். 1954-ம் ஆண்டு பாண்டிச்சேரியில் உள்ள சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அரசியலில் இவர் ஆற்றிய பணியை கண்டு கர்மவீரர் காமராஜர் அவர்களால் 1946-ம் ஆண்டு 29-ம் தேதி ஜூலை மாதம் புரட்சிக்கவி என்ற சிறப்பு பெயரையும் பெற்று  ரூ.25,000/- சன்மானம் பெற்று கௌரவிக்கப்பட்டார்.
  • பாரதிதாசன் குயில் எனும் கவிதை மூலமாக திங்களிதழ் எனும் நாளிதழும் நடத்தி வந்தார்.
புத்தரின் இயற்பெயர் என்ன?
நாமக்கல் கவிஞர் குறிப்பு

பாரதிதாசன் படைப்புகள் யாவை?

பாரதிதாசனின் படைப்புகள் 
எதிப்பாராத முத்தம்குடும்ப விளக்கு
சேர தாண்டவம்கழைக்கூத்தியின் காதல்
குறிஞ்சித்திட்டுதமிழச்சியின்கத்தி
கண்ணகி புரட்சிக் காப்பியம்அமைதி
மணிமேகலை வெண்பாஇளைஞர் இலக்கியம்
காதல் நினைவுகள்செளமியன்
பாண்டியன் பரிசுநல்ல தீர்ப்பு
அழகின் சிரிப்புதமிழ் இயக்கம்
இருண்ட வீடுஇரண்யன் அல்லது இணையற்ற வீரன்
காதலா கடமையா? சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
  • கல்வி கற்ற பெண்களின் சிறப்பை குடும்ப விளக்கு நூலிலும், கல்வி கற்காத பெண்களின் நிலைமையை இருண்ட வீடு எனும் நூலிலும் எடுத்துரைத்துள்ளார்.
  • இவருடைய பாடல்கள் ஒவ்வொன்றிலும் மக்களுக்கு தேவையான கருத்துக்கள் அனைத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

மறைவு:

  • கவிதை, அரசியல் என அனைத்திலும் வல்லவராக இருந்த புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் ஏப்ரல் மாதம் 21-ம் தேதி 1964ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today useful information in tamil