பூட்டான் நாட்டின் தேசிய பறவை | Bhutan National Bird in Tamil

Bhutan National Bird in Tamil

பூட்டான் நாட்டின் தேசிய பறவை எது? | Bhutan Natin Desiya Paravai in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் பூட்டான் நாட்டின் தேசிய பறவை எது என்று தெரிந்துக்கொள்ளலாம். நிறைய பொது அறிவு சம்மந்தமான விஷயங்களை தெரிந்துக்கொள்வதினால் எதிர்கால வாழ்க்கைக்கு பயன்படுவதோடு மட்டுமின்றி நம்முடைய மூளை வளர்ச்சிக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது. வாங்க பூட்டான் நாட்டின் தேசிய பறவை எது என்று தெரிந்துக்கொள்ளலாம்..

ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரம் எது?

பூட்டான் நாட்டின் தேசிய பறவை எது?

விடை: பூட்டான் நாட்டின் தேசிய பறவையாக இருப்பது காக்கை.

பூட்டான் நாட்டின் சில தகவல்கள்:

  • பூட்டான் நாடானது இமயமலையை சுற்றியுள்ள இந்தியாவிற்கும், திபெத்திற்கும் இடையில் நேபாளத்தின் கிழக்கு மற்றும் பங்களாதேஷ் வடக்கிற்கு செல்லும் ஒரு சிறிய நாடாக விளங்குகிறது.
  • பூட்டான் 14,800 சதுர மைல் அளவும், 38,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பூட்டான் தென் கரோலினாவின் பாதி அளவிற்கு அமைந்துள்ளது. நிலப்பரப்புகளில் பெரும்பாலும் மலைத்தொடர்களை கொண்டுள்ளது.
  • பூட்டான் நாட்டில் 2010 ஆம் ஆண்டிலிருந்து புகையிலை உற்பத்தி மற்றும் அதனை விற்பனை செய்வதை தடை செய்யப்பட்ட முதல் நாடாக விளங்குகிறது.
  • பூட்டான் தொலைக்காட்சியை ஏற்றுக்கொள்ள உலகிலையே கடைசி நாடாக இருந்தது.

பூட்டான் நாட்டின் ஆணைகள்:

  • பூட்டான் நாட்டில் உள்ள ஆண்கள் கட்டாயமாக முழங்கால் நீள ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும். பெண்கள் கணுக்கால் நீள ஆடைகளை மட்டுமே அணிந்துகொள்ள வேண்டும் என்ற சட்டம் இருந்தது.
  • பூட்டானில் வாழும் மக்கள் அரசாங்கத்திலிருந்து இலவச கல்வியை கற்றுக்கொள்கிறார்கள். அந்த நாட்டில் பௌத்த போதனைகள் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.
  • பெரும்பாலான பள்ளிகள் ஒரு ஆங்கில பாடத்திட்டத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. பூட்டான் நாட்டில் 10% பெண்களும், 30% ஆண்களும் மட்டுமே கல்வியறிவு பெறுகின்றனர்.
இந்தியாவின் தேசிய மரம் எது?

விளையாட்டு:

பூட்டான் நாட்டின் தேசிய விளையாட்டு வில்வத்தை, கூடைப்பந்து, கிரிக்கெட் இன்னும் பல விளையாட்டுகள் பிரபலம் ஆகி கொண்டிருக்கிறது.

மதம்:

பூட்டான் நாட்டின் மாநில மதமாக இருப்பது வஜ்ராயன புத்த மதமாகும்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil