தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது?

Biggest District in Tamilnadu

தமிழ்நாட்டில் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டம் எது? | Biggest District in Tamilnadu

பொது அறிவு (GK in Tamil) சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள நினைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.. தமிழ்நாட்டில் உள்ள முதல் 10 மிகப்பெரிய மாவட்டம் எது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம். நமது இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நமது தமிழ் நாட்டில் 14 மாவட்டங்களே இருந்தன, ஆனால் தற்பொழுது 38 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 38 மாவட்டங்களில் முதல் 10 மிக பெரிய மாவட்டங்கள் எது என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது?

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டம் அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவானது 6,266.64 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். மேலும் இந்த மாவட்டமானது தமிழ்நாட்டில் முதல் முதலாக இருந்த 14 மாவட்டங்களில் ஒன்றான மதுரை மாவட்டதில் இருந்து பிரிக்கப்பட்ட மாவட்டமாகும்.

திருவண்ணாமலை மாவட்டம்:

தமிழ் நாட்டில் மிகபெரிய மாவட்டங்கள் வரிசையில் திருவண்ணாமலை மாவட்டம் 02-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவானது 6,188 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த திருவண்ணாமலை மாவட்டம் செப்டம்பர் 30, 1989-ம் ஆண்டு வட ஆற்காட்டில் இருந்து பிரிக்கப்பட்ட மாவட்டமாகும்.

ஈரோடு மாவட்டம்:

ஈரோடு மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 5,722 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த ஈரோடு மாவட்டமானது ஆகஸ்ட் 31, 1979-ம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாவட்டமாகும். மேலும் இந்த ஈரோடு மாவட்டம் தமிழ் நாட்டில் மிகபெரிய மாவட்டங்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

சேலம் மாவட்டம்:

தமிழ் நாட்டில் மிகபெரிய மாவட்டங்கள் வரிசையில் சேலம் மாவட்டம் 04-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவானது 5,245 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த சேலம் மாவட்டம் 13 அசல் மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்கள் சேலம் மாவட்டத்தில் இருந்து தான் பிரிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம்:

தமிழ் நாட்டில் மிகபெரிய மாவட்டங்கள் வரிசையில் கிருஷ்ணகிரி மாவட்டம் 05-வது இடத்தை பிடித்துள்ளது. இதன் சதுர அளவு 5,143 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த கிருஷ்ணகிரி மாவட்டமானது பிப்ரவரி 09, 2004-ம் ஆண்டு தர்மபுரியில் இருந்து பிரிக்கப்பட்ட மாவட்டமாகும்.

உலகின் மிகப்பெரிய தீவு எது?

திருப்பூர் மாவட்டம்:

திருப்பூர் மாவட்டம் தமிழ் நாட்டில் மிகபெரிய மாவட்டங்கள் வரிசையில் 06-வது இடத்தை பெற்றுள்ளது. இதன் சதுர அளவு 5,186.34 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த திருப்பூர் மாவட்டமானது பிப்ரவரி 22, 2009-ம் ஆண்டு கோயம்புத்தூர் மற்றும் ஈரோட்டில் இருந்து பிரிக்கப்பட்ட மாவட்டமாகும்.

கோயம்புத்தூர் மாவட்டம்:

தமிழ் நாட்டில் மிகபெரிய மாவட்டங்கள் வரிசையில் கோயம்புத்தூர் மாவட்டம் 07-வது இடத்தை பிடித்துள்ளது. இதன் சதுர அளவு 4,723 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த  இந்த கோயம்புத்தூர் மாவட்டம் 13 அசல் மாவட்டங்களில் ஒன்றாகும்.

தூத்துக்குடி மாவட்டம்:

தமிழ் நாட்டில் மிகபெரிய மாவட்டங்கள் வரிசையில் தூத்துக்குடி மாவட்டம் 08-வது இடத்தை பெற்றுள்ளது. இதன் சதுர அளவு 4,707 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த தூத்துக்குடி மாவட்டமானது அக்டோபர் 20, 1986-ம் ஆண்டு திருநெல்வேலியில் இருந்து பிரிக்கப்பட்ட மாவட்டமாகும்.

புதுக்கோட்டை:

தமிழ் நாட்டில் மிகபெரிய மாவட்டங்கள் வரிசையில் 09-வது இடத்தை பெற்றுள்ளது. இதன் சதுர அளவு 4,663 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த புதுக்கோட்டை மாவட்டமானது ஜனவரி 14, 1974-ம் ஆண்டு தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் இருந்து பிரிக்கப்பட்ட மாவட்டமாகும்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் தமிழ் நாட்டில் மிகபெரிய மாவட்டங்கள் வரிசையில் 10-வது இடத்தை பெற்றுள்ளது. இதன் சதுர அளவு 4,497.77 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த தர்மபுரி மாவட்டமானது அக்டோபர் 02, 1965-ம் ஆண்டு சேலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் பெயர் என்ன?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil