அரசு தேர்வுகளில் கேட்கப்படும் உறவுமுறை கேள்வி பதில்கள் | Blood Relation Questions in Tamil

Blood Relation Questions in Tamil

Blood Relation Questions in Tamil Language

அனைவருக்குமே பொது தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று அரசு வேலையில் அமர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பல வகையான கேள்வி பதில்களை படித்திருப்போம். படிக்கும் போது என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதை தெரிந்து வைத்து கொண்டு படிப்பது நல்லது. அந்த வகையில் பெரும்பாலான பொது தேர்வுகளில் உறவுமுறை சம்மந்தமான கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டு வருகின்றன. நாம் இந்த பதிவில் அரசு தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உறவுமுறை (Blood Relation Questions in Tamil) சம்மந்தமான கேள்விகளை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Blood Relation Questions in Tamil:

  1. ஒருவரை பார்த்து ஒரு பெண் பின்வருமாறு கூறுகிறாள், இவர் என்னுடைய அம்மாவின் அப்பாவுடைய ஒரே மகளின் ஒரே மகன் எனில் அந்த பெண்ணிற்கும் அந்த நபருக்கும் இடையே என்ன உறவு?

A) சகோதரி

B) அக்கா மகள்

C) மனைவி

D) மகள்

விடை: A) சகோதரி

2. A என்பவர் ஒரு பெண்ணிடம் உன் தாயாரின் கணவரின் தங்கை எனக்கு அத்தை என கூறினார். A விற்கு அப்பெண் என்ன உறவு?

A. மகள்

B. தாயார்

C. தங்கை

D. அத்தை

விடை: C. தங்கை

3. ஒரு மனிதனை பார்த்து ஒரு பெண் அவர் என் சகோதரியின் தாயின் ஒரே மகனின் மகன் என்றார், எனில் பெண்ணின் சகோதரர் அந்த ஆணுடன் எவ்வாறு தொடர்புடையவர் 

A) தந்தை

B) சகோதரி

C) மனைவி

D) மகள்

விடை: A) தந்தை 

Blood Relation Questions in Tamil Language:

4. ஒரு பெண்ணை பார்த்து கமல் கூறுகிறார், என்னுடைய மனைவியின் தாத்தாவின் ஒரே குழந்தையின் ஒரே மகள் எனில் கமலுக்கு அந்த பெண் என்ன உறவு

A) தந்தை

B) மகள்

C) மனைவி

D) கணவன்

விடை: C) மனைவி

5. ஒரு நபரை அறிமுகப்படுத்தி ஒரு பெண், அவர் என் தந்தையின் தாயின் சகோதரனின் மகன் என்றார். அந்த நபர் அந்த பெண்ணுடன் எவ்வாறு தொடர்புடையவர்

A ) மாமா

B) சகோதரர்

C) உறவினரின் மகன்

D) உடன் பிறந்தவரின் மகன்

விடை: A ) மாமா

6. ஒரு பையனை சுட்டிக்காட்டி, சுவேதா” அவர் என் தாத்தாவின் ஒரே குழந்தையின் ஒரே மகன் என்று சொல்கிறாள், சுவேதா அந்த பையனுக்கு என்ன உறவு

A) அம்மா

B) தீர்மானிக்க முடியாது

C) அத்தை

D) சகோதரி

விடை: D) சகோதரி

TNPSC Blood Relation Questions in Tamil:

7. ஒரு மனிதனை பார்த்து ஒரு பெண், அவர் என் சகோதரியின் தாயின் ஒரே மகனின் மகன் என்றார், எனில் பெண்ணின் சகோதரர் அந்த ஆணுடன் எவ்வாறு தொடர்புடையவர் 

A) தந்தை

B) சகோதரி

C) மனைவி

D) மகள்

விடை: A) தந்தை

8. மகேஷ் மற்றும் குமரேஷை சுமனா தனது மகனின் மாமாவின் மகன்களாக அறிமுகப்படுத்துகிறார் எனில் அந்த இருவரும் சுமனாவிற்கு என்ன உறவு முறை?

A) நண்பர்கள்

B) அண்ணனின் மகன்கள்

C) அத்தான்/ அத்தான்கள்

D) உடன் பிறந்தவரின் மகள்கள்

விடை: B) அண்ணனின் மகன்கள்

பொது அறிவு வினா விடைகள்

 

9. ராம், கீதாவை சுட்டிக்காட்டி, அவரது சகோதரியின் தாய் என் தந்தையின் தாயின் மருமகள் என்று கூறினார். கீதாவின் தாயார் ராமுவுடன் எவ்வாறு தொடர்புடையவர் 

A) தாய்

B) சகோதரி

C) அத்தை

D) மருமகள்

விடை: A) தாய்

10. ஒரு பெண்ணை ராஜ் என்பவர், அவளுடைய அம்மா எனது மாமியாருக்கு ஒரே மகள் என அறிமுகப்படுத்துகிறார், எனில் அந்த பெண்ணிற்கு ராஜ் என்ன உறவு 

A. மாமா

B. தந்தை

C. சகோதரர்

D. கணவர்

விடை: B. தந்தை

TNPSC தேர்வுக்கு பயன்படும் கேள்வி, பதில்கள்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil