தமிழ்நாட்டின் மிகப்பெரிய நூலகம் எது?

Advertisement

Biggest library in tamil nadu

‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ என்பது முதுமொழி. நம் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்குப் பெரிதும் பயன்படுவது நூலகம். நூலகம் என்பது, பொது அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது தனி நபர்களால் உருவாக்கப்பட்டுப் பேணப்படுகின்ற தகவல் மூலங்களின் அல்லது சேவைகளின் ஒரு சேமிப்பு ஆகும். அறிவை வளர்க்கும் புத்தகங்கள் அனைத்தும் ஒன்று கூடும் இடம் நூலகம் ஆகும். புத்தகங்களை தினமும் வசிப்பவர்களுக்கு மிகவும் பிடித்த இடமும் நூலகம் தான். மன அமைதி பெற விரும்புபவர்கள் நூலகத்திற்கு சென்று உங்களுக்கு பிடித்த புத்தகத்தை வாசித்தாலே ஒரு மன அமைதி கிடைக்கும். சரி இன்றைய பதிவில் தமிழ்நாட்டில் மிக பெரிய நூலகம் எது என்று தெரிந்துகொள்வோம் வாங்க.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய நூலகம்:

தமிழ்நாட்டின் மிக பெரிய நூலகமாக அழைக்கப்படுவது அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒற்றைக் காலோடு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் யார் தெரியுமா..?

அண்ணா நூற்றாண்டு நூலகம் எங்கு உள்ளது?

அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழ்நாட்டில் உள்ளது. இது சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில் உள்ளது. இது ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் ஆகும். இது எட்டு அடுக்குகளைக் கொண்டது.

மேலும் சில..

அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழக மக்களால் அன்புடன் “அண்ணா” என்றழைக்கப்படும் முன்னாள் தமிழக முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் 102-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, 2010-ஆம் ஆண்டு செப்டெம்பர் 15-ஆம் தேதியன்று அந்நாள் தமிழக முதலமைச்சர் டாக்டர். மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

நூல்கள் மற்றும் கற்பதில் அண்ணா கொண்ட பற்று மற்றும் தீராத ஆர்வத்தை மரியாதை செய்யும் பொருட்டும், அவரது நூற்றாண்டை நினைவுறுத்தும் விதமாகவும் “அண்ணா நூற்றாண்டு நூலகம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

3.75 லட்சம் சதுரடி பரப்பில் அமைந்துள்ள இந்த நூலகம் தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டது. தற்சமயம் பல்வேறு துறை சார்ந்த 5 லட்சம் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நூலகம், மிகவும் குறுகிய காலத்தில் 12 லட்சம் புத்தகங்களாக அதிகரிக்கும் நோக்கத்துடன் இயங்குகிறது. இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அறிவியல் பொது அறிவு வினா விடை

அண்ணா நூற்றாண்டு நூலகம் 8 தளங்களுடன் பிரம்மாண்டமாகச் செயல்படுகிறது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையுடன் தமிழகத்திற்கு அழகு சேர்க்கிறது. மேலும் இந்நூலகம் சர்வதேச தரத்துடன் அமைந்துள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்துத் தரப்பு மக்களும் வருகை தருகிறார்கள். இந்நூலகத்தின் ஒவ்வொரு தளமும் தனிச் சிறப்புடன் விளங்குகிறது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement