TNPSC Blood Relation Questions in Tamil
இந்த பதிவை பார்க்க வந்திருக்கும் உறவுகளுக்கு நன்றி.. இன்று நாம் அனைத்து வகையான அரசு தேர்வுகளிலும் குறைந்து இரண்டு அல்லது மூன்று மதிப்பெண் வரை கேட்கப்படும் இரத்த உறவுகள் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்படுகின்ற. ஆக இன்று நாம் blood relation questions-ஐ தமிழில் தெரிந்துகொள்ள போகிறோம்.
நீங்கள் அரசு தேர்வு மற்றும் வங்கி தேர்வுகளுக்கு காத்திருந்து பயிற்சிகளை மேற்கொண்டு இருப்பவர்களாக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். சரி வாங்க இரத்த உறவு முறை வினா விடைகளை இப்பொழுது நாம் ஒவ்வொன்றாக படித்து அதற்கான விடையை தெரிந்துகொள்வோம்.
உறவு முறை பொது அறிவு வினா விடைகள் – Blood Relation Questions with Answer in Tamil
1. சிவன்யாவை அறிமுகம் செய்து வருண் கூறினார் “அவள் என் அப்பாவின் ஒரே மகனின் மனைவி” எனில் சிவன்யா அவரது அம்மாவிற்கு என்ன உறவு?
- மகள்
- மருமகள்
- சகோதரி மகள்
- மைத்துனி
விடை: B. மருமகள்
2. ஒரு மனிதனை அறிமுகப்படுத்தி ஒருத்தி கூறினாள் “என் தாயின் தாய்க்கு அவர் ஒரு மகன்”. அந்த ஆணிற்கும் பெண்ணிற்கும் உள்ள உறவு வகை எது?
- சகோதரியின் மகள்
- தாய்
- சகோதரி
- அத்தை
விடை: A. சகோதரியின் மகள்
3. ஒரு ஆணைக் காட்டி பெண் கூறுகிறார் “எனது கணவருடைய மனைவியின் மகளுடைய சகோதரன்” அந்த பெண்ணிற்கு ஆண் என்ன உறவு?
- மகன்
- கணவன்
- மைத்துனர்
- மருமகன்
விடை: A. மகன்
4. ஒரு பெண்ணைப் பார்த்து ஆண் கூறுவதாவது “நீ எனது தாயின் ஒரே மகனுடைய மனைவி” எனில் அந்த ஆணுக்கு பெண் என்ன உறவு?
- சகோதரி
- அத்தை
- மகள்
- மனைவி
விடை: D. மனைவி
5. ஒரு ஆணைப் பார்த்து பெண் கூறுகிறாள் “அந்த ஆண் யாரென்றால் எனது அம்மாவினுடைய ஒரே மகளுடைய மகன்” அந்த ஆணிற்கு பெண் என்ன உறவு?
- தாய்
- மகன்
- சகோதரி
- மகள்
விடை: A. தாய்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அரசு தேர்வுகளில் கேட்கப்படும் உறவுமுறை கேள்வி பதில்கள்
6. ஒரு பெண்ணை பார்த்து ஒரு ஆண் சொன்னான். அவள் என் தாயாரின் ஒரே மகள். அந்தப் பெண் அவருக்கு எந்த முறையில் உறவு?
- பாட்டி
- அத்தை
- தாய்
- சகோதரி
விடை: D. சகோதரி
7. ஒரு பெண்ணைப் பார்த்து ஆண் கூறுகின்றான் “அந்தப் பெண் யாரெனில் எனது தந்தையுடைய ஒரே மகனுடைய சகோதரி” அந்த ஆணின் தந்தைக்கு பெண் என்ன உறவு?
- மகள்
- மனைவி
- சகோதரி
- தாய்
விடை: A. மகள்
8. ஒரு ஆணை அறிமுகப்படுத்தி ஒரு பெண் கூறுகிறாள் “அவர் யாரென்றால் எனது அம்மாவின் அம்மாவுடைய ஒரே மகன்” அந்த ஆணிற்கு பெண் என்ன உறவு?
- தாய்
- அத்தை
- சகோதரி
- உடன்பிறந்தோர் மகள்
விடை: D. உடன்பிறந்தோர் மகள்
9. ஒரு மனிதனைப் பார்த்து முருகன் இவ்வாறு கூறினார். “அவர் என் சகோதரியின் சகோதரனின் தந்தையின் ஒரே மகன்” எனில் முருகன் கூறிய அவர் யார்?
- மாமா(அ)சித்தப்பா
- தந்தை
- மாமா(அ)பெரியப்பா
- அவரே
விடை: D. அவரே
10. ஒரு பெண் ஒரு ஆணிடம் “நீங்கள் என்னுடைய தாத்தாவினுடைய ஒரே மகனின் மகன்” என்று கூறினாள் அந்த ஆணுக்கு பெண் என்ன உறவு?
- மருமகள்
- சகோதரி(அ)மனைவி
- தாய்
- சகோதரி (அ) மருமகள்
விடை: D. சகோதரி (அ) மருமகள்
11. L என்பவர் H இன் மகள். H என்பவர் K ஐ மணந்துள்ளார். K என்பவர் I இன் தாய். I என்பவர் J இன் தந்தை. J என்பவர் M ஐ மணந்துள்ளார். M என்பவர் N இன் சகோதரி.
- சகோதரர் மகன்
- மகளின் மகன்
- மகனின் மகன்
- மகன்
விடை: மகனின் மகன்
12. A என்பவர் Bயின் சகோதரி C என்பவர் B யின் மகன். D என்பவர் Cயின் மகள் எனில் D என்பவர் Aயின் [03/07/2019]
A. பேத்தி
B. பேரன்
C. தாய்
D. தந்தை
விடை: பேத்தி
13. ரிட்டா மேடையில் ஒரு மனிதனை சுட்டிகாட்டி என்னுடைய கணவனுடைய மனைவியின் மகளுடைய சகோதரன் என கூறிகிறான். மேடையிலுள்ள அந்த மனிதன் ரீட்டாவிற்கு எப்படி உறவாகும்?
A. மகன்
B. கணவன்
C. அத்தை/மாமன்/சிற்றப்பன்/பெரியப்பன் மகன்
D. உடன்பிறந்தார் மகன்
விடை: மகன்
14. ஒருவர் ஒரு பென்னைப் பார்த்து சொன்னார், இவள் என் தகப்பனாரின் பேரனின் மனைவி அந்த பெண் அந்த நபருக்கு எந்த முறையில் உறவு?
A. சகோதரியின் மகள்
B. மைத்துனி
C. மருமகள்
D. மகன்
விடை: மருமகள்
15. ஒரு பெண்ணை ராஜ் என்பவர், “அவளுடைய அம்மா எனது மாமியாருக்கு ஒரே மகள்” அறிமுகப்படுத்துகிறார். எனில் அப்பெண்ணிற்கு ராஜ் என்ன உறவு
A. மாமா
B. தந்தை
C. சகோதரர்
D. கணவர்
விடை: தந்தை
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |