பாரதியார் பற்றிய பொது அறிவு வினா விடை..!

Advertisement

பாரதியார் முக்கிய வினா விடை – Bharathiyar Tnpsc Questions in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் பொது அறிவு வினா விடையில் பாரதியார் பற்றிய பொது அறிவு வினா விடைகளை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். பாரதியார் ஒரு பத்திரிகையாளராக, கவிஞராக, தேசபக்தராக விளங்கிய பாரதியின் எழுத்துகளும் செயல்பாடுகளும் எப்போதும் நினைவுகூரத்தக்கவை. பத்திரிகையாளராகவே வாழ்வின் பெரும்பகுதியை அமைத்துக்குகொண்டு 39 வயதிலேயே உயிரிழந்தவர்.

அவர் வாழ்ந்த காலங்கள் குறைவானது என்றாலும் கூட, அவர் மக்களுக்காக செய்து விட்டு சென்ற காரியங்கள் நிறைய இருக்கிறது. சரி இந்த பதிவில் நாம் பாரதியார் பற்றிய பொது அறிவு வினா விடைகளை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

பாரதியார் TNPSC வினா விடை:

1 பாரதியாரின் இயற் பெயர் என்ன?

விடை: சுப்பிரமணியன்

2 பாரதியாரின் சிறப்பு பெயர் என்ன?

விடை: சுப்பையா 

3 பாரதியாரின் பெற்றோர்கள் பெயர்?

விடை: சின்னசாமி ஐயர் – இலக்குமி அம்மாள்

4 பாரதியார் பிறந்த ஊர் எது?

விடை: எட்டயபுரம் 

5 பாரதியார் பிறந்த ஆண்டு எது? 

விடை: 11.12.1882

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாரதியார் சிறப்புகள் சில வரிகள்..!

6 பாரதியாருக்கு வழங்கப்பட்ட பட்டங்கள் 

விடை: பாரதி, சரஸ்வதி 

7 பாரதியார் தனக்கு வைத்துக்கொண்ட சிறப்பு பெயர் என்ன?

விடை: ஷெல்லிதாசன் 

8 பாரதியாருக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்கள்?

விடை: காளிதாசன், காசி, ரிஷி குமாரன், சக்திதாசன், சாவித்திரி, ஓர் உத்தம தேசாபிமானி, நித்திய தீரர், ஷெல்லிதாசன்.

9 பாரதியாரின் புதுக்கவிதையின் முன்னோடி யார்?

விடை: வால்ட் விட்மன் 

10 பாரதியார் நடத்திய ஆங்கில இதழ்கள் 

விடை: கர்மயோகி, பாலபாரத் 

11 பாரதியார் தொடங்கிய இதழ்

விடை: சக்கிரவர்தினி (1905)

12 பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய இதழ்

விடை: இந்தியா 

13 பாரதியார் துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ்?

விடை: சுதேசமித்திரன் 

14 பாரதியார் தோற்றுவித்த சங்கத்தின் பெயர்?

விடை: சென்னை ஜனசங்கம் 

15 பாரதியாரின் முக்கிய நண்பர்கள் 

விடை: பரலி நெல்லையப்பர், பாரதிதாசன் 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாரதியார் பாடல் வரிகள்

16 பாரதியாரின் முப்பெரும் படைப்புகள் 

விடை: கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்.

17 பாஞ்சாலி சப்தம் ஒரு ——

விடை: கண்ட காவியம் 

18 பாரதியாரின் பாடல்களை முதன் முதலில் மக்களுக்கு அறிகுகம் செய்தவர்.

விடை: பரலி சு. நெல்லையப்பர் 

19 பாரதியரின் பாடல்களை முதன் முதலில் வெளியிட்டவர்?

விடை: கிருஷ்ணசாமி ஐயர் 

20 பாரதியாரின் பாடல்களை பயன்படுத்த உரிமம் பெற்றிருந்தவர் யார்?

விடை: ஏ.வி. மெய்தப்பச் செட்டியார் 

21 பாரதியாரின் பாடல்களை நாட்டுடமை ஆகியவர்?

விடை: ஓமந்தூர் பி.இராமசாமி ரெட்டியார் 

22 புகழ்பெற்ற பாரதியின் புகைப்படத்தை வரைந்தவர் 

விடை: ஆர்ய என்ற பாஷ்யம் 

23 பாரதியாருக்கு மகாகவி என்ற பட்டம் அளித்தவர் யார்?

விடை: ராமசாமி ஐயங்கார் 

24 பாரதி சங்கத்தை தோற்றிவித்தவர் யார்?

விடை: கல்கி

25 பாரதியார் இறந்த ஆண்டு

விடை: 11.09.1921

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement